சீனா - இந்தியாவிற்கு இடையிலான புவிசார் அரசியல் போட்டியில் சிக்குண்டுள்ள யாழ்ப்பாணம்


நிக்கேய் ஏசியன் ரிவியு
தமிழில் ரஜீபன்
07/11/2019 கொழும்பிலிருந்து 400 கிலோமீற்றர்  தூரத்தில் யாழ்ப்பாணத்தில் இலங்கையின் மூன்றாவது சர்வதேச விமானநிலையம் ஆரம்பிக்கப்பட்டதை தொடர்ந்து சீனாவிற்கும் இந்தியாவிற்கும் இடையிலான பூகோள அரசியல் அதிகார போட்டியில் இலங்கையின் முன்னர் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட வடபகுதி சிக்குப்பட்டுள்ளது.
ஒக்டோபர்  17 ம் திகதி யாழ்ப்பாணம் சர்வதேச விமானநிலையம் திறக்கப்பட்டமை  ,ஜனாதிபதி தேர்தலில்  மக்களின் வாக்குகளை பெறுவதற்கான ஒரு முயற்சியே  என குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
இந்த தேர்தல் கொழும்பிற்கும்  அதன் இரு கொடையாளர்களிற்கும் இடையிலான உறவுகளில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தவுள்ளது.
நவம்பர் 16 ம் திகதி தேர்தலிற்காக வாக்குகளை பெறும் ஒரு அவசர முயற்சியாகவே இந்த விமானநிலையத்தை அரசாங்கம் ஆரம்பித்துள்ளது என முன்னாள் ஜனாதிபதி தலைமையிலான இலங்கையின் எதிர்கட்சியினர் குற்றம்சாட்டியுள்ளனர்.
எனினும் இந்த குற்றச்சாட்டுகளை நிராகரித்துள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அரசாங்கம்  இந்த விமானநிலையம் மூன்று கட்டங்களாக உருவாக்கப்படவுள்ளது, இதில் முதல்கட்டமே பூர்த்தியாகியுள்ளது என தெரிவித்துள்ளது.


முன்னர் உள்ளுர் விமானநிலையமாக காணப்பட்ட இந்த விமானம் நிலையம் தற்போது சர்வதேச விமானங்களை கையாள்வதற்கு ஏற்ற விதத்தில் தரமுயர்த்தப்பட்டுள்ளது, இந்த விமானநிலையத்தின் முதற்கட்ட தரமுயர்த்தல் பணிகளிற்காக 2.2 பில்லியன் இலங்கை ரூபாய்செலவாகியுள்ளது இதில் 300 மில்லியன் ரூபாய்களை இந்திய அரசாங்கம்நன்கொடையாக  வழங்கியுள்ளது.
இலங்கையின் இரண்டாவது சர்வதேச விமானநிலையத்தை சீனாவின் கடனுடன் முன்னாள் ஜனாதிபதி மகிந்தராஜபக்ச தனது சொந்த ஊரான அம்பாந்தோட்டையில் முன்னெடுத்தார்.
2013இல் திறக்கப்பட்ட இந்த விமானநிலையம் உண்மையில் பணத்தை வீணடித்த ஒரு நடவடிக்கையே,மேலும் எந்த ஒரு வர்த்தக போக்குவரத்து சேவையையும் கையாளாததால் இது உலகின் வெறுமையான விமானநிலையம் என அழைக்கப்படுகின்றது.
யாழ்ப்பாணம் சர்வதேச விமானநிலையத்திற்கும் இந்த அவமானம் ஏற்படலாம்.
இந்த விமானநிலையம் ஆரம்பத்தில் அலையன்ஸ் எயர் இந்தியாவின் விமானசேவைகளை மாத்திரம் கையாளும்.தற்போதைக்கு வேறு எந்த விமானசேவையும் இந்த விமானநிலையத்தை பயன்படுத்தப்போவதாக அறிவிக்கவில்லை.
இந்த விமானநிலைய வீழ்ச்சிகள்  சீனாவிற்கும் இந்தியாவிற்கும் இடையிலான  அதிகார போட்டியின் ஒரு பகுதியாக காணப்படுகின்றன.
இந்தியா இலங்கையை எப்போதும் தனது செல்வாக்கிற்கு உட்பட்ட நாடாhக கருதுவதுடன் பாராம்பரியமாக தனது அயல்நாட்டுடன் நெருங்கிய பொருளாதார உறவுகளை பேணி வருகின்றது.
அதேவேளை இலங்கை சீனாவை மத்திய கிழக்கின் எண்ணெய் உற்பத்தி நாடுகளுடன் இணைக்கும் கடற்பாதையில் உள்ளதால் சீனா பாரிய கடன்கள் மூலதனம் மற்றும் முதலீடுகள் மூலம் இலங்கையை கவருவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளது.
ஆனால் சீனாவின் பிரசன்னம் அதிகரிப்பது இந்தியாவை பதட்டமடையச்செய்துள்ளது,2015 ற்கு முன்னர் காணப்பட்ட மகிந்த ராஜபக்ச அரசாங்கம் வெளிப்படையாக சீனாஆதரவானதாக விளங்கியது ஆனால் தற்போதைய அரசாங்கம் அந்த நிலைப்பாட்டை பின்பற்றவில்லை.
இந்தமாற்றத்தை அவதானித்துள்ள  இந்தியா இலங்கையில் பல பாரிய அபிவிருத்தி திட்டங்களில் முதலீடு செய்துள்ளது.வீடமைப்பு திட்டம்,அவசர அம்புலன்ஸ் போன்ற திட்டங்களிற்கு நிதிவழங்கியுள்ளதுடன் யாழ்ப்பாண சர்வதேச விமானநிலைய திட்டத்திற்கும் நிதி வழங்கியுள்ளது.
மேலும் சீனாவின் செல்வாக்கு அதிகரிப்பதை கட்டுப்படுத்தும் விதத்தில் கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை அபிவிருத்தி செய்வதற்கான உடன்படிக்கையில் இந்தியா ஜப்பானுடன்  ரணில் விக்கிரமசிங்க அரசாங்கம் கைச்சாத்திட்டுள்ளது.
இந்த துறைமுகம் சீனாவின் நிதி உதவியுடன் முன்னெடுக்கப்படும போர்ட்சிட்டி தி;ட்டத்திற்கு அருகிலேயே காணப்படுகின்றது.
இதேவேளை முன்னாள் ஜனாதிபதியின் மகனும் நாடாளுமன்ற உறுப்பினருமானநாமல் ராஜபக்ச  யாழ்ப்பாண சர்வதேச விமானநிலையம் அவசரமாக திறக்கப்பட்டதை  இலங்கைக்கு ஏற்பட்டஅவமானம் என வர்ணித்தார்.
நிக்கி ஏசியன் ரிவியுவிற்கு வழங்கிய பேட்டியில் நாமல் ராஜபக்ச யாழ்ப்பாணம் சர்வதேச விமானநிலையத்தை திறந்தமை நிச்சயமாக அரசியல் நோக்கம் கொண்ட நடவடிக்கை என குறிப்பிட்டார்.
யாராவது விமானநிலையத்திற்கு சென்றால் அதன் உண்மைதன்மையை அவர்கள் அறிந்துகொள்வார்கள் என குறிப்பிட்ட அவர்  விமானநிலையத்தில் உரிய வடிகால் அமைப்பு வசதிகள் இல்லை,மழைபெய்தால் வெள்ளம்நிரம்பிவிடுகின்றது,விமானநிலையம் மோசமான நிலையிலுள்ளது, எனவும்குறிப்பிட்டஅவர் இந்த அரசாங்கம் அரைகுறையாக உருவாக்கப்பட்ட  விமானநிலையத்தை ஏன் திறந்தது என்பதுவெளிப்படையான விடயம் எனவும் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணம் 2015 இல் மகிந்த ராஜபக்சவை அகற்றுவதற்கு  முக்கிய பங்காற்றியுள்ளது.
யாழ்ப்பாணத்தின் அனேக வேட்பாளர்கள் தற்போதைய ஜனாதிபதிக்கு ஆதரவாக வாக்களித்தனர்.
யாழ்ப்பாணம் சர்வதேச விமானநிலையம் குறித்த குற்றச்சாட்டுகளை நிராகரித்த சுற்றுலாப்பயணத்துறைஅமைச்சர் ஜோன் அமரதுங்க பலகாலத்திற்கு முன்னரே விமானநிலையத்திற்கு திட்டமிட்டுள்ளதாக குறிப்பிட்டார்.
புதிய பட்டுப்பாதை குறித்த இலங்கை அமைப்பொன்றை சேர்ந்த மாயா மஜூரன் இலங்கையின் ஜனாதிபதி தேர்தலில் யார் வென்றாலும் இலங்கை குறித்த சீனாவின் ஆர்வம் குறையாது என குறிப்பிட்டார்.
இலங்கையின் பூகோள அமைவிடம்காரணமாக அவர்கள்இலங்கையை விரும்புகின்றனர், யார் வந்தாலும்அவர்கள்  தங்களின் செல்வாக்கிற்கு உட்பட்டவர்களாக மாறுவதையும் தாங்கள் சொல்வதை செய்வதையும் சீனா உறுதிப்படுத்தும்என அவர் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணம் மனேஜர் போரத்தின்  விவேகானந்தன் நிரஞ்சன் அரசாங்கத்தின் நடவடிக்கையை நியாயப்படுத்துகின்றார்.
யாழ்ப்பாணம் விமானநிலையத்தை பொருளாதார அடிப்படையில் பார்க்கவேண்டும்அரசியல் அடிப்படையில் இல்லை என அவர் குறிப்பிடுகின்றார்.
இந்த விமானநிலையத்தின் மூலம் நாங்கள் எங்கள் மக்களிற்கு அதிகளவு சந்தை வாய்ப்புகளை உருவாக்கலாம் என அவர் குறிப்பிடுகின்றார்.
தமிழ்நாட்டில் 70 மில்லியன்  மக்களை கொண்ட சந்தை உள்ளது இதனை நாங்கள் எங்களிற்கு சாதகமாக பயன்படுத்தவேண்டும்  இதன் மூலம் வேலைவாய்பின்மைக்கும் ஏனைய விடயங்களிற்கும் தீர்வைகாணலாம் எனவும்அவர் குறிப்பிடுகின்றார்.
நவம்பர் 16 ம் திகதி இலங்கைக்கு மிகவும் தீர்க்ககரமானதாக விளங்கப்போகின்றது,தேர்தல் முடிவுகள் இலங்கைக்கும் சீனாவிற்கும் இந்தியாவிற்கும் இடையிலான உறவுகளில் முக்கிய தாக்கத்தை செலுத்தப்போகின்றன.  நன்றி வீரகேசரி 
   

No comments: