உலகச் செய்திகள்


கலைக்கப்பட்டது பிரித்தானிய பாராளுமன்றம்!

பிரான்ஸில் லொறியொன்றில் மறைந்து பயணித்த 31 பாகிஸ்தானிய குடியேற்றவாசிகள் மீட்பு

16 அடி உயர புத்தர் சிலை திரைநீக்கம் செய்யும் போது விபரீதம் ; மதத் தலைவர் பலி

ட்ரம்பிற்கு 2 மில்லியன் அபராதம்!

தலைமுடியை துண்டித்து பெண் மேயரை வீதியில் இழுத்துச்சென்ற ஆர்ப்பாட்டக்காரர்கள்- பொலிவியாவில் தேர்தலிற்கு பின்னர் தொடர்கின்றது வன்முறை

கர்தார்பூர் வழித்தடம்; இம்ரான் கானின் அறிவிப்பை மறுத்த அந் நாட்டு இராணுவம்!

ராமர் ஜென்ம பூமியா- பாபர் மசூதியா? - முக்கிய தீர்ப்பை வழங்கியது இந்திய நீதிமன்றம்

அயோத்தியில் ராமர் கோயில் கட்டலாம்- இஸ்லாமியர்களிற்கு வேறு இடத்தை வழங்கவேண்டும்- இந்திய நீதிமன்றம்- இரண்டாம் இணைப்பு


கலைக்கப்பட்டது பிரித்தானிய பாராளுமன்றம்!

06/11/2019 பிரித்தானிய பாராளுமன்றம் செவ்வாய்க்கிழமை நள்ளிரவில் அதன் கலைப்பை அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
அடுத்த 25 நாட்களுக்கு, பிரித்தானிய சட்டமன்ற நடவடிக்கைகள் எதுவும் இருக்காது எனவும் அரசாங்கம் ஒரு சிறப்பு விதிகளின் கீழே செயற்படும் எனவும் அந் நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

பிரித்­தா­னிய தேர்­தலை எதிர்­வரும் டிசம்பர் 12 ஆம் திகதி நடத்­துவதற்கான  பிர­தமர் போரிஸ் ஜோன்­ஸனின் திட்­டத்­திற்கு அந்­நாட்டுப் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் கடந்த 30 ஆம் திகதி ஆதரவளித்­திருந்தனர்.
தேர்­தலை முன்­கூட்­டியே நடத்­து­வ­தற்­கான மேற்­படி சட்­ட­மூ­லத்­திற்கு  பிரித்­தா­னிய பாரா­ளு­மன்ற பிர­தி­நி­திகள் சபையைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்­பி­னர்கள் 20 வாக்­கு­க­ளுக்கு 438 வாக்­குகள்  வித்­தியாசத்தில் அங்­கீ­கா­ர­ம­ளித்­திருந்தனர்.
மேற்­படி வாக்­கெ­டுப்­பா­னது பிரித்­தா­னி­யாவில் 1923 ஆம் ஆண்­டிற்குப் பின்னர் முதல் தட­வை­யாக டிசம்பர் மாதத்தில் தேர்தல் நடத்­தப்­ப­டு­வதற்கு வழி­வகை செய்­துள்­ளது.
இந்தத் தேர்­தலில் பிரித்­தா­னிய மக்கள் பிரித்­தா­னியா ஐரோப்­பிய ஒன்றி­யத்­தி­லி­ருந்து பிரி­வது தொடர்­பான பிரெக்ஸிட் செயற்­கி­ரமம் மற்றும் நாட்டின் எதிர்­காலம் என்­பன குறித்து தெரி­வொன்றை மேற்கொள்ள வேண்டும் என  பிர­தமர் போரிஸ் ஜோன்ஸன் வலி­யு­றுத்­தி­யுள்ளார்.
மேற்­படி தேர்தல் தனது பிறிக்ஸிட்  உடன்­ப­டிக்­கையை  நிறை­வேற்­று­வ­தற்கு புதிய ஆணை­யையும்  பிரித்­தா­னியா ஐரோப்­பிய ஒன்­றி­யத்­தி­லி­ருந்து வில­கு­வ­தற்­கான காலக்­கெ­டுவை எதிர்­வரும்  வருடம் ஜன­வரி மாதம் 31 ஆம் திகதிவரை  தாம­தப்­ப­டுத்தக் கார­ண­மா­க­வி­ருந்த பாரா­ளு­மன்­றத்­தி­லான முட்­டுக்­கட்­டை­களை நீக்­கவும் வழி­வகை செய்யும் என போரிஸ் ஜோன்ஸன் எதிர்­பார்த்­துள்ளார்.
பிரெக்ஸிட் செயற்­கி­ரமம்  நிறை­வேற்­றப்­ப­டு­வ­தற்­காக நாடு ஒன்­றி­ணைய வேண்­டிய தருணம் இது­வாகும்  என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பிரெக்ஸிட்டிற்கு எதிர்ப்புத் தெரி­வித்­த­மைக்­காக கட்­சி­யி­லி­ருந்து வெளியேற்­றப்­பட்ட 21  பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களில் 10 உறுப்­பி­னர்­க­ளுக்கு பழை­மை­வாதக் கட்சி வேட்­பா­ளர்­க­ளாகப் போட்­டி­யி­டு­வ­தற்கு அனு­ம­திக்­கப்­ப­ட­வுள்­ள­தாக போரிஸ் ஜோன்ஜன் தெரி­வித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.  நன்றி வீரகேசரி 











பிரான்ஸில் லொறியொன்றில் மறைந்து பயணித்த 31 பாகிஸ்தானிய குடியேற்றவாசிகள் மீட்பு

04/11/2019 தென் பிரான்ஸில் லொறி­யொன் றில் மறைந்­தி­ருந்த நிலையில்  பய­ணம்­செய்த பாகிஸ்­தானைச் சேர்ந்த 31 சட்­ட­வி­ரோத குடி­யேற்­ற­வா­சிகள் மீட்­கப்­பட்­டுள்­ள­தாக பிரான்ஸ் அதி­கா­ரிகள் நேற்று முன்­தினம் சனிக்­கி­ழமை தெரி­வித்­துள்­ளனர்.
இத­னை­ய­டுத்­து­ அந்த லொறியின் சார­தி­யான பாகிஸ்­தா­னிய பிரஜை கைது­ செய்­யப்­பட்­டுள்ளார்.
இத்­தா­லிய எல்­லைக்கு அண்­மை­யிலுள்ள வீதியில்  மேற்­கொள்­ளப்­பட்ட வழ­மை­யான பரி­சோ­தனை நட­வ­டிக்­கை­யொன்றின் போது குறிப்­ பிட்ட லொறியில் உயி­ரா­பத்­தான நிலையில்  அந்தக் குடி­யேற்­ற­வா­சி கள் மறைந்­தி­ருப்­பது கண்­டு­பி­டிக்­கப்­பட்­டது.
கடந்த மாதம் பிரித்­தா­னி­யாவில்  குளிர்­சா­தன லொறி­யொன்­றி­லி­ருந்து 39 சட்­ட­வி­ரோத குடி­யேற்­ற­வா­சிகள்  குளிரில் விறைத்து சட­லங்­க­ளாக மீட்­கப்­பட்­டி­ருந்த நிலையில் மேற்­படி குடி­யேற்­ற­வா­சி­களின் மீட்பு குறிப்­பி­டத்­தக்­கது.  உயி­ரா­பத்து மிக்க பயணம் என் பதை நன்கு உணர்ந்தும்  சுபீட்­ச­மான எதிர்­கால வாழ்வை நாடி ஐரோப்­பிய நாடு­க­ளுக்கு அபா­ய­மிக்க பய­ணத்தை மேற்­கொள்ளும் முயற்­சிகள் தொடர்ந்து இடம்பெற்று வருவ­தாக அதி­கா­ரிகள் தெரி­விக்­கின்­றனர்.
அந்தக் குடியேற்றவாசிகளில் இரு இளவயதினர் குடிவரவு செயற் கிரமங்களுக்கு அமைய இத்தாலிய அதிகாரிகளிடம் கையளிக்கப்பட் டுள்ளனர்.  நன்றி வீரகேசரி 









16 அடி உயர புத்தர் சிலை திரைநீக்கம் செய்யும் போது விபரீதம் ; மதத் தலைவர் பலி

07/11/2019 தாய்­லாந்தில் 16 அடி உய­ர­மான பாரிய புத்தர் சிலை­யொன்றை திரை­நீக்கம் செய்­து­வைக்க கௌரவ அதி­தி­யாக சென்ற  மதத் தலைவர் ஒருவர் அந்த சிலை சரிந்து விழுந்­ததால்  அதன் கீழ் சிக்கி  பரி­தா­ப­க­ர­மாக உயி­ரி­ழந்­துள்ளார்.


கொன் கேன் எனும் இடத்தில் கடந்த திங்­கட்­கி­ழமை பிற்­பகல் இடம்­பெற்ற இந்த சம்­பவம் குறி த்து நேற்று புதன்­கி­ழமை தக­வல் கள் வெளியா­கி­யுள்­ளன.
சம்­பவ தினம் கிராம மதத் தலை­ வ­ரான சமன் சாந்­த­ஜோதி (52 வயது) குறிப்­பிட்ட புத்தர் சிலையை  வைபவ ரீதி­யாக திறந்து­வைப் ­ப­தற்கு சென்­றுள்ளார். இதன்­போது அந்த சிலை அவர் மீது சரிந்து விழுந்­ததால் அதன் கீழ் சிக்கி நசுங்­குண்டு அவர் உயி­ரி­ழந்­துள்ளார்.
அவ­ரது சட­லத்தை அந்தப் பாரிய சிலையின் கீழி­ருந்து மீட்க மீட்புப் பணி­யா­ளர்கள்  கடும் போரா ட்­டத்தை எதிர்­கொள்ள நேர்ந்த­ தாகத் தெரி­விக்­கப்­ப­டு­கிறது. அந்த சிலையை  பிராந்­தி­யத்தில் வசிக் கும் மக்­க­ளுக்கு சுபீட்­சத்­தையும் அதிர்ஷ்­டத்­தையும் தரு­வ­தற்­காக ஸ்தாபிக்க நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்­டி­ருந்­தது. இந்­நி­லையில் சிலையை திறந்து ­வைக்கச் சென்ற மத­குரு அந்த சிலையை மூடி­யி­ருந்த துணியை இழுத்து அதனைத் திரை­நீக்கம் செய்து வைக்க முயன்றபோது அந்த சிலையின் அடித்­த­ளத்தில் விரிசல் ஏற்­பட்டு அந்தச் சிலை அவரின் தலையின் மீது விழுந்து அவரை தரை­யோடு தரை­யாக நசுக்­கி­யுள்­ளது.
சிலை திடீ­ரென சரிந்து விழு­வ தைப் பார்த்த அங்கு கூடி­யி­ருந்த மக்கள் பீதி­ய­டைந்து நாலா­பு­றமும் சித­றி­யோ­டி­ய­தாக அங்­கி­ருந்து வரும் செய்­திகள் தெரி­விக்­கின்­றன.
அந்த சிலை ஸ்தாபிக்­கப்­பட்­டி ­ருந்த கொங்­கிறீட் அடித்­தளம் உறு­தி­யற்று இருந்­ததே இந்த அனர்த்­தத்­திற்குக் காரணம் எனத் தெரி­விக்­கப்­ப­டு­கி­றது. இந்­நி­லையில் மேற்­படி சம்­பவம் குறித்து பிராந்­திய பொலிஸார் தீவிர விசா­ர­ணை­களை முன்­னெ­டுத்­துள்­ளனர்.  நன்றி வீரகேசரி 










ட்ரம்பிற்கு 2 மில்லியன் அபராதம்!

08/11/2019 நிதிமோசடி செய்த குற்றச்சாட்டிற்காக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பிற்கு 2 மில்லியன் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் 'டொனால்ட் ஜே டிரம்ப் பவுண்டேஷன்' எனும் அறக்கட்டளையை நடத்தி வருகிறார். 
கடந்த 2016 ஆம் ஆண்டு அமெரிக்க அதிபர் தேர்தலின் போது இந்த அறக்கட்டளையின் நிதியை முறைகேடான வகையில், தேர்தல் செலவுகளுக்கு பயன்படுத்தியதற்காக நியூயார்க் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. 
இந்த விசாரணையில், டிரம்ப் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டதால், அதற்கான தண்டனையாக அவருக்கு இரண்டு மில்லியன் அமெரிக்க டாலர் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. 
மேலும் டிரம்ப் அபராதமாக செலுத்தும் பணம், அவருடன் தொடர்பில்லாத எட்டு தொண்டு நிறுவனங்களுக்கு பகிர்ந்து வழங்கப்பட வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.  நன்றி வீரகேசரி 













தலைமுடியை துண்டித்து பெண் மேயரை வீதியில் இழுத்துச்சென்ற ஆர்ப்பாட்டக்காரர்கள்- பொலிவியாவில் தேர்தலிற்கு பின்னர் தொடர்கின்றது வன்முறை

08/11/2019 பொலிவியாவில்  பெண்மேயரின் தலைமுடியை கத்தரித்து அவரது உடலில் வர்ணம்பூசி வீதியால் ஆர்ப்பாட்டக்காரர்கள் இழுத்துசென்ற சம்பவம் இடம்பெற்றுள்ளது.
பொலிவியாவில்  இடம்பெற்ற தேர்தலின் பின்னர் அந்த நாட்டில் மோசமான வன்முறை மூண்டுள்ள நிலையிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
அரசாங்கத்திற்கு எதிராக போராடி வரும் ஆர்ப்பாட்டக்காரர்கள் வின்டோ நகரில் பாலமொன்றை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டவேளை அவர்களின் இரு ஆதரவாளர்கள் அரச தரப்பினரால் கொல்லப்பட்டுள்ளனர் என வதந்திபரவியுள்ளது.
இதனை தொடர்ந்து வின்டோ நகரில் மாநாகரசபையின் தலைமை அலுவலகத்திற்குள் நுழைந்த  கும்பலொன்று மாநகரமேயர் பட்ரீசியா ஆர்சினை வீதியில் இழுத்துச்சென்றதுடன் மாநாகரசபையின் தலைமை அலுவலகத்தை தீயிட்டுக்கொழுத்தியுள்ளது  என அதிகாரிகள்  தெரிவித்துள்ளனர்.
மேயர் அரசாங்கத்திற்கு ஆதரவாக செயற்படுகின்றார் என தெரிவித்த ஆர்ப்பாட்டக்காரர்கள் அவரை இழுத்துச்சென்று பாலத்தில் நிற்கவைத்துதலைமுடியை துண்டித்துள்ளனர்.
மேயர்தலைமுடி துண்டிக்கப்பட்ட உடல் முழுவதும் பெயின்ட் பூசப்பட்ட நிலையில் காணப்படுவதை காண்பிக்கும் படங்கள்வெளியாகியுள்ளன.
அவரை வெறுங்காலுடன்  இழுத்துச்சென்றார்கள் பின்னர் காவல்துறையினர் அவரைமீட்டனர்என அதிகாரிகள்  தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவத்திற்கு ஜனாதிபதி இவா மோரலெஸ் கடும் கண்டனம் வெளியிட்டுள்ளார்.
மேயர் தனது கொள்கைகளையும் வறியவர்களின்  நலன்களையும் பாதுகாத்தமைக்காக ஈவிரக்கமற்ற முறையில்  நடத்தப்பட்டுள்ளார் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
பொலிவியாவின் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படுவது  24 மணித்தியாலங்களிற்கு ஒத்திவைக்கப்பட்ட தருணம் முதல் அந்த நாட்டில் வன்முறை மூண்டுள்ளது.
தேர்தல் முடிவுகள் வெளியாவது ஒத்திவைக்கப்பட்டதை தொடர்ந்து ஜனாதிபதி இவா  மொரெலெஸ் மோசடியில் ஈடுபட்டுள்ளார் என்ற சந்தேகம் எழுந்தது.
இந்நிலையில் இறுதி முடிவுகள் அறிவிக்கப்பட்டன- தற்போதையஜனாதிபதி பத்து வீத வாக்குகளால் வெற்றிபெற்றார் என அறிவிக்கப்பட்டது.

எனினும் எதிர்கட்சியினர் இதனை ஏற்க மறுத்துவருகின்றனர்.  நன்றி வீரகேசரி 












கர்தார்பூர் வழித்தடம்; இம்ரான் கானின் அறிவிப்பை மறுத்த அந் நாட்டு இராணுவம்!

07/11/2019 பாகிஸ்தானின் கர்தார்பூர் வழித்தடம் நாளை மறுதினம் திறக்கப்படும் நிலையில் இந்தியாவில் இருந்து வரும் யாத்ரீகர்களுக்கு கடவுச்சீட்ட தேவையில்லை என அந் நாட்டு பிரதமர் இம்ரான் கான் அறிவித்துள்ளார்.
இந் நிலையில் அதனை ஏற்க மறுத்த பாகிஸதான் இராணுவம், இந்திய யாத்ரீகர்கள் அனைவரும் கட்டாயம் கடவுச்சீட்டு கொண்டு வர வேண்டும் திடீர் அறிவிப்பு செய்துள்ளது.
பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் அமைந்துள்ள பகுதி கர்தார்பூர். சீக்கிய மதத்தை தோற்றுவித்தவரான குருநானக் தேவ், தமது இறுதி காலத்தை இங்கு கழித்ததாக வரலாற்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதனால், அவரது நினைவாக கர்தார்பூரில் பல நூற்றாண்டுகளுக்கு முன்பு ‘தர்பார் சாஹிப்' என்ற பெயரில் குருத்வாரா அமைக்கப்பட்டது.
இந்த குருத்வாராவுக்கு செல்வது என்பது சீக்கியர்களின் கடமைகளில் ஒன்றாக வரையறுக்கப்பட்டிருக்கிறது. எனினும், பாகிஸ்தானுக்கு விசா வாங்கி செல்வதில் பல்வேறு சிரமங்கள் இருந்ததால் கர்தார்பூர் குருத்வாராவுக்கும் இடையே வழித்தடம் அமைக்க இருதரப்பிலும் முடிவு செய்யப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, இந்தியா - பாகிஸ்தான் இடையே கர்தார்பூர் வழித்தடம் அமைக்கும் பணி நடந்து வருகிறது. கர்தார்பூர் வழித்தடத்தை பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் நாளை மறுதினம் திறந்து வைக்கிறார். 
இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க வருமாறு இந்திய அரசியல் கட்சித் தலைவர்கள், பிரபலங்களுக்கு பாகிஸ்தான் அழைப்பு விடுத்துள்ளது.
கர்தார்பூர் வழித்தட நிகழ்ச்சியில் பங்கேற்க வரும் சீக்கிய பக்தர்களுக்கு முதல் நாள் கட்டணம் ஏதும் வசூலிக்கப்படாது, கடவுச்சீட்டு தேவையில்லை, 10 நாட்களுக்கு முன்பு பதிவு செய்தால் போதும் என இம்ரான் கான் அறிவித்தார்.
எனினும் அதனை ஏற்க பாகிஸ்தான் இராணுவம் மறுத்துள்ளது. இந்திய யாத்ரீகர்கள் அனைவரும் கட்டாயம் கடவுச்சீட்டு கொண்டு வர வேண்டும் என பாகிஸ்தான் இராணுவ திடீர் அறிவிப்பு செய்துள்ளது. 
இதையடுத்து கடவுச்சீட்டு தேவையா என்பதை பாகிஸ்தான் உறுதிப்படுத்த வேண்டும் என இந்திய அரசாங்கம் கேட்டுக் கொண்டுள்ளது.   நன்றி வீரகேசரி 











ராமர் ஜென்ம பூமியா- பாபர் மசூதியா? - முக்கிய தீர்ப்பை வழங்கியது இந்திய நீதிமன்றம்

09/11/2019 இந்தியாவின் சர்ச்சைக்குரிய பாபர் மசூதி கட்டப்படும் முன்னர் அங்கிருந்த இடம் இஸ்லாமிய கட்டுமானம் இல்லை என்ற  தீர்ப்பை இந்திய  உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
உத்தரபிரதேசம் அயோத்தியில் பாபர் மசூதி இராமர்ஜென்ம பூமி அமைந்துள்ள இடம் யாருக்கு என்பது குறித்து இந்திய நீதிமன்றம் இன்று வழங்கியுள்ளது.
குறிப்பிட்டநிலத்திற்கு உரிமை கோரி சியாபு வக் வாரியம் தாக்கல் செய்திருந்த மனுவை நீதிமன்றம் நிராகரித்துள்ளது.
இந்த தீர்ப்பில்  வெறுமையாக காணப்பட்ட இடத்தில் பாபர் மசூதி கட்டப்படவில்லை என இந்திய நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
அயோத்தி இராமர் பிறந்த இடம் என்பது இந்துக்களின் வாதம்,அந்தஇடம் பாபர் மசூதி இருந்த இடம் இஸ்லாமியர்களின் வாதம் என தெரிவித்துள்ள நீதிமன்றம் பாபர் மசூதி கட்டப்படும் முன்னர் அங்கு காணப்பட்ட இடம் இஸ்லாமிய கட்டுமானம் இல்லை எனவும் தெரிவித்துள்ளது.
 ஆவணங்களின் படி அந்த நிலம் அரசுக்கு சொந்தமானது என தெரிவித்துள்ள நீதிமன்றம் ஒரு மத நம்பிக்கை பிற மத நம்பிக்கையை தடுப்பதாகயிருக்ககூடாது, மதங்களில் இருக்கும் நடுநிலைமையை  நீதிமன்றம் மதிக்கின்றது- மதநடுநிலைமையே இந்திய அரசமைப்பின்  முக்கிய பண்பு- நடுநிலைமையை காக்கும் பொறுப்பு நீதிமன்றத்திற்கு உள்ளது எனவும் தெரிவித்துள்ளது.
நீதிபதிகள் ஐவரும் இந்த ஒருமித்த தீர்ப்பைவழங்கியுள்ளனர்.   நன்றி வீரகேசரி 









அயோத்தியில் ராமர் கோயில் கட்டலாம்- இஸ்லாமியர்களிற்கு வேறு இடத்தை வழங்கவேண்டும்- இந்திய நீதிமன்றம்- இரண்டாம் இணைப்பு

09/11/2019 அயோத்தியில் சர்ச்சைக்குரிய2.27 ஏக்கர் நிலத்தில் ராமர் கோயில்கட்டலாம் என இந்திய உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
உத்தரபிரதேசம் அயோத்தியில் பாபர் மசூதி இராமர்ஜென்ம பூமி அமைந்துள்ள இடம் யாருக்கு என்பது குறித்து இந்திய நீதிமன்றம் இன்று வழங்கியுள்ளது
அந்த இடத்தில் ராமர் கோயிலை கட்ட மத்திய அரசாங்கம்  ஒரு அமைப்பை உருவாக்கவேண்டும் எனவும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
இஸ்லாமியர்கள்  புதிய மசூதியை கட்டுவதற்கு நிலத்தை வழங்கவேண்டும் எனவும்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பாபர் மசூதி இருக்கும் இடம் முழுக்க முழுக்க தங்களிற்கு சொந்தமானது என்பதை இஸ்லாமியர்கள் நிரூபிக்க தவறிவிட்டனர் என இந்திய நீதிமன்றம் அறிவித்துள்ளது.   நன்றி வீரகேசரி 












No comments: