பதறியது நாடு சிதறியது வீடு
சுட்டெரிக்கும் வெப்பம் தாக்கியது எங்கும்
சுடர்விட்டு தீயும் ஆடியது கோரம் !
கங்காரு நாடு கருகியது தீயால்
கணக்கில்லா விலங்கு அக்கினிக்கு விருந்து
கண்முன்னே யாவும் கரிமேடாய் போச்சு
கலக்கமுடன் மக்கள் வெறுமையுடன் நின்றார் !
உயிர் பறிக்கும் தீயை உளவுறதியுடனே
எதிர் கொண்டவீரர் இதயம் உறைகின்றார்
அர்ப்பணிப்பு என்னும் அளப்பரிய பண்பை
அவுஸ்திரேலிய நாட்டில் அவர்களிடம் கண்டோம் !
உதவிவிடும் கரங்கள் ஓய்ந்து விடவில்லை
உளமார உருகி ஓடியோடிக் கொடுத்தார்
தளர்வின்றி அரசும் தாராளம் கொண்டு
நிலையுணர்ந்து கரத்தை நீட்டியதே நன்கு !
No comments:
Post a Comment