உலகச் செய்திகள்


14 வது ஜனாதிபதியாக பதவியேற்றார் ராம்நாத் கோவிந்த்

75 மைல் தூரம் பய­ணித்து எதி­ரி­களின் விமா­னங்­களை தாக்கக் கூடிய புதிய வகை ஏவு­கணை

பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீஃப் பதவி விலகினார்

சற்றுமுன் மாலைதீவின் பாராளுமன்றம் இராணுவத்தால் அதிரடி சுற்றிவளைப்பு









14 வது ஜனாதிபதியாக பதவியேற்றார் ராம்நாத் கோவிந்த்

25/07/2017 முப்படை அணிவகுப்புடன் டெல்லியில் நடைபெற்ற கோலாகல விழாவில் இந்தியாவின் 14 வது ஜனாதிபதியாக ராம்நாத் கோவிந்த் இன்று பதவி ஏற்றார்.
ஜனாதிபதியாக இருந்த பிரணாப் முகர்ஜியின் பதவி காலம் முடிந்தததைத் தொடர்ந்து புதிய ஜனாதிபதியை தேர்வு செய்ய கடந்த 17ஆம் திகதி தேர்தல் நடைப்பெற்றது.
இந்த தேர்தலில் ஆளும் பா.ஜனதா கட்சி சார்பில் ராம்நாத் கோவிந்த், எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக மீராகுமார் போட்டியிட்டனர்.
கடந்த 20 ஆம் திகதி வாக்குகள் எண்ணப்பட்டன. இதில் ராம்நாத் கோவிந்த் 62 சதவீத வாக்குகள்; பெற்று வெற்றி பெற்றார். இதைத் தொடர்ந்து புதிய ஜனாதிபதி பதவி ஏற்பு விழாவுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன.  
இன்று காலை நாட்டின் 14 வது ஜனாதிபதி பதவி ஏற்பு விழா நிகழ்ச்சிகள் தொடங்கியது. இதையொட்டி டெல்லியில் ஜனாதிபதி மாளிகை மற்றும் பாராளுமன்ற வளாகம் கோலாகலமாக காணப்பட்டன. பலத்த பாதுகாப்புடன் ஜனாதிபதி பதவி ஏற்பு விழா நடந்தது.
முதலில் புதிய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஜனாதிபதி மாளிகை முன்புறம் உள்ள மைதானத்துக்கு அழைத்து வரப்பட்டார். இராணுவ செயலாளர் தலைமையில் அவர் அழைத்து வரப்பட்டார். அங்கு அவருக்கு இராணுவ வீரர்கள் அணிவகுத்து நின்று மரியாதை கொடுத்தனர்.
பிறகு ராம்நாத் கோவிந்த் ஜனாதிபதி மாளிகைக்குள் சென்றார். அங்கு அவரும் பிரணாப் முகர்ஜியும் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தனர். பிறகு இருவரும் பதவி ஏற்பு விழா நடைபெறும் இடத்துக்கு புறப்பட்டனர்.
குதிரைப்படை அணி வகுப்பு செல்ல ராம்நாத் கோவிந்தும், பிரணாப் முகர்ஜியும் பாரம்பரிய காரில் அழைத்து வரப்பட்டனர். ஜனாதிபதி மாளிகையில் இருந்து பாராளுமன்ற வளாகம் வரை அவர்கள் அழைத்து வரப்பட்ட காட்சி கண்களை கவரும் வகையில் அமைந்திருந்தது.
பாராளுமன்ற வாசலில் அவர்கள் இருவருக்கும் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. துணை ஜனாதிபதி ஹமீத்அன்சாரி, அவர்கள் இருவரையும் வரவேற்று பாராளுமன்றத்துக்குள் அழைத்து சென்றார்.
இதைத் தொடர்ந்து பிற்பகல் 12.15 மணிக்கு பாராளுமன்ற மைய மண்டபத்தில் புதிய ஜனாதிபதி பதவி ஏற்பு விழா நடந்தது. பிரணாப் முகர்ஜியும், ராம்நாத் கோவிந்தும் அவர்களுக்குரிய இருக்கையில் அமர்ந்தனர்.
இதையடுத்து புதிய ஜனாதிபதி பதவி ஏற்பார் என்று அறிவிக்கப்பட்டது. உடனே ராம்நாத் கோவிந்த் அனைவருக்கும் வணக்கம் தெரிவித்து விட்டு பதவி ஏற்றார்.
அவருக்கு மேல்முறையீட்டு நீதிமன்ற தலைமை நீதிபதி ஜே.எஸ்.கேஹர் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். அதன்பின் அவர் அதற்கான கோப்பில் கையொப்பமிட்டார்.
பதவி ஏற்று முடித்ததும் மீண்டும் அவர் பாராளுமன்ற மைய மண்டபத்தில் திரண்டிருந்தவர்களுக்கு நன்றியும் வணக்கமும் தெரிவித்தார். பின்னர் அவரும் பிரணாப் முகர்ஜியும் இருக்கை மாற்றி அமர்ந்தனர். புதிய ஜனாதிபதி பதவி ஏற்றபின் பாரம்பரிய சம்பிரதாயமாக இது கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
பதவி ஏற்பு விழாவில் பிரதமர் மோடி, பா.ஜ.க. தலைவர் அமித்ஷா, மத்திய மந்திரிகள், காங்கிரஸ் தலைவர் சோனியா மற்றும் அனைத்துக் கட்சி தலைவர்களும் கலந்து கொண்டனர். தமிழ்நாட்டில் இருந்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் பங்கேற்றனர். வெளிநாட்டு தூதர்கள், முக்கிய பிரமுகர்களும் விழாவுக்கு அழைக்கப்பட்டிருந்தனர்.
பதவி ஏற்பு விழா முடிந்ததும் புதிய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஜனாதிபதி மாளிகைக்கு அழைத்து செல்லப்பட்டார். அவருக்கு ஜனாதிபதி மாளிகையில் பாதுகாப்பு வீரர்கள் அணி வகுத்து நின்று உற்சாக வரவேற்பு கொடுத்தனர்.
அவரைத் தொடர்ந்து பிரணாப் முகர்ஜியும் ஜனாதிபதி மாளிகைக்கு வந்தார். அவர் புதிய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்துக்கு ஜனாதிபதி மாளிகையை சுற்றிக் காண்பித்தார். முக்கிய இடங்கள் பற்றிய குறிப்புகளை தெரிவித்தார்.
பதவியேற்றுக்கொண்ட ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பாராளுமன்ற உறுப்பினர்களிடையே இந்தியில் உரையாற்றி வருகிறார். நன்றி வீரகேசரி 














75 மைல் தூரம் பய­ணித்து எதி­ரி­களின் விமா­னங்­களை தாக்கக் கூடிய புதிய வகை ஏவு­கணை

24/07/2017 ஈரா­னா­னது 75  மைல் தூரம் பய­ணித்து   எதி­ரி­களின் போர் விமா­னங்­களைத்  தாக்கக் கூடிய புதிய வகை ஏவு­க­ணை­யொன்றின்  உற்­பத்­தியை  ஆரம்­பித்­துள்­ளது.
அந்த  சேயத் – -3 ஏவு­க­ணை­யா­னது 17  மைலுக்கும் அதி­க­மான  உய­ரத்­தி­லுள்ள இலக்கைத் தாக்கக் கூடி­ய­தாகும்.
இது தொடர்பில் அந்­நாட்டு வான் பாது­காப்புத்  தலைவர் பிறி­கே­டியர் ஜெனரல் பர்ஸாத் இஸ்­மா­யிலால்  வைப­வ­மொன் றில் அறி­விக்­கப்­பட்­டது.
உள்­நாட்டில் தயா­ரிக்­கப்­பட்ட மேற்­படி ஏவு­க­ணை­யா­னது  ஒரே­ச­ம­யத்தில்  30  இலக்­கு­களை இனங்­கண்டு  அவற்றில் 12  இலக்­குகளை ஒரே­ச­ம­யத்தில் தாக்கக் கூடி­யது என அவர் கூறினார்.
இந்த ஏவு­கணை  ஆளற்ற விமானங்கள், ஏவு­க­ணைகள்,  உலங்­கு­வானூர்­திகள் மற்றும் பல்­வேறு  தரப்­பட்ட விமா­னங்கள்  என்­ப­வற்றை இலக்­கு­வைத்து தாக் கக் கூடி­ய­தாகும் என அவர்  மேலும்  தெரி­வித் தார்.
மேற்படி ஏவு­கணையானது கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம்  ஸ்தாபிக்­கப்­பட்ட  ரஷ்­யாவில் நிர்­மா­ணிக்­கப்­பட்ட எஸ் – -300  வான் பாது­காப்பு முறை­மையை உள்­ள­டக்­கிய  ஈரா­னிய   ஏவு­கணைத் தொகு­தி­யுடன்  இணைந்து கொள்­கின்­றமை குறிப்­பி­டத்­தக்­கது. 
பிராந்­தி­யத்­தி­லான அமைதி மற்றும் பாது­காப்பை  உறு­திப்­ப­டுத்­தவே இந்த  புதிய ஏவு­கணை முறைமை  உரு­வாக்­கப்­பட்­டுள்­ள­தாக  ஈரா­னிய அதி­கா­ரிகள் தெரி­விக்­கின்­றனர்.  நன்றி வீரகேசரி













பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீஃப் பதவி விலகினார்

28/07/2017 பாகிஸ்தான் உச்சமன்ற தீர்ப்பையடுத்த அந்நாட்டின் பிரதமர் நவாஷ் ஷெரீஃப் பிரதமர் பதவியிலிருந்து இராஜினாமா செய்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

பானாமா பேப்பர்ஸ் ஊழல் வழக்கில் நவாஸ் செரீப் சட்டவிரோதமாக சொத்து சேர்த்தமை நிரூபணமாகியதால் பாகிஸ்தான் பிரதமர் பதவியிலிருந்து அவர் தகுதி நீக்கம் செய்யப்படுவதாக பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ள நிலையிலேயே நவாஸ் ஷெரீஃப் தனது பதவியிலிருந்து விலகியுள்ளார். நன்றி வீரகேசரி











சற்றுமுன் மாலைதீவின் பாராளுமன்றம் இராணுவத்தால் அதிரடி சுற்றிவளைப்பு

24/07/2017 மாலைதீவின் பாராளுமன்றம் இராணுவத்தால் சுற்றி வளைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. 
குறித்த நடவடிக்கை அந்த நாட்டு ஜனாதிபதி அப்துல்லா யாமினின் உத்தரவிற்கமைய எடுக்கப்பட்டுள்ளதாக அந்த நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மாலை தீவு சபாநாயகர் அப்துல்லா மஸிக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள நம்பிக்கையில்லா பிரேரணை மீதான வாக்கெடுப்பில் பாராளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொள்ள முடியாத வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதியின் இந்த நடவடிக்கை சட்டவிரோதமானது என அந்நாட்டு எதிர்க்கட்சி குற்றம் சுமத்தியுள்ளது.
இதேவேளை, மாலைதீவில் ஜனாதிபதி ஆட்சி இடம்பெறுகின்ற நிலையில், சபாநாயகருக்கொதிராக கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணையே குறித்த முற்றுகைக்கு காரணம் என தொிவிக்கப்படுகின்றது.  நன்றி வீரகேசரி


No comments: