29/07/2017 இலங்கை அக­தி­களை கன­டா­விற்கு கடத்தி வந்­த­தாக தெரி­வித்து குற்­றச்­சாட்டை எதிர்­நோக்­கி­யி­ருந்த நான்கு தமி­ழர்­களை அந்த வழக்­கி­லி­ருந்து அந்­நாட்டு உயர் நீதி­மன்றம் விடு­தலை செய்­துள்­ளது.
பிரான்சிஸ் அந்­தோ­னி­முத்து அப்­பு­லோ­னப்பு, கமல்ராஜ் கந்­த­சாமி, ஜெயச்­சந்­திரன் கன­கராஜ், விக்­ன­ராஜா தேவராஜ் ஆகிய நால்­வரே இவ்­வாறு ஆட்­க­டத்தல் வழக்கில் இருந்து விடு­விக்­கப்­பட்­டுள்­ளனர்.
இது குறித்து வழக்கு விசா­ரணை நேற்று கனே­டிய உயர் நீதி­மன்றில் இடம்­பெற்­றது.
இதன் போது கன­டாவில் அடைக்­கலம் தேடும் அக­தி­களை இலாப நோக்கில் கடத்­து­வ­தற்கு இவர்கள் பொறுப்­பாக இருந்­தனர் என அர­ச­த­ரப்பு சட்­டத்­த­ரணி மன்றில் தெரி­வித்தார்.
எனினும், சந்­தே­க­ந­பர்கள் மீதான குற்­றச்­சாட்டு நிரூ­பிக்­கப்­ப­ட­வில்லை என தெரி­வித்த நீதி­பதி ஆர்னே சில்­வர்மன், அவர்­களை வழக்கில் இருந்து விடு­தலை செய்­துள்ளார்.
இதே­வேளை, 2009ஆம் ஆண்டு ஒக்­டோபர் மாதம் ஓசன் லேடி கப்பல் 79 தமிழர்களுடன் கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா கரையை அடைந்தமை குறிப் பிடத்தக்கது.  நன்றி வீரகேசரி