நிறைத்திடுவேன் என் உள்ளமெலாம் ! - மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா .... மெல்பேண் .... அவுஸ்திரேலியா

       
          அழமாட்டேன் இனி
          அழமாட்டேன் மண்ணில் விழமாட்டேன்
          தொழமாட்டேன் துயர்
          படமாட்டேன் அடி விழமாட்டேன் 

          உரையாற்றேன் வெற்று
          உரையாற்றேன் அவை தடுமாற 
          எழுதிடுவேன் கதை
          வெளியிடுவேன் தலை நிமிர்வாக 

          சொல்லிடுவேன் உரை
          சொல்லிடுவேன் புதுக் குறளாக 
          அள்ளிடுவேன் சுவை 
          அனைத்தையுமே தமிழ் அன்னையிடம் 

          உணர்ந்திடுவேன் தமிழ்
          பண்பாட்டை என் வாழ்வெல்லாம்
          நிமிர்ந்திடுவேன் தலை
          நிமிர்ந்திடுவேன் நில மீதினிலே


        கற்றுணர்வேன் நல்
        நூலையெலாம் தேடி யோடி  
        நின்றிடுவேன் கரு
        நிறைத்திடுவேன் என் உள்ளமெலாம்


No comments: