ஜெயமோகன் சிறுகதைக்கு சர்வதேசப் பரிசு!

.

தைவானிலிருந்து வெளிவரும் அஸிம்டோட் (Asymptote) இலக்கிய இதழ் உலக இலக்கிய மொழிபெயர்ப்புகளைத் தொடர்ந்து அறிமுகப்படுத்திவருகிறது. சமீபத்தில் இந்த இதழ் நடத்திய சிறுகதைப் போட்டியில் முதல் பரிசை வென்றிருக்கிறது ஜெயமோகனின் ‘பெரியம்மாவின் சொற்கள்’ சிறுகதை. இந்தக் கதையைத் தமிழிலிருந்து ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்திருப்பவர் சுசித்ரா ராமச்சந்திரன். 20-க்கும் மேற்பட்ட நாடுகளிலிருந்து பரிந்துரைக்கப்பட்ட 215 சிறுகதைகளிலிருந்து ஜெயமோகனின் சிறுகதையை முதல் பரிசுக்குரியதாகத் தேர்ந்தெடுத்திருப்பவர் விமர்சகர் டேவிட் பெல்லோஸ்.
ஜெயராணி, திவ்யா பாரதிக்கு பெரியார் சாக்ரடீஸ் விருது!



பெரியாரியரும் பத்திரிகையாளருமான பெரியார் சாக்ரடீஸை நினைவுகூரும் வகையில் வழங்கப்பட்டுவரும் ‘பெரியார் சாக்ரடீஸ் நினைவு விருது - 2017`க்குப் பத்திரிகையாளர் ஜெயராணியும் ஆவணப்பட இயக்குநர் திவ்யா பாரதியும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். வாழ்த்துகள்!

No comments: