இரக்கமுள்ள அன்பர்களுக்கு
உருக்கமான வேண்டுகோள்
இலங்கையில் நீடித்த போர்
அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட தமிழ் மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு,
1988 ஆம் ஆண்டு
முதல் அவுஸ்திரேலியாவிலிருந்து உதவிவரும் தன்னார்வத் தொண்டு நிறுவனம் இலங்கை மாணவர் கல்வி நிதியத்தின் முப்பத்தியோராவது ஆண்டு நிறைவு நிகழ்வும்,
வருடாந்த பொதுக்கூட்டமும் கடந்த 19 ஆம் திகதி ( 19-10-2019) சனிக்கிழமை மாலை மெல்பனில் வேர்மண் தெற்கு சனசமூக நிலையத்தில்
நிதியத்தின் தலைவர் திரு. லெ. முருகபூபதியின் தலைமையில் நடைபெற்றது.
இதுவரையில் நூற்றுக்கணக்கான அன்பர்களின்
ஆதரவுடன் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு உதவிய கல்வி நிதியத்தின் செயற்பாடுகள் தொடர்பான காணோளிக்காட்சியும் மாணவர்களின் முன்னேற்றம் பற்றிய தகவல் அமர்வும்
இடம்பெற்ற இந்நிகழ்வில் 2019 – 2020
ஆண்டறிக்கை மற்றும் நிதியறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்டது.
இலங்கை மலையகத்தில் தெரிவுசெய்யப்பட்ட
வறுமைக்கோட்டிலும் குடும்பத்தின் மூல
உழைப்பாளியை இழந்தும் வதியும் ஏழைத்தமிழ் மாணவர்களுக்கும் கல்வி நிதியம் உதவ
முன்வந்திருப்பது குறித்தும் இக்கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டது.
இம்மாணவர்களுக்கு உதவ விரும்பும் அன்பர்கள்
கல்வி நிதியத்தை தொடர்புகொண்டு மேலதிக விபரங்களை பெற்றுக்கொள்ளலாம்.
முருகபூபதி ( தலைவர் ) 0416 625 766
விதுஷினி விக்னேஸ்வரன் ( செயலாளர் )
0428 216 222
திவானா கிருஷ்ணமூர்த்தி ( நிதிச்செயலாளர்) 0402 034 152
--------------------------------------------------------------------------------------------
CEYLON STUDENTS EDUCATIONAL
FUND ( Inc)
ABN 13 577 146 020
Bank: Commonwealth Bank
BSB: 063 111 A/C No: 1063
4651
P.O. Box: 4275, BURWOOD EAST , VICTORIA
3151
இணையத்தளம்: www.csefund.org
மின்னஞ்சல்: kalvi.nithiyam@yahoo.com
No comments:
Post a Comment