இலங்கைச் செய்திகள்


நாடு முழுவதும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்

நினைவேந்தல் தொடர்பில் யாழ்ப்பாண நீதிமன்றத்தின் உத்தரவுகள்

சுகாதார அறிவுறுத்தல்களை பின்பற்றி உணர்வெழுச்சியுடன் நடைபெற்ற முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்

அநீதியான சர்வதேச அமைப்பிலிருந்து விலக தயங்கமாட்டோம்

இலங்கையின் மூத்த முஸ்லிம் கல்விமான்களில் ஒருவர் எம்.ஏ.எம். ஷுக்ரி

கிழக்கில் தொல்பொருள் முக்கிய தலங்களை பாதுகாக்க ஜனாதிபதி செயலணி

மேலும் 1.1 மில். டொலரை பரிமாறுமாறு ஜனாதிபதி கோரிக்கை




நாடு முழுவதும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்




நாடு முழுவதும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் (PHOTO)-முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் (PHOTO)-Mullivaaikkaal Remembrance Day

முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில்
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வின் பிரதான நிகழ்வு இன்று (18) முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் சுகாதார நடைமுறைகள் மற்றும் சமூக இடைவெளியினைப் பின்பற்றி உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது.



முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் (PHOTO) Mullivaaikkaal Remembrance Day
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் (PHOTO) Mullivaaikkaal Remembrance Day
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் (PHOTO) Mullivaaikkaal Remembrance Day
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் (PHOTO) Mullivaaikkaal Remembrance Day
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் (PHOTO) Mullivaaikkaal Remembrance Day
(முள்ளியவளை நிருபர் - விஜய் வதனன், பரந்தன் குறூப்நிருபர் - யது பாஸ்கரன், யாழ்ப்பாணம் குறூப் நிருபர் - சுமித்தி தங்கராசா)

யாழ்ப்பாணம், செம்மணி பகுதியில்
வடமாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் உள்ளிடவர்கள், முல்லைத்தீவு முள்ளிவாய்க்காலில் நடைபெறவிருந்த முள்ளிவாய்க்கால் படுகொலையின் 11ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வில் கலந்து கொள்வதற்காக, யாழ்ப்பாணத்திலிருந்து இருந்து இன்று (18) காலை முல்லைத்தீவு செல்வதற்காக யாழ். மன்னார் வீதியூடாக பயணித்த போது , சங்குப்பிட்டி பாலத்திற்கு சற்று தொலைவில் உள்ள கேரதீவு இராணுவ சோதனை சாவடியில் வழிமறிக்கப்பட்டு திருப்பி அனுப்பப்பட்டனர்.

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் (PHOTO) Mullivaaikkaal Remembrance Day
அந்நிலையில் அவர்கள் யாழ்ப்பாணம் திரும்பி யாழ்.செம்மணி பகுதியில் சுடரேற்றி அஞ்சலி செலுத்த முற்பட்ட போது , அங்கு வந்த யாழ்ப்பாணம் தலைமையகப் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் பிரசாத் பெர்னாண்டோ தலைமையிலான குழுவினர், நீதிமன்ற தடையுத்தரவு உள்ளதாக கூறி நிகழ்வினை தடை செய்தனர்.
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் (PHOTO) Mullivaaikkaal Remembrance Day
அதன் போது , நீதிமன்ற உத்தரவை மதித்து நிகழ்வை நடத்தவில்லை எனத் தெரிவித்து விக்னேஸ்வரன், அங்கிருந்து புறப்பட்டார்.
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் (PHOTO) Mullivaaikkaal Remembrance Day
அவர் புறப்பட்டு ஒரு சில நிமிடத்தில் வடமாகாண சபை முன்னாள் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் , க.அருந்தவபாலன் உள்ளிட்ட குழுவினர் பொலிஸாரின் தடையையும் மீறி சுடரேற்றி அஞ்சலி செலுத்தினர்.
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் (PHOTO) Mullivaaikkaal Remembrance Day
யாழ்ப்பாணம் குறூப் நிருபர் - சுமித்தி தங்கராசா, யாழ். விசேட நிருபர்) - நன்றி தினகரன் 











நினைவேந்தல் தொடர்பில் யாழ்ப்பாண நீதிமன்றத்தின் உத்தரவுகள்




நினைவேந்தல் தொடர்பில் யாழ்ப்பாண நீதிமன்றத்தின் உத்தரவுகள்-Gajendrakumar Quarantine Order Dismissed
- கஜேந்திரகுமார் உள்ளிட்ட 11 பேரின் தனிமைப்படுத்தல் உத்தரவு இரத்து
- தனிமைப்படுத்தல் விதிகளை பேணி அஞ்சலி நிகழ்வுக்கும் அனுமதி

தமிழ் தேசிய மக்கள் முன்னணியை சேர்ந்த 11 பேரையும் வீடுகளில் தனிமைப்படுத்த வழங்கிய கட்டளையை யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றம் இன்று மீளப்பெற்றது.   “தனிமைப்படுத்தலுக்கு உள்படுத்துமாறு கோரப்பட்டுள்ள 11 சந்தேக நபர்களுக்கும் நோய் அறிகுறிகள் உள்ளதாக மருத்துவ அறிக்கையை பொலிஸார் சமர்ப்பிக்கவில்லை. அதனால் நோய் அறிகுறி இல்லாதவர்களை வீடுகளில் தனிமைப்படுத்தினால் அவர்கள் மன உளைச்சலுக்கும் வேறு பல நோய்களுக்கும் உள்ளாகக் கூடும். அதனால் 11 பேரையும் தனிமைப்படுத்தும் கட்டளை மன்றினால் மீளப்பெறப்படுகிறது” என்று நீதிவான் ஏ. பீற்றர் போல், மீளாய்வு விண்ணப்பம் மீது கட்டளை வழங்கினார்.
நினைவேந்தல் தொடர்பில் யாழ்ப்பாண நீதிமன்றத்தின் உத்தரவுகள்-Gajendrakumar Quarantine Order Dismissed
தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் சார்பில் முன்னிலையான மூத்த சட்டத்தரணி அன்ரன் புனிதநாயகம் தலைமையிலான சட்டத்தரணிகளும் பொலிஸ் தரப்பில் யாழ்ப்பாணம் மூத்த பொலிஸ் அத்தியட்சகர் தலைமையில் பொலிஸ் அத்தியட்சகர், யாழ்ப்பாணம் தலைமையகப் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஆகியோர் முன்வைத்த நீண்ட சமர்பணத்தினை முன்வைதனர்.
அதன்பின்னர் இந்தக் கட்டளை வழங்கப்பட்டது.
தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர், செயலாளர் உட்பட பதினொரு பேரை எதிர்வரும் 14 நாள்களுக்கு வீடுகளில் தனிமைப்படுத்தி 14 நாள்களின் பின்னர் நீதிமன்றுக்கு அறிக்கை சமர்ப்பிக்குமாறு ஐந்து பிரதேச சுகாதார மருத்துவ அதிகாரிகளுக்கு யாழ்ப்பாணம் நீதவான் ஏ. பீற்றர் போல் இன்றையதினம் இவ்வாறு கட்டளையிட்டிருந்தார்.
யாழ்ப்பாணத்தில் கடந்த தினங்களில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகளை முன்னெடுத்த தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் , செயலாளர் உள்ளிட்ட 11 பேரினது பெயர்களை நீதிமன்றில் சமர்ப்பித்த யாழ்ப்பாணம் தலைமை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரசாத் பெர்னான்டோ , தனிமைப்படுத்தல் சட்டத்தினை மீறினார்கள் என நீதிமன்றில் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை அறிக்கை சமர்ப்பித்தார்.
குறித்த அறிக்கையை ஆராய்ந்த நீதிவான் , 11 பேரையும் அவர்கள் வீடுகளில் 14 நாள்கள் தனிமைப்படுத்தி அவர்களை கண்காணித்து 14 நாள்களின் பின்னர் நீதிமன்றுக்கு அறிவிக்குமாறு பிரதேச மருத்துவ அதிகாரிகளுக்கு நீதிவான் கட்டளையிட்டிருந்தார்.
இந்நிலையில் குறித்த வழக்கை மீள அழைக்குமாறு தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் சார்பில் நீதிமன்றில் நகர்த்தல் பத்திரம் அணைக்கப்பட்டு மன்றிடம் விண்ணப்பம் விடுத்தனர்.
அதனடிப்படையில் வழக்கு திறந்த மன்றில் நீதவான் ஏ. பீற்றர் போல் முன்னிலையில் அழைக்கப்பட்டது.
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகளுக்கு தடை கோரி பொலிஸார் தாக்கல் செய்த விண்ணப்பத்தை நிராகரித்த யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிவான் ஏ.பீற்றர் போல், தனிமைப்படுத்தல் சட்டத்தை மதித்து நிகழ்வுகளை நடத்த அனுமதியளித்தார்.
அத்தோடு பொலிஸாரின் விண்ணப்பத்தை வரும் 30ஆம் திகதிவரை நீதிவான் ஒத்திவைத்தார்.
"யாழ்ப்பாணத்தில் தனிமைப்படுத்தல் சட்டத்தை மதிக்காது நபர்களை ஒன்றுதிரட்டி அஞ்சலி நிகழ்வுகள் நடத்தப்படுகின்றன.
தனிமைப்படுத்தல் சட்டத்துக்குட்பட்டு அந்த நிகழ்வுகளை நடத்தத் தடை உத்தரவு வழங்கவேண்டும்" என்று யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் யாழ்ப்பாணம் தலைமையகப் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் பிரசாத் பெனாண்டோ விண்ணப்பம் செய்தார்.
இந்த விண்ணப்பத்தில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், பொதுச் செயலாளர், சட்டத்தரணிகள் நடராசா காண்டீபன், விஸ்வலிங்கம் மணிவண்ணன், கனகரட்ணம் சுகாஷ் மற்றும் வரதராசா பார்த்திபன், வாசுகி, கிருபாகரன், தனுஷன், விஷ்ணுகாந்த் மற்றும் தமிழ்மதி ஆகிய 11 பேரின் பெயர்கள் இடப்பட்டு அவர்கள் நிகழ்வை நடத்தத் தடை உத்தரவு வழங்குமாறு கோரப்பட்டது.
யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிவான் ஏ.பீற்றர் போல் முன்னிலையில் விண்ணப்பத்தை முன்வைத்து பொரிஸார் சமர்ப்பணம் செய்தனர்.விண்ணப்பத்தில் குறிப்பிடப்பட்ட 11 பேரும் தனிமைப்படுத்தல் சட்டத்தை மதிக்காது நபர்களை ஒன்றுதிரட்டி அஞ்சலி நிகழ்வுகளை நடத்துகின்றனர் என்று காணொலி பதிவுகளை பொலிஸார் சமர்ப்பித்தனர்.
நாம் அவர்களை சமூக இடைவெளியைப் பேணுமாறு கேட்டுக்கொண்டால், எம்மை நீதிமன்றம் செல்லுமாறும் தாம் நீதிமன்றில் எதிர்கொள்வதாகவும் தெரிவிக்கின்றனர்.
எனவே தனிமைப்படுத்தல் சட்டத்துக்குட்பட்டு நாளைய தினம் ஒன்றுதிரண்டு அஞ்சலி நிகழ்வுகளை நடத்த தடை உத்தரவிடவேண்டும்" என்று பொலிஸார் சமர்ப்பணம் செய்தனர்.
பொலிஸாரின் சமர்ப்பணத்தை ஆராய்ந்த நீதிவான், தனிமைப்படுத்தல் சட்டத்தை கடைபிடித்து அஞ்சலி நிகழ்வுகளை நடத்த அனுமதியளிக்க உத்தரவிட்டார்.
அத்துடன், பொலிஸாரின் விண்ணப்பத்தை வரும் 30ஆம் திகதிவரை ஒத்திவைத்தார்.
(யாழ்ப்பாணம் குறூப் நிருபர் - சுமித்த தங்கராசா, யாழ்ப்பாணம் நிருபர்)  நன்றி தினகரன் 










சுகாதார அறிவுறுத்தல்களை பின்பற்றி உணர்வெழுச்சியுடன் நடைபெற்ற முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்




முள்ளிவாய்க்காலில் உயிரிழந்தவர்களின் 11ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் நேற்றைய தினம் கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியிலும் சுகாதார முறைகளை பின்பற்றி மிக உணர்வெழுச்சியாக அனுஷ்டிக்கப்பட்டது. தமது உறவுகளை இழந்த உறவினர்கள் கதறியழுத சத்தம் கேட்டு நந்திக்கடலும் மௌனமாகி நின்று அஞ்சலி செலுத்தியது.
அஞ்சலி நிகழ்வானது நந்திக்கடல் கரையோரத்தில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் மைதானத்தில் காலை 10.30 மணிக்கு ஆரம்பமாகியது. முதலில் அக வணக்கம் செலுத்தப்பட்டு முள்ளிவாய்க்காலில் தனது கணவன் மற்றும் பிள்ளையை இழந்த இலட்சுமணன் பரமேஸ்வரி என்ற தாயார் பொதுச்சுடர் ஏற்றி அஞ்சலியை ஆரம்பித்து வைத்தார். அதனைத் தொடர்ந்து ஏனைய  உறவுகளுக்கான சுடர்கள்  ஏற்றப்பட்டு மலரஞ்சலி செலுத்தப்பட்டதோடு முள்ளிவாய்க்கால் நினைவு பிரகடனம் வெளியிடப்பட்டது.
நாட்டில் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ள நிலைமையில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள் சுகாதார நடைமுறைக்கு அமைவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. முக கவசங்கள், கை கழுவி செல்வதற்கான ஏற்பாடுகள் மற்றும் சமூக இடைவெளிகளை பேணக்கூடியவாறு நாட்டப்பட்டிருந்த சுடர்கள் என சுகாதார விதிமுறைகளை மீறாத வகையில் நிகழ்வு ஏற்பாடு மேற்கொள்ளப்பட்டிருந்தது.
பொது சுகாதார பரிசோதகர்கள், சுகாதாரப் பிரிவினர் நினைவேந்தல் இடம்பெறும் இடத்துக்கு  வருகை தந்து மேற்கொள்ளப்பட்டுள்ள சுகாதார நடைமுறைகளை பார்வையிட்டு அவை உரிய முறையில் இருப்பதாக உறுதிப்படுத்தினர்.
சுமார் 300க்கும் மேற்பட்ட மக்கள் இந்த நினைவேந்தல் நிகழ்வில் பங்கெடுத்திருந்தனர். மேலும் நினைவேந்தலுக்காக வருகைதந்த அரசியல்வாதிகள், பொதுமக்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் பரந்தன், -முல்லைத்தீவு வீதியில் பல இடங்களில் மறிக்கப்பட்டு திருப்பி அனுப்பப்பட்டிருந்தனர்.
அஞ்சலி நிகழ்வில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான சிவஞானம் ஸ்ரீதரன், சாள்ஸ் நிர்மலநாதன், முன்னாள் வடக்கு மாகாண சபை அமைச்சர்களான அனந்தி சசிதரன், கந்தையா சிவநேசன், மாகாண சபை உறுப்பினர்களான துரைராசா ரவிகரன், ஆண்டியையா புவனேஸ்வரன், முன்னாள் யாழ். மாநகர மேயர் இம்மானுவேல் ஆர்னோல்ட் மற்றும் ஜனநாயக மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவர்  பிரபா கணேசன்  உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டனர்.
மேலும் முன்னாள் வடக்கு மாகாண சபை உறுப்பினர் து.ரவிகரன் நந்திக்கடலில்    மலர்தூவி சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்தினார். அதேபோன்று யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் அமைந்துள்ள முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபியில் உயிரிழந்தவர்களுக்கு சுடரேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது.
தமிழ் விருட்சம் அமைப்பு, கருமாரி அம்மன் ஆலய பரிபாலனசபை மற்றும் அந்தணர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் ஆத்மா சாந்திப்பூஜை வழிபாடுகள் வவுனியா கருமாரி அம்மன் ஆலயத்தில் நடைபெற்றன.
தமிழ்த் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் ஏற்பாட்டில்  உயிர்நீத்த மக்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. தமிழ்த் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் தலைவர் வி.எஸ்.சிவகரன் தலைமையில் மன்னாரில் உள்ள அலுவலகத்தில் நடைபெற்றது.
முல்லைத்தீவு விசேட, மாங்குளம் குறூப்,வவுனியா, வவுனியா விசேட, யாழ்.விசேட, பருத்தித்துறை விசேட, மன்னார் குறூப் நிருபர்கள்  நன்றி தினகரன் 










அநீதியான சர்வதேச அமைப்பிலிருந்து விலக தயங்கமாட்டோம்




அநீதியான சர்வதேச அமைப்பிலிருந்து விலக தயங்கமாட்டோம்-National War Heroes Day-President Gotabaya Rajapaksa Speech Tamil

- படைவீரர்கள் தேவையற்ற அழுத்தத்திற்கு உள்ளாக ஒருபோதும் இடமளிக்கப் போவதில்லை
- உயிர் தியாகங்கள் செய்து பாதுகாத்த நாட்டை அனைவரும் கண்ணியமாக வாழக்கூடிய சுபீட்சமான தேசமாக மாற்றுவதற்கு முழுமையான அர்ப்பணிப்பு
நாட்டுக்கு அநீதியான வகையில் ஏதேனும் ஒரு சர்வதேச நிறுவனம் அல்லது அமைப்பு தொடர்ந்தும் செயற்படுமாக இருந்தால் அந்த நிறுவனத்தின் அல்லது அமைப்பின் உறுப்புரிமையிலிருந்து இலங்கையை விலக்கிக்கொள்ள ஒருபோதும் பின்னிற்கப் போவதில்லை என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்தார்.
அநீதியான சர்வதேச அமைப்பிலிருந்து விலக தயங்கமாட்டோம்-National War Heroes Day-President Gotabaya Rajapaksa Speech Tamil
நாட்டுக்காக பெரும் அர்ப்பணிப்புகளை செய்த படைவீரர்கள் தேவையற்ற அழுத்தத்திற்கு உள்ளாக தான் ஒருபோதும் இடமளிக்கப் போவதில்லை என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் தெரிவித்தார்.
அநீதியான சர்வதேச அமைப்பிலிருந்து விலக தயங்கமாட்டோம்-National War Heroes Day-President Gotabaya Rajapaksa Speech Tamil
பத்தரமுல்லை பாராளுமன்ற கட்டடத்தொகுதிக்கு அருகில் உள்ள படைவீரர்கள் நினைவுத்தூபி வளாகத்தில் இன்று (19) பிற்பகல் இடம்பெற்ற தேசிய படைவீரர்கள் நினைவு தின விழாவில் உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.
அநீதியான சர்வதேச அமைப்பிலிருந்து விலக தயங்கமாட்டோம்-National War Heroes Day-President Gotabaya Rajapaksa Speech Tamil
பயங்கரவாதம் தோற்கடிக்கப்பட்டு 11வருடங்கள் நிறைவடைவதை முன்னிட்டு படைவீரர்களுக்கு தேசத்தின் கௌரவத்தை தெரிவித்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் நினைவு தின விழா மிகச் சிறப்பாக இடம்பெற்றது.
உலகின் பலம்வாய்ந்த நாடுகளின் தலைவர்கள் கூட தமது நாட்டின் படைவீரர்களுக்கு எதிராக எந்தவொரு நடவடிக்கையையும் எடுப்பதற்கு அனுமதிக்கப்போவதில்லை என தெரிவித்திருக்கின்ற சூழ்நிலையில், எம்மைப் போன்ற ஒரு சிறிய நாட்டில் இத்தகைய அர்ப்பணிப்புகளை செய்துள்ள படைவீரர்களை பாதுகாப்பதற்கு தான் அர்ப்பணிப்புடன் உள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
அநீதியான சர்வதேச அமைப்பிலிருந்து விலக தயங்கமாட்டோம்-National War Heroes Day-President Gotabaya Rajapaksa Speech Tamil
இராணுவத்தில் 20 வருடங்கள் செயற்திறமான சேவையில் ஈடுபட்ட அதிகாரி என்ற வகையிலும் பின்னர் 10 வருடங்கள் பாதுகாப்பு செயலாளராகவும், ஒரு பிரஜை என்ற வகையிலும் எமது படைவீரர்கள் செய்த அர்ப்பணிப்புகளை நான் நன்கறிவேன் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.
யுத்தத்தின் வலிகள் தனக்கு நன்றாக தெரியும் என்பதால் பெரும் தியாகங்களை செய்து அனைத்து இலங்கையர்களுக்கும் சமாதானத்தை ஏற்படுத்தித்தந்த எமது படைவீரர்களின் கௌரவத்திற்கும் நற்பெயருக்கும் இழுக்கை ஏற்படுத்துவதற்கு மேற்கொள்ளப்படும் முயற்சிகளுக்கு தான் ஒரு போதும் இடமளிக்கப் போவதில்லை என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.
அநீதியான சர்வதேச அமைப்பிலிருந்து விலக தயங்கமாட்டோம்-National War Heroes Day-President Gotabaya Rajapaksa Speech Tamil
படைவீரர்கள் உயிர் தியாகங்கள் செய்து பாதுகாத்த இந்த நாட்டை அனைத்து பிரஜைகளும் சமாதானமாகவும் மகிழ்ச்சியாகவும் கண்ணியமாகவும் வாழக்கூடிய சுபீட்சமான தேசமாக மாற்றுவது படைவீரர்களுக்கு செய்யும் உயர்ந்த கௌரவமாகும் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.
ரணவிரு சேவா அதிகார சபையின் தலைவர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் நந்தன சேனதீர வரவேற்புரை நிகழ்த்தினார். ஜனாதிபதி, பிரதமர், முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முப்படைகளின் தலைவர்கள் உள்ளிட்டோர் படைவீரர்கள் நினைவுத் தூபிக்கு மலரஞ்சலி செலுத்தினர்.
அநீதியான சர்வதேச அமைப்பிலிருந்து விலக தயங்கமாட்டோம்-National War Heroes Day-President Gotabaya Rajapaksa Speech Tamil
நினைவு தின விழா முழுமையாக சுகாதார அமைச்சின் அறிவுறுத்தல்களை பின்பற்றி இடம்பெற்றது.
மல்வத்தை, அஸ்கிரிய பீடங்கள் உள்ளிட்ட மூன்று நிகாயக்களையும் பிரதிநிதித்துவப்படுத்தி மகாசங்கத்தினர், கருதினால், ஏனைய சமயத் தலைவர்கள், முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அமைச்சரவை அமைச்சர்கள், ஜனாதிபதியின் செயலாளர், பாதுகாப்பு செயலாளர், முப்படைகளின் தலைவர்கள், முன்னாள் கடற்படை மற்றும் விமானப் படை தளபதிகள், பதில் பொலிஸ் மா அதிபர், சிவில் பாதுகாப்பு படை பிரதானி உட்பட படைவீரர்கள், படைவீரர்களின் குடும்பத்தினர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
அநீதியான சர்வதேச அமைப்பிலிருந்து விலக தயங்கமாட்டோம்-National War Heroes Day-President Gotabaya Rajapaksa Speech Tamil
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஆற்றிய உரை
மே மாதம் 19ஆம் திகதி இலங்கை வரலாற்றில் ஒரு முக்கிய நாளாகும்.
இற்றைக்கு 11 வருடங்களுக்கு முன்னர் 2009 மே மாதம் 19ஆம் திகதி, நாம் சுமார் 30வருடங்களாக இந்த நாட்டிற்கு சாபமாக இருந்து வந்த பிரிவினைவாத பயங்கரவாதத்தை முழுமையாக தோற்கடித்தோம்.
முப்படைகளினதும் தலைவர் என்ற வகையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் அதற்கு தலைமைத்துவத்தை வழங்கினார். பயங்கரவாதம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டதன் மூலம் மக்களுக்கு பயம், சந்தேகமின்றி வாழ்வதற்கும், தங்களது மனித உரிமைகளை சுதந்திரமாக அனுபவிப்பதற்கும் முடியுமான சூழல் ஏற்படுத்திக்கொடுக்கப்பட்டது.
சுமார் 30 வருடங்களுக்கு பின்னர் சுதந்திரமானதும் சுயாதீனமாதுமான தேர்தலொன்றை நடத்துவதற்கு ஏற்ற சூழலை ஏற்படுத்தி, ஜனநாயகம் உறுதிப்படுத்தப்பட்டது. இந்த நாட்டில் எந்தவொரு பிரஜைக்கும் தடையின்றி, நாட்டின் எந்தவொரு இடத்திலும் சுதந்திரமாக நடமாடக்கூடிய சூழல் மீண்டும் ஏற்படுத்திக்கொடுக்கப்பட்டது. அச்சமும் பயமும் சூழ்ந்திருந்த எமது நாட்டில் சமாதானத்தை ஏற்படுத்துவதற்காக எமது படைவீரர்களும் அவர்களின் குடும்பங்களும் பெரும் அர்ப்பணிப்பையும் தியாகங்களையும் செய்துள்ளனர்.
யுத்தம் என்பது மலர்தூவிய பஞ்சணையன்று. குறிப்பாக சட்டத்தை மதிக்காத உலகின் மிகக் கொடூரமான பயங்கரவாத இயக்கத்துடன் போராடும் போது படைவீரர்களுக்கு பல்வேறு துன்பகரமான அனுபவங்களுக்கும் கஷ்டங்களுக்கும் முகம்கொடுக்க வேண்டியிருக்கும்.
அந்த 30 வருட காலப் பகுதியில் ஒரு குறிப்பிட்ட  பிரதேசத்தில் மட்டுமன்றி நாட்டின் அனைத்து இடங்களிலும் அப்பாவி பொது மக்கள் உயிரிழந்தனர். தற்கொலை குண்டுதாரிகள், பஸ் வண்டிகளிலும் புகையிரதங்களிலும் வைக்கப்பட்ட குண்டுகள், கட்டிடங்கள் மீதான குண்டுத் தாக்குதல்கள் காரணமாக இந்த நாட்டில் பெருமளவு உயிர் மற்றும் சொத்துக்களுக்கு சேதங்கள் ஏற்பட்டன. மனிதாபிமான நடவடிக்கையின் இறுதி நோக்கம் நாட்டில் நீண்ட கால சமாதானத்தை ஏற்படுத்துவதாகும்.
படைவீரர்கள் செய்த அந்த பெரும் அர்ப்பணிப்பின் காரணமாக இன்று எமக்கு ஒன்றுபட்ட நாட்டில் சுதந்திரமாகவும் அமைதியாகவும் வாழ்வதற்கான சந்தர்ப்பம் கிடைத்துள்ளது.
பௌத்த சமயத்தினால் வளம்பெற்ற எமது நாட்டில் அனைத்து சமயத்தினருக்கும் அனைத்து இனங்களுக்கும் புகலிடமான ஒரு நிர்வாக முறைமை உள்ளது. வரலாறு நெடுகிலும் இந்த நாட்டில் சிங்களவர், தமிழர், முஸ்லிம்கள், மலாயர், பரங்கியர் ஆகிய அனைத்து இனங்களும் சமமாக வாழும் உரிமையை பெற்றிருந்தனர்.
எம்மை பிரித்து வேறுபடுத்த வேண்டும் என்பதே தீவிரவாதிகளின் நோக்கம். அவர்களது நோக்கம் நிறைவேறியிருந்தால் எமது வரலாறு மாறியிருக்கும். மக்கள் ஒருவரையொருவர் வெறுக்கும், எல்லைகளுக்காக தொடர்ந்து போராடும், யுத்த பீதி மக்கள் வாழ்க்கையின் ஒரு பகுதியாக மாறிய, மற்றுமொரு துரதிஷ்டமான, பிளவுபட்ட நாடாக இலங்கை மாறியிருக்கும். அந்த அழிவிலிருந்து நாட்டை விடுவித்த கௌரவத்தை, நீண்ட காலமாக எமது நாட்டின் சமாதானத்திற்காக போரிட்ட அனைத்து துணிச்சல்மிக்க படைவீரர்களுக்கும் பெற்றுக்கொடுக்க வேண்டும்.
மூன்று தசாப்தங்களாக இந்த வெற்றிக்காக உயிர் தியாகம் செய்து போரிட்ட ஜெனரல் கொப்பேகடுவ, ஜெனரல் விஜய விமலரத்ன உள்ளிட்ட அனைத்து படைவீரர்களையும் நாம் இச்சந்தர்ப்பத்தில் மிகுந்த கௌரவத்துடன் நினைவுகூர்கின்றோம்.
இராணுவத்தில் 20 வருடங்கள் செயற்திறமான சேவையில் ஈடுபட்ட அதிகாரி என்ற வகையிலும் பின்னர் 10 வருடங்கள் பாதுகாப்பு செயலாளராகவும், ஒரு பிரஜை என்ற வகையிலும் எமது படைவீரர்கள் செய்த அர்ப்பணிப்புகளை நான் நன்கறிவேன். யுத்தத்தின் வலிகள் எனக்கு நன்றாக தெரியும். எனவே பெரும் தியாகங்களை செய்து அனைத்து இலங்கையர்களுக்கும் சமாதானத்தை ஏற்படுத்தித்தந்த எமது படைவீரர்களின் கௌரவத்திற்கும் நற்பெயருக்கும் இழுக்கை ஏற்படுத்துவதற்கு மேற்கொள்ளப்படும் முயற்சிகளுக்கு நான் ஒரு போதும் இடமளிக்க மாட்டேன். எனது அரசாங்கத்தின் கீழ் எமது படைவீரர்களின் கௌரவத்தை பாதுகாப்பதற்கு அனைத்து வகையான நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்பதை உங்களுக்கு உறுதியளிக்கின்றேன்.
அவர்களது உரிமைகளை பாதுகாப்பது ஒரு தேசிய பொறுப்பாகும். உலகின் பலம்வாய்ந்த நாடுகளின் தலைவர்கள் கூட தெளிவாக தமது நாட்டின் படைவீரர்களுக்கு எதிராக எந்தவொரு நடவடிக்கையையும் எடுப்பதற்கு அனுமதிக்கப்போவதில்லை என தெரிவித்திருக்கின்ற சூழ்நிலையில், எம்மைப் போன்ற ஒரு சிறிய நாட்டில் இத்தகைய அர்ப்பணிப்புகளை செய்துள்ள படைவீரர்கள் தேவையற்ற அழுத்தங்களுக்கு உள்ளாக நான் ஒரு போதும் இடமளிக்கப் போவதில்லை.
அந்த வகையில் எமது நாட்டுக்கு அநீதியான வகையில் ஏதேனும் ஒரு சர்வதேச நிறுவனம் அல்லது அமைப்பு தொடர்ந்தும் செயற்படுமாக இருந்தால் அந்த நிறுவனத்தின் அல்லது அமைப்பின் உறுப்புரிமையிலிருந்து இலங்கையை விலக்கிக்கொள்ள நான் ஒருபோதும் பின்நிற்கப் போவதில்லை.
Even leaders of powerful countries have emphatically stated that they would not allow any action against their war heroes. As such, in a small country like ours where our war heroes have sacrificed so much, I will not allow anyone or organization to exert undue pressure on them and harass them.
If any international body or organization continuously target our country and our war heroes, using baseless allegations, I will also not hesitate to withdraw Sri Lanka from such bodies or organizations."
மூன்று தசாப்தங்களாக பிரிவினைவாதத்திற்கு எதிரான போருக்கு பங்களிப்பு செய்த அனைத்து படைவீரர்களுக்கும் அவர்களது குடும்பத்திற்கும் நாம் இச்சந்தர்ப்பத்தில் தேசத்தின் நன்றியை தெரிவிக்கின்றோம்.
படைவீரர்கள் உயிர் தியாகங்கள் செய்து பாதுகாத்த இந்த நாட்டை அனைத்து பிரஜைகளும் சமாதானமாகவும் மகிழ்ச்சியாகவும் கண்ணியமாகவும் வாழக்கூடிய சுபீட்சமான தேசமாக மாற்றுவது அவர்களுக்கு செய்யும் உயர்ந்த கௌரவமாகும். இதற்காக உங்களின் முழுமையான பங்களிப்பை வழங்க முன்வாருங்கள் என்று அனைத்து தேசப்பற்றுள்ள பிரஜைகளிடமும் இந்த படைவீரர்கள் நினைவுத்தூபி வளாகத்திலிருந்து நான் கேட்டுக்கொள்கின்றேன்.

உங்கள் அனைவருக்கும் நன்றி

மும்மணிகளின் ஆசிகள்
நன்றி தினகரன் 










இலங்கையின் மூத்த முஸ்லிம் கல்விமான்களில் ஒருவர் எம்.ஏ.எம். ஷுக்ரி




இலங்கையின் மூத்த முஸ்லிம் கல்விமான்களில் ஒருவர் எம்.ஏ.எம். ஷுக்ரி-MAM Shukri Passed Away
இலங்கையின் மூத்த முஸ்லிம் கல்விமான்களில் முக்கியமானவராகக் கருதப்படும் கலாநிதி எம்.ஏ.எம் ஷுக்ரி தனது எண்பதாவது வயதில் இன்று (19) செவ்வாய்க்கிழமை காலை 6.50  மணியளவில் கொழும்பில் தனியார் மருத்துவமனையில் காலமானார். (இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்) சிறிது காலம் சுகவீனமுற்று மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே அன்னார் இன்று காலமானார்.
தென் மாகாணத்தின் மாத்தறை நகரில் 1940இல்  ஜூன் மாதம் 24 ஆம் திகதி முகமது அலி ஆயிஷா பீபீ தம்பதியருக்கு மகனாகப் பிறந்தார்.  தென்னிலங்கையின் புகழ்பூத்த டாக்டர் எஸ்.எம். ஸலாஹுத்தீன் தம்பதியரின் ஏக புதல்வியான நுறுல் புஸ்ரா வை மணமுடித்து மூன்று பிள்ளைகளுக்கு தந்தையாவார்.
கலாநிதி ஷுக்ரி தனது ஆரம்ப கல்வியை மாத்தறை புனித தோமஸ் கல்லூரியில் பெற்றுக் கொண்டார். உயர்கல்வியை பேராதனைப் பல்கலைக்கழகத்தில் பெற்றுக் கொண்டதன் பின்னர் இங்கிலாந்து சென்று எடின்பரோ பல்கலைக்கழகத்தில் கற்று கலாநிதிப் பட்டத்தை பெற்றுக் கொண்டார். பின்னர் இலங்கையில் பேராதனைப் பல்கலைக்கழகத்திலும் வித்தியாலய பல்கலைக்கழகத்தில் களனி வித்தியாலங்கார பல்கலைக்கழகத்திலும் விரிவுறையாளராக பணியாற்றினார். இந்த இரு பல்கலைக் கழகங்களிலும் அரபு இஸ்லாமிய வரலாற்றுத் துறை பகுதிகளில்  சிரேஷ்ட விரிவுரையாளராக பணிபுரிந்தார்.
அக்காலகட்டத்தில் பேராசிரியர் சு. வித்தியானந்தன் பேராதனை பல்கழகத்திலும் பேராசிரியர் எஸ்.ஐ இமாம்  பேராதனை களனி  பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக இருந்தபோது அவரது மாணவராக டாக்டர் ஷுக்ரி  கல்வியை பெற்றுக் கொண்டதோடு அவர்களது காலத்தில் பல்கலைக்கழகங்களில் அவர்களின் கீழ் விரிவுரையாளராக  சிறப்பாகப் பணி புரிந்துள்ளார்.
பின்னர் மர்ஹும் நளீம் ஹாஜியாரின் அழைப்பை ஏற்று ஜாமிஆ நளிமியாவை ஆரம்பிக்கும் பணிகளுக்கு உதவியதோடு அக்கலாபீடத்தின் ஆரம்பம் முதல் இறுதிவரை பணிப்பாளர் நாயகமாக திகழ்ந்து அக்கலா பீடத்திற்கு பெருமை சேர்த்துள்ளார்.
மும்மொழி திறன்கொண் டாக்டர் ஷுக்ரி பல இஸ்லாமிய நூல்களையும் வரலாற்று பதிவுகளையும் தந்துள்ளார். ஜாமிஆ நளீமிய்யாவின் சஞ்சிகையான இஸ்லாமிய சிந்தனையின் பிரதம ஆசிரியராக நீண்டகாலம் பொறுப்பை ஏற்று அதனை திறம்பட  சமூகத்திற்கு தந்துள்ளார்.
உள்நாட்டிலும் சர்வதேச நாடுகளிலும் பல்வேறு மாநாடுகளில் சிறப்பு பேச்சாளராகவும் கருத்தரங்குகளை வழி நடத்துபவராகவும்  அளப்பரிய சேவை ஆற்றியுள்ள டாக்டர் ஷுக்ரி  முஸ்லிம் சமூகத்தின் விழிப்புணர்வுக்காக  பல்வேறு மாநாடுகளை கூட்டி கல்விமான்களையும் முஸ்லிம் தலைவர்களையும்  கூட்டினைத்துச் செயற்பட்டார்.
அன்னாரின் ஜனாஸா நேற்று பிற்பகல் ஒரு மணிக்கு தெஹிவலை ஜும்ஆ பள்ளிவாசலுக்கு எடுத்துச் செல்லப்பட்டு ஜனாஸா தொழுகை நடத்தப்பட்டதன் பின்னர் அவரது சொந்த ஊரான மாத்தறைக்கு கொண்டு  செல்லப்பட்டு பிற்பகல் 5:30 மணியளவில் நல்லடக்கம் செய்யப்பட்டது. தெஹிவளை  பள்ளிவாசலில் இடம்பெற்ற ஜனாஸா தொழுகையின் போது  அஷ்ஷேக் ஏ.சி. அகார் முஹம்மத் உருக்கமானதொரு  பிரசங்கத்தை செய்தார். மட்டுப்படுத்தப்பட்ட அளவினரே ஜனாஸா தொழுகையில் கலந்து கொள்ள அனுமதிக்கப்பட்டனர்.
முன்னாள் அமைச்சர்கள் ரஊப் ஹக்கீம், ரிஷாத் பதியுதீன் ஏ.எச்.எம். பெளசி மற்றும்  முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான  முஜிபுர் ரஹ்மான், எஸ்.எம். மரிக்கார் முன்னாள் மேல் மாகாண ஆளுநர் அசாத் சாலி, ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம், முஸ்லிம் கவுன்சில் ஆகியவற்றின்  தலைவர் என்.எம். அமீன்  உட்பட ஏராளமானோர் மருத்துவமனையிலும் தெஹிவளை பள்ளிவாசலிலும் கூடி மர்ஹூம் ஷுக்ரி அவர்களுக்கு பிரார்த்தனை செய்தனர்.
பிரதமர் மஹிந்த ராஜபக்ச முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ஆகியோர் அனுதாபச் செய்திகளை அனுப்பி  இருந்தனர்.
எம்.ஏ.எம். நிலாம்   நன்றி தினகரன் 












கிழக்கில் தொல்பொருள் முக்கிய தலங்களை பாதுகாக்க ஜனாதிபதி செயலணி




கிழக்கில் தொல்பொருள் முக்கிய தலங்களை பாதுகாக்க ஜனாதிபதி செயலணி-Presidential Task Force Will be Appointed to Protect Archaeological Sites-President Gotabaya

பௌத்த ஆலோசனைக் குழுவிடம் ஜனாதிபதி தெரிவிப்பு

- தேசிய கல்விக் கொள்கை விரைவில்
- தேசிய பாதுகாப்புக்கு முதலிடம்
- போதைப் பொருள் பிரச்சினையை ஒழிக்க உச்சபட்ச நடவடிக்கை

கிழக்கு மாகாணத்தில் தொல்பொருள் முக்கியத்துவம் வாய்ந்த இடங்களை முறையாக மதிப்பீடு செய்து பாதுகாப்பதற்கு பாதுகாப்பு செயலாளரின் தலைமையில் ஜனாதிபதி செயலணியொன்றை அமைப்பதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்தார்.
கிழக்கில் தொல்பொருள் முக்கிய தலங்களை பாதுகாக்க ஜனாதிபதி செயலணி-Presidential Task Force Will be Appointed to Protect Archaeological Sites-President Gotabaya
தொல்பொருள் முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள் அழிவடைவது குறித்து பல்வேறு தரப்பினர் விடயங்களை முன்வைத்து வருகின்றனர். இவை அனைத்தையும் கருத்திற்கொண்டு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்களை மையப்படுத்தி அவற்றை பாதுகாக்கும் பரந்த நிகழ்ச்சித் திட்டமொன்றை தொல்பொருள் திணைக்களத்தின் உதவியுடன் நடைமுறைப்படுத்துவதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
ஓவ்வொரு மாதமும் மூன்றாவது வெள்ளிக்கிழமை ஒன்றுகூடும் பௌத்த ஆலோசனை சபை இரண்டாவது தடவையாக இன்று (22) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஒன்றுகூடியது. இங்கு மகாசங்கத்தினரிடம் கருத்துத் தெரிவிக்கும் போதே ஜனாதிபதி இதனை தெரிவித்தார்.
கிழக்கில் தொல்பொருள் முக்கிய தலங்களை பாதுகாக்க ஜனாதிபதி செயலணி-Presidential Task Force Will be Appointed to Protect Archaeological Sites-President Gotabaya

சில பிக்குகளின் செயற்பாடுகள்
பௌத்த சமயத்திற்கும் திரிபீடகத்திற்கும் முரணாக சில பிக்குகளின் செயற்பாடுகள் உள்ள காரணத்தினால் பௌத்த சாசன உரையாடலொன்றின் தேவை குறித்து மகா சங்கத்தினர் விரிவாக ஜனாதிபதிக்கு தெளிவுபடுத்தினர். அது பற்றி மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் மற்றும் முன்மொழிவுகளை சமர்ப்பித்தால் தனது பதவிக் காலத்தில் அதற்கு தேவையான தீர்வை பெற்றுக்கொள்ள முடியும் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.


ஜனாதிபதிக்கு பாராட்டு
உலகின் அனைத்து நாடுகளும் கொவிட் 19 நோய்த்தொற்றினால் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில் நாட்டின் அனைத்து மக்களையும் பாதுகாத்து ஜனாதிபதி மேற்கொண்டு வரும் பணியை மகா சங்கத்தினர் பாராட்டினர். ஏப்ரல் 30ஆம் திகதிக்கு பின்னர் சமூகத்தில் எந்தவொரு கொவிட் நோய்த் தொற்றுடையவரும் கண்டறியப்படாமை சுகாதார மற்றும் பாதுகாப்பு துறைக்கு கிடைத்த பெரும் வெற்றியாகும் என ஜனாதிபதி மகாசங்கத்தினரிடம் தெரிவித்தார்.

கிழக்கில் தொல்பொருள் முக்கிய தலங்களை பாதுகாக்க ஜனாதிபதி செயலணி-Presidential Task Force Will be Appointed to Protect Archaeological Sites-President Gotabaya
வெளிநாடுகளில் இருந்து வருவோர் நோய்த்தடுப்புக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். அவர்களில் குவைட் மற்றும் டுபாய் நாடுகளில் இருந்து வருகை தந்த சிலர் கொவிட் நோய்த்தொற்றுக்கு ஆளாகியிருந்தனர். நாட்டுக்கு வருகை தருவோர் தொடர்பில் சுகாதார ஆலோசனைகளுக்கு ஏற்ப பாதுகாப்பு நிகழ்ச்சித்திட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

தேசிய கல்விக் கொள்கை
பிரிவெனா மற்றும் பாடசாலை கல்வித் துறையின் தற்போதைய நிலை குறித்து பௌத்த ஆலோசனை சபை விரிவாக கலந்துரையாடியது. இலக்கியம் மற்றும் வரலாறு ஆகிய பாடங்களை கல்வித்திட்டத்திலிருந்து நீக்குவதற்கு சில காலகட்டங்களில் நடவடிக்கை எடுக்கப்பட்டதாக மகாசங்கத்தினர் சுட்டிக்காட்டினர். தனது கொள்கை பிரகடனத்தில் முதன்மையான இடத்தையும் முன்னுரிமையையும் கல்விக்கு வழங்கியிருப்பதாக குறிப்பிட்ட ஜனாதிபதி அவர்கள், தேசிய கல்விக் கொள்கையொன்றை நடைமுறைப்படுத்தும் ஆரம்ப பணிகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.


போதைப்பொருள் ஒழிப்பு
நாடெங்கிலும் பரவியுள்ள போதைப் பொருள் பிரச்சினையை ஒழிப்பதற்கு விரிவான நிகழ்ச்சித்திட்டமொன்றை நடைமுறைப்படுத்த வேண்டியதன் அவசியத்தை மகாசங்கத்தினர் வலியுறுத்தினர். இந்த விடயத்தில் அரசாங்கத்திற்கும் மகாசங்கத்தினருக்கும் பாரிய பொறுப்பு உள்ளதாகவும் அவர்கள் குறிப்பிட்டனர்.

கடந்த குறுகிய காலப்பகுதியில் நாட்டினுள் கொண்டுவரப்பட்ட பெருந்தொகை போதைப்பொருட்களை கைப்பற்ற முடிந்திருப்பதாக ஜனாதிபதி குறிப்பிட்டார். இந்த நிலைமையை முழுமையாக கட்டுப்படுத்தி போதைப் பொருள் பிரச்சினையை முற்றாக ஒழிப்பதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்பதாக ஜனாதிபதி குறிப்பிட்டார்.

தேசிய பாதுகாப்பு
தேசிய பாதுகாப்பு பற்றிய தனது பொறுப்பை முழுமையாக நிறைவேற்றுவதாகவும், அதற்காக திறமையும் இயலுமையும் கொண்ட அதிகாரிகளை நியமித்துள்ளதாகவும், ஜனாதிபதி சுட்டிக்காட்டினார். புலனாய்வுத் துறையை பலப்படுத்தி முழுமையான அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. அனைத்து தீவிரவாத, பயங்கரவாத குழுக்கள் குறித்தும் விசாரணை செய்வதற்கு பாதுகாப்பு தரப்புக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.


ஜனாதிபதியின் உரைக்கு பாராட்டு
படைவீரர்கள் நினைவு தின விழாவில் ஜனாதிபதி ஆற்றிய உரைக்கு நன்றி தெரிவிக்க அகராதியில் வார்த்தைகள் இல்லை எனக் குறிப்பிட்ட மகாசங்கத்தினர், அதனையிட்டு ஜனாதிபதியை ஆசிர்வதித்தனர்.

ஊடக நடத்தை
குழம்பிப் போயிருக்கும் சமூகத்தை இயல்பு நிலைக்கு கொண்டுவருவதற்கு மகாசங்கத்தினருக்கு பாரிய பொறுப்பு உள்ளது என தேரர்கள் சுட்டிக்காட்டினர். தேரர்களுக்கும் அரசியல்வாதிகளுக்கும் இடையே பிரச்சினையை ஏற்படுத்தும் விதமான ஊடக நடத்தையை மகா சங்கத்தினர் விமர்சித்தனர்.


எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பு
உலகின் அனைத்து நாடுகளும் கொவிட் நோய்த்தொற்றை ஒழிப்பதற்கு அரசாங்கம் மேற்கொண்ட நடவடிக்கையை பாராட்டும் போது எதிர்க்கட்சி நேர்மையற்ற முறையில் அனைத்து நடவடிக்கைகளையும் எதிர்ப்பது வெறுக்கத்தக்கதாகும் என்றும் தேரர்கள் சுட்டிக்காட்டினர்.


இயல்பு நிலை தொடர்பில் பிக்குமார் கொண்ட குழு
கொவிட் நோய்த்தொற்றினால் குழம்பிப் போயிருக்கும் சமூகத்தை இயல்பு நிலைக்கு கொண்டுவருவதற்கு மகாசங்கத்தினருக்கு பாரிய பொறுப்பு உள்ளதுடன், அதற்காக பிக்குமார்களை கொண்ட குழுவொன்றை விரைவில் நியமித்து உரிய நிகழ்ச்சித்திட்டமொன்றை நடைமுறைப்படுத்துவதாகவும் அவர்கள் குறிப்பிட்டனர்.

மல்வத்தை பீடத்தின் அநுநாயக தேரர் சங்கைக்குரிய நியங்கொட விஜிதசிறி தேரர், அஸ்கிரிய பீடத்தின் அநுநாயக தேரர் சங்கைக்குரிய வெண்டருவே உபாலி தேரர், கலாநிதி சங்கைக்குரிய பஹமுனே சுமங்கள தேரர், கலாநிதி சங்கைக்குரிய மெதகம தம்மானந்த தேரர், ருவன்வெலி மகா சேய விகாராதிபதி சங்கைக்குரிய பல்லேகம ஹேமரத்ன தேரர், அமரபுர மகா நிகாயவின் சங்கைக்குரிய திருக்குணாமலயே ஆனந்த தேரர், தென் இலங்கை பிரதான சங்கநாயக்கர் சங்கைக்குரிய மெடரம்ப ஹேமரத்ன தேரர், சபரகமுவ பல்கலைக்கழகத்தின் வேந்தர் பேராசிரியர் கும்புருகமுவே வஜிர தேரர் உள்ளிட்ட மகா சங்கத்தினர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர். ஜனாதிபதியின் தலைமை ஆலோசகர் லலித் வீரதுங்கவும் இக்கலந்துரையாடலில் பங்குபற்றினார்.   நன்றி தினகரன் 











மேலும் 1.1 மில். டொலரை பரிமாறுமாறு ஜனாதிபதி கோரிக்கை



- கொரோனா இடையே உறவை பலப்படுத்த தலைவர்கள் ஈடுபாடு
சார்க் பரிமாற்ற வசதியின் கீழ் அன்பளிப்பு செய்யப்பட்டுள்ள 400 மில்லியன் டொலர்களுக்கு 1.1 பில்லியன் டொலர்களை சேர்ப்பதற்கு இந்திய அரசாங்கம் இணங்கினால் அது அந்நிய செலாவணி பிரச்சினையை முகாமைத்துவம் செய்வதற்கு பெரும் உதவியாக அமையும் என்று, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பிரதமர் நரேந்திர மோடியுடனான உரையாடலில் கேட்டுக்கொண்டுள்ளார்.
நேற்று (23) முற்பகல் சுமுகமான தொலைபேசி உரையாடலொன்றில் ஈடுபட்ட ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவும், இந்திய பிரதமர் நரேந்திர மோடியும் இரு நாடுகளுக்கும் இடையிலான அனைத்து வகையான உறவுகளையும் கொவிட் பிரச்சினைக்கு மத்தியிலும் மேலும் மேம்படுத்துவதற்கு இணக்கம் தெரிவித்தனர்.
ஜனாதிபதி அலுவலகத்திலிருந்து இந்திய பிரதமருடன் உரையாடிய ஜனாதிபதி, பரஸ்பர முக்கியத்துவம் வாய்ந்த விடயங்கள் பற்றி கருத்துகளை பகிர்ந்துகொள்ள சந்தர்ப்பம் கிடைத்ததையிட்டு மகிழ்ச்சி தெரிவித்ததுடன், தற்போதைய கஷ்டமான காலகட்டத்தில் இலங்கைக்கு செய்த உதவிகள் தொடர்பில் பிரதமர் மோடிக்கும் இந்திய மக்களுக்கும் நன்றி தெரிவித்தார்.
இந்தியா அன்பளிப்பு செய்த 10 டொன் மருத்துவ உதவிகள் பெரிதும் பயனளித்ததாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார். 'இந்தியா, கொவிட் -19 நோய்த்தொற்றை சிறப்பாக கட்டுப்படுத்தியுள்ளது என நான் நம்புகின்றேன். அதற்காக நீங்கள் மேற்கொண்ட முயற்சிக்கு குறிப்பாக குறைந்த வசதிகளைக் கொண்டவர்களுக்காக அறிமுகப்படுத்தப்பட்ட பொருளாதார நிவாரணங்களை நான் பாராட்டுகிறேன். இலங்கையில் நாமும் நோய்த்தொற்றை திருப்திகரமாக கட்டுப்படுத்துவதில் வெற்றியடைந்திருக்கின்றோம்' என்றும் ஜனாதிபதி தெரிவித்தார். இதற்கு பதிலளித்த இந்திய பிரதமர் 130 கோடி மக்களை கையாள்வது கடினமானது என்ற போதும் நோய்த்தொற்று பரவலை சுமார் 75 வீதம் கட்டுப்படுத்த முடிந்திருப்பதாக தெரிவித்தார்.
'தெளிவான சிந்தனையுடன் விரைவாக கடினமான தீர்மானங்களை மேற்கொள்ளக்கூடிய ஒரு தலைவராகவே' ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை தான் புரிந்து வைத்திருப்பதாக பிரதமர் மோடி குறிப்பிட்டார். 'என்னிடமுள்ள தகவல்களின் படி இலங்கை நோய்த்தொற்றை சிறப்பாக கட்டுப்படுத்துவதில் வெற்றியடைந்துள்ளது. அதன் கௌரவம் உங்களையே சாரும்' என்றும் இந்திய பிரதமர் மேலும் தெரிவித்தார்.
தற்போது தனது முன்னுரிமை பொருளாதார புத்தெழுச்சியாகும் எனக் குறிப்பிட்ட ஜனாதிபதி, சில முன்னணி திட்டங்களுக்கு மீண்டும் உயிரூட்டுவதற்கு இந்தியாவின் உதவியை எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார். கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை விரைவாக நிர்மாணிப்பது அவற்றில் ஒன்றாகும். பெறுமதி சேர்க்கப்பட்ட கைத்தொழில் மற்றும் விவசாய உற்பத்திகளை மேம்படுத்துவது மற்றுமொரு நோக்கமாகும். இத்துறைகளில் முதலீடு செய்யுமாறு இந்திய வர்த்தகர்களையும் தற்போது இலங்கையிலிருக்கும் இந்திய கம்பனிகளையும் ஊக்குவிக்க முடியுமானால் அது கொரோனாவுக்கு பிந்திய காலப்பகுதியில் பொருளாதார புத்தெழுச்சிக்கு உதவியாக அமையும் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.
இரு நாடுகளுக்கும் இடையில் நடைமுறையில் உள்ள நிதி வசதிகளை பரிமாறிக்கொள்ளும் நிகழ்ச்சித்திட்டத்தை மேலும் விரிவுபடுத்துவதற்கு ஜனாதிபதி முன்மொழிந்தார். சார்க் பரிமாற்ற வசதியின் கீழ் அன்பளிப்பு செய்யப்பட்டுள்ள 400 மில்லியன் டொலர்களுக்கு 1.1 பில்லியன் டொலர்களை சேர்ப்பதற்கு இந்திய அரசாங்கம் இணங்கினால் அது அந்நிய செலாவணி பிரச்சினையை முகாமைத்துவம் செய்வதற்கு பெரும் உதவியாக அமையும் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

இதற்குப் பதிலளித்த பிரதமர் மோடி, 'இலங்கைக்கு உதவுவதற்கு நான் தனிப்பட்ட முறையில் அர்ப்பணிப்புடன் உள்ளேன். இலங்கைக்கு சாதகமான நிபந்தனைகளின் கீழ் உதவுவதற்கு நாம் தயாராக உள்ளோம். இதற்காக கொழும்பில் உள்ள இந்திய உயர் ஸ்தானிகருடன் இணைந்து பணியாற்றுவதற்கு பொருத்தமான ஒரு பிரதிநிதியை நியமியுங்கள்' என்று தெரிவித்தார்.
தற்போது கட்டியெழுப்பப்பட்டுள்ள இருதரப்பு கூட்டுப்பங்காண்மையை மக்களுக்கு நேரடி நன்மைகளை கொண்டுவரும் மற்றும் உணவு, சுகாதார பாதுகாப்புக்கு முன்னுரிமையளித்த திட்டங்களாக முன்னெடுப்பதற்கு இரு தலைவர்களும் இணக்கம் தெரிவித்தனர்.  நன்றி தினகரன் 







No comments: