நளபாகம்



நமக்கு யார் உணவிடுகிறார்களோ அவர்களை நமக்கு மிகபிடிக்கும்


அம்மாவை நினைக்கையில் அம்மாவின் சமையல் மனதில் வராமல் போகாது...



இன்று நம் அனைவரையும் ஊட்டிவளர்ப்பது உணவகங்களும், ஊப்ர் ஈட்ஸும், ஸ்விக்கியும்தான்.



அடுத்ததலைமுறையில் சமையல் என்பது சுத்தமாக ஒழிந்துவிடும். இப்போதே இலையதலைமுறையில் ஆண்/பெண் யாருக்கும் சமையல் தெரியாது.



நம்மை உணவிடுபவர்கள் மேல் நாம் பாசமாக இருப்போம் எனும் லாஜிக்கின் அடிப்படையில் மக்களின் பாசம் உணவகங்கள் மேல் திரும்பியுள்ளது



யுடியூப் விடியோக்கள் பலவற்றில் உணவகம் நடத்துபவர்களை "அக்கா கடை, அண்ணா கடை" என மக்கள் அழைத்து பாசமாக இருப்பதை காணமுடிகிறது. நல்ல விசயம்தான், தவறேதும் இல்லை.



இதேபாசம் ஸ்டார்பக்ஸ், மெக்டாலன்ட்ஸ் என சங்கிலி உணவகங்கள் மேலும் பிராண்ட் அட்டாச்மெண்ட், பிராண்ட் இக்விடி என ஏதேதோ பெயர்களில் காட்டபடுகிறது.



ஆய்வு ஒன்றில் ரொமாண்டிக் காமடி படங்களை பார்க்கும் தம்பதியினர் கூடுதல் அளவில் விவாகரத்து பெறுவார்கள் என சொல்கிறது.



திரையில் இயக்குனரின் கற்பனையில், எங்னெங்கோ பாரின் லொகேசன்களில் எடுக்கபட்ட அழகான காதல்பாடல்களை பார்த்துவிட்டும், அழகான நாயகன், நாயகி வாழ்வில் நிகழ்வதாக காட்டபடும் ரொமாண்டிக் சினிமா காதலை பார்த்து ரசித்துவிட்டு திரும்பினால் நிஜவாழ்க்கையில் தன் அருகே இருப்பது தன் கணவன்/மனைவி....சினிமா காதலை தன் வாழ்வுடன் ஒப்பிட்டு "ஆகா. என் வாழ்க்கை இப்படி இல்லையே?" என மனஸ்தாபம் வந்து விவாகரத்து பெறுகிறார்கள்.



உணவகங்களின் லாஜிக்கும் இதுதான். உணவகங்களின் வெரைட்டி, செயற்கை சுவை வீட்டு சமையலில் இல்லை. அதனால் வீட்டு சமையல் பிடிக்காமல் போய்விடுகிறது, அல்லது நேரம் இல்லை என சொல்லிக்கொள்கிறார்கள்.



அதற்காக பெண்களை பிடித்து மூணுவேளையும் சமையல் கட்டில் ஆழ்த்தணும் என இல்லை...ஆண்கள் சமைக்கவேண்டும், பாத்திரம் கழுவுவதில், வீட்டு வேலைசெய்வதில் பங்கெடுக்கவேண்டும்..மிக எளிமையான, ஆரோக்கியமான, சுவையான ரெசிபிகளை செய்து பழகினால் உணவகம் அதன்பின் பிடிக்காமல் போய்விடும்.




நம் சமையல் நமக்கு பிடித்தால் நம் மேலேயே நமக்கே ஒரு மதிப்பும், மரியாதையும் வரும்!



நம் சமையல் மற்றவர்களுக்கு பிடித்தால் ஒரு ஓவியன் தன் படைப்பு பாராட்டபடுவது கண்டு அடையும் மகிழ்ச்சிக்கு ஒப்பான மகிழ்ச்சியை அடைவோம்.

சமையல் ஒரு கலை, ஒரு படைப்புத்தொழில்.



நளன், பீமன் எல்லாரும் புகழ்பெற்ற சமையல்காரர்கள். நளபாகம் என்பார்கள். இதற்கும் இவர்கள் மன்னர்கள்.



நுகர்வை விட்டுவிட்டு படைக்கதுவங்கினால் அடையும் ஆத்மதிருப்திக்கு நிகர் இல்லை.



- நன்றி செல்வன்









No comments: