பாரத மாதாவின் எழுச்சி மகன்! - ரா.ந.ஜெயராமன் ஆனந்தி

.


தாயின் கருவில் தாயகம் காக்க..
உதித்து எழுந்த தலைமகனே!
தொப்புள் கொடி அறுத்து 
தேசியக் கொடி உன்னை இணைக்கும் என்று
தாயின் கண்ணீர் சொன்னது
புனித பூமியில் உதித்து மேலும்
புனிதம் சேர்த்த புனிதன் .. நீ!


அன்னை கொதிவிட்ட நேர்வாக்கு
அப்துல்கலாமின் தலைஎழுத்தை மட்டும் அல்ல
இந்தியாவின் தலையெழுத்தை அன்றே
நிருபித்தவள்.. இந்தியா உச்சம் தொடும் என..

விட்ட படிப்பை தொடரவிட்டது அக்காவின் கை வளையல்
அடகுகடையில் தத்தளித்தது
உந்தன் மனதையும் அடகு வைத்தாய்..
இந்தியா  வல்லரசாக வேண்டும்-என

கடைக்கோடி குடிமகன் 
அரசு பள்ளியில்-தன்
அசுர உழைப்பால்
உச்சம் தொடலாம் என உச்சம்
தொட்டுக்காட்டிய முதல் குடிமகன் நீ!!


விஞ்ஞானத்தை நாட்டிற்கும்
மெய்ஞானத்தை இளைஞர்களுக்கும்
விதைத்த பாரத மாதாவின் எழுச்சி மகன்.. நீ


இன்பம் எதுவரை எதுவரை
துன்பம் எதுவரை எதுவரை
இன்பம் துன்பம்
இரண்டையும் ஓட ஓட விரட்டிய மனிதன்-நீ.. இல்லை இல்லை மா மனிதன் நீ!

அன்னைத் தமிழ் மெய் ஞானம்
அசுரவளர்ச்சி விஞ்ஞானம்
அன்னை பாதம் தொட்டு...
உச்சம் தொட்ட எழுச்சி மகன் .. நீ!

உன்னைவிட உயர்ந்த கடவுள்
உலகில் இல்லை - இனி
எந்த மனிதனும் உன்னை போன்று
பிறக்கப் போவதும் இல்லை - இனி
தனக்கு நிகர் தானே - என்று
மதங்கள் யாவும் இணைந்து
வணங்கிடும் முதற்கடவுள்
பாரத மாதாவின் எழுச்சி மகன்!
எங்கள் அப்துல் கலாமே!
எங்கள் அப்துல் கலாமே!

என்றும் அன்புடன்...
ரா.ந.ஜெயராமன் ஆனந்தி
கீழப்பெரம்பலூர் 

No comments: