கனடா தமிழ் இலக்கியத் தோட்டம் 2019ம் வருடத்திற்கான இயல் விருது என அழைக்கப்படும் தமிழ் இலக்கிய வாழ்நாள் சாதனையாளர் விருதை 1989ல் இருந்து இன்றுவரை தமிழ் இலக்கிய உலகில் தீவிரமாக இயங்கிவரும் கவிஞரும், எழுத்தாளரும் அரசியல்வாதியுமான திரு சு. வெங்கடேசன் அவர்களுக்கு வழங்குவதாக அறிவித்திருக்கிறார்கள்.
வீடியோஸ்பதி சிறப்புப் பகிர்வாக எழுத்தாளர் சு.வெங்கடேசனின் “வீரயுக நாயகன் வேள்பாரி” என்ற வரலாற்றுப் புதினம் குறித்து, அந்த நாவல் ஆனந்த விகடனில் தொடராக வெளிவந்த காலத்தில், வாராவாரம் அந்தந்தப் பகுதிகளைச் சிலாகித்துக் கருத்திட்ட இணைய உலகில் நன்கு அறியப்பட்ட எழுத்தாளர் திரு கோ.ராகவன் (ஜி.ரா) விடம் முன் வைத்த பின்வரும் கேள்விகளுக்கான ஒலிக் கருத்தாக இந்தப் பெட்டக நிகழ்ச்சி அமைகின்றது.
வணக்கம் ஜிரா
“வீரயுக நாயகன் வேள்பாரி” தொடர் விகடனில் வெளிவந்த காலத்தில் இருந்தே அவற்றை வாரா வாரம் வாசித்து அவை குறித்துச் சிலாகித்துக் கருத்திட்ட வாசகர்களில் நீங்களும் ஒருவர். உங்களைப் பொறுத்தவரை பா.வெங்கடேசனுக்கு முந்திய தலைமுறை வரலாற்றாசிரியகள், படைப்பாளிகளைப் படித்த வகையில் வெங்கடேசனின் எழுத்து எவ்விதம் சம கால வாசிப்பு வட்டத்துக்கு நெருக்கமாக இருந்தது?
வேள்பாரி குறித்து இந்த நாவல் தவிர்ந்து வரலாற்று நோக்கில் பாரி மன்னன் குறித்து உங்களுடைய பார்வை எவ்விதம் அமைந்திருக்கிறது?
பொதுவாகவே இன்றைய யுகத்தில் தொடர்கதைகள் அதிகம் வாசக வட்டத்தை ஈர்க்காத சூழலில் இந்த “வீரயுக நாயகன் வேள்பாரி“ நாவலுக்குக் கிடைத்த பெரும் வாசக அங்கீகாரம் எப்படி நிகழ்ந்திருக்க முடியும்?
வீடியோஸ்பதி பகிர்வைக் காண
இந்தப் பெட்டக நிகழ்ச்சியில் தனது ஆழமான வரலாற்றுப் பார்வையைப் பகிர்ந்த அன்பு நண்பர் கோ.ராகவனுக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள்.
கானா பிரபா
08..01.2020
No comments:
Post a Comment