உலகச் செய்திகள்


கனடாவில் ஏற்­பட்­டுள்ள காட்­டுத்­தீயை கட்­டுப்­ப­டுத்த பல மாதங்கள் எடுக்­க­லாம்

ஐ.எஸ். தீவிரவாதிகளால் தன்னினசேர்க்கையாளருக்கு மரணதண்டனை நிறைவேற்றம்

ஈராக்கில் தற்கொலைப் படை தாக்குதல் : 90 பேர் பலி

விஜய் மல்லையாவுக்கு எதிராக சிவப்பு அறிவித்தல் .!

ஜேர்மனில் முதல் முறையாக இஸ்லாமியப் பெண் சபாநாயகராக தெரிவு

மொரி­ஷியஸ், தென் ஆபி­ரிக்­காவில் கண்­டெ­டுக்­கப்­பட்ட இரு சிதை­வுகள் எம்.எச்.370 விமா­னத்­திற்­கு­ரி­யவை


கனடாவில் ஏற்­பட்­டுள்ள காட்­டுத்­தீயை கட்­டுப்­ப­டுத்த பல மாதங்கள் எடுக்­க­லாம்




09/05/2016 கனடாவில் போர்ட் மெக்மர்ரி நகரில் பல நாட்களாக பரவிவரும் காட்டுத் தீயை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர பல மாதங்கள் எடுக்கலாம் என்று மேற்கு அல்பெர்டா மாகாண தீயணைப்புத்துறையின் தலைமை அதிகாரி எச்சரித்துள்ளார்.
கனடாவின் அல்பெர்டா மாகாணத்தில் உள்ள காடுகளில் கடந்த செவ்வாய் கிழமை முதல் தீ பற்றி எரிந்து வருகின்ற நிலமையில் இந்த காட்டுத் தீயினால் அல்பெர்டா மாகாணத்தின் சில நகரங்களை முற்றிலுமாக அழித்துள்ள­தாக அந்­நாட்டு அதி­கா­ரிகள் தெரி­வித்­துள்­ளனர்.
காட்டுத் தீயால் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ள போர்ட் மெக்மர்ரி நகரிலிருந்து ஆயிரக்கணக்கான மக்கள், விமானம் மூலம் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டு வருகின்றனர். அங்கிருந்து இதுவரை 80 ஆயிரம் மக்கள் மீட்கப்பட்டுள்ளதாக அரசு அறிவித்துள்ளது.
கனடாவின் வடக்கே, சிக்கியுள்ள சுமார் 25,000 பேரை பாதுகாப்பாக வெளியேற்றும் பணி நடந்துவருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அவர்களில் மூன்றில் ஒரு பங்கினர் விமானம் மார்க்கமாக வெளியேற்றப்படுகின்றனர். இடம்பெயர்ந்தவர்கள் சொந்தக் குடியிருப்புகளுக்கு திரும்புவதற்கு நீண்ட காலம் எடுக்கலாம் என்று அல்பர்ட்டாவின் முதல்வர் கூறியுள்ளார்.
எண்ணெய் வளம் நிறைந்த பகுதியில் பரவியுள்ள தீயினால், கனடாவின் எண்ணெய் உற்பத்தியும் பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. நன்றி வீரகேசரி 







ஐ.எஸ். தீவிரவாதிகளால் தன்னினசேர்க்கையாளருக்கு மரணதண்டனை நிறைவேற்றம்
09/05/2016 ஐ.எஸ். தீவிரவாதிகள் தன்னினசேர்க்கையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் தம்மால் கைதுசெய்யப்பட்ட நபரொருவருக்கு உயர்ந்த மாடிக் கட்டமொன்றின் உச்சியிலிருந்து கீழே தள்ளி விட்டு மரணதண்டனை நிறைவேற்றப்படுவதை வெப்படுத்தும் புதிய புகைப்படங்கனை வெளியிட்டுள்ளனர்.

சிரிய அலெப்போ பிராந்தியத்திலுள்ள மன்பிஜ் எனும் இடத்தில் நிர்மாணப் பணிகள் பூர்த்தியடையாத நிலையிலிருந்த 5 மாடிக் கட்டடக் கூரையிலிருந்தே குறிப்பிட்ட பெயர் வெளியிடப்படாத நபர் தள்ளிவிடப்பட்டுள்ளார்.
சிறுவர்கள் உள்ளடங்கலாக பெருமளவு மக்கள் கூடியிருந்து பார்த்துக் கொண்டிருக்க குறிப்பிட்ட நபரை மாடிக் கட்டடத்தின் கூரைப் பகுதியில் தீவிரவாதிகள் பற்றிப் பிடித்தவாறு நிற்பதையும் தொடர்ந்து அந்த நபர் மாடியிலிருந்து தீவிரவாதிகளால் தள்ளிவிடப்படுவதையும் அந்தப் புகைப்படங்கள் வெளிப்படுத்துகின்றன.
நன்றி வீரகேசரி 






ஈராக்கில் தற்கொலைப் படை தாக்குதல் : 90 பேர் பலி

12/05/2016 ஈராக்கில் ஐஎஸ் தற்கொலைப் படையினர் நேற்று நடத்திய தாக்குதலில் 90 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
மேலும், சுமார் 100 இற்கு மேற்பட்டோர் பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் அருகில் உள்ள வைத்திசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த குண்டுவெடிப்பு குறித்து அந்நாட்டு பொலிஸ் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் கார் குண்டுவெடிப்புக்கு ஐஎஸ் அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.
ஷியா முஸ்லீம்கள் அதிகமாக வாழும் மாவட்டங்களிலே வெடிபொருட்கள் நிரப்பப்பட்ட கார்கள் வெடித்து சிதறிவுள்ளது.   நன்றி வீரகேசரி 








விஜய் மல்லையாவுக்கு எதிராக சிவப்பு அறிவித்தல் .!


12/05/2016 விஜய் மல்லையாவுக்கு எதிராக சிவப்பு அறிவித்தல் அனுப்பும்படி சர்வதேச பொலிஸான இன்டர்போலுக்கு அமலாக்கத்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது.
பொதுத்துறை மற்றும் தனியார் துறை வங்கிகளில் ரூ. 9 ஆயிரம் கோடி வரை கடன் வாங்கிய பிரபல தொழில் அதிபர் விஜய் மல்லையா அதை திருப்பிச் செலுத்தவில்லை. இதில் 1000 கோடி ரூபாய் வரை அவர் வெளிநாட்டில், தனக்கு சொந்தமான கிங்பிஷர் விமான நிறுவனத்தில் முதலீடு செய்ததாக சட்டவிரோத பணபரிவர்த்தனை சட்டத்தின்கீழ் அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருகிறது. இதேபோல் சி.பி.ஐ. வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகிறது.
அமலாக்கத்துறை தொடர்ந்த குறித்த வழக்கில் மும்பை சிறப்பு நீதிமன்றம் விஜய் மல்லையாவை கைது செய்து, பிணையில் வெளி வரமுடியாத பிடிவாரண்டு பிறப்பித்து உத்தரவிட்டது. 
இதற்கிடையே விஜய் மல்லையா கடந்த மார்ச் மாதம் 2 ஆம் திகதி இங்கிலாந்து சென்றுவிட்டார். அவரை இந்தியாவுக்கு திரும்பி நீதிமன்ற வழக்குகளை சந்திக்குமாறு மத்திய வெளியுறவு அமைச்சகம் கேட்டுக் கொண்டது.
அவர் மறுத்ததால், அவருடைய சிறப்பு கடவுச்சீட்டை மத்திய அரசு முடக்கியதுடன் விஜய் மல்லையாவை இந்தியாவுக்கு நாடு கடத்துமாறு இங்கிலாந்தை கேட்டுக் கொண்டது. இதைத்தொடர்ந்து தனது எம்.பி. பதவியை அவர் இராஜினாமா செய்தார்.
விசாரணைக்காக விஜய் மல்லையாவை இந்தியாவுக்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொண்டதை இங்கிலாந்து நிராகரித்தது. இந்த தகவலை இந்திய அரசுக்கும் இங்கிலாந்து அரசு தெரிவித்து இருக்கிறது.
இதையடுத்து, சர்வதேச பொலிஸ் உதவியுடன் விஜய் மல்லையாவை கைது செய்து கொண்டு வருவதற்கு அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்காக மல்லையாவுக்கு எதிராக சிவப்பு அறிவித்தல் அனுப்பும்படி சர்வதேச பொலிஸான இன்டர்போலுக்கு அமலாக்கத்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது. 
நீதித்துறை தேடும் ஒரு நபர் இருக்கும் இடத்தை அடையாளம் கண்டு அவரை கைது செய்வது தொடர்பான நடவடிக்கை சிவப்பு அறிவித்தல் ஆகும். நன்றி வீரகேசரி 









ஜேர்மனில் முதல் முறையாக இஸ்லாமியப் பெண் சபாநாயகராக தெரிவு

12/05/2016 ஜேர்மன் நாட்டின் மாகாண பாராளுமன்ற வரலாற்றில் முதன் முதலாக இஸ்லாமியப் பெண் ஒருவர் சபாநாயகராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

இஸ்லாமியரான முத்ரீம்  ஆர்ஸ் என்ற 50 வயதுடைய பெண்ணே, படீன் - வுட்டம்பேர்க் மாகாண பாராளுமன்றத்தின் சபாநாயகராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
இதன் மூலம், ஜேர்மன் மாகாணங்களில் உள்ள பாராளுமன்ற வரலாற்றில் ஒரு இஸ்லாமியர் சபாநாயகராக தெரிவாகியுள்ளது இதுவே முதல் தடவையாகும். முத்ரீம்  ஆர்ஸ் பொருளாதாரத்தில் பட்டம் பெற்றவர். 
இவரது பெற்றோர் துருக்கி நாட்டிலிருந்து ஜேர்மனியிலுள்ள ஸ்டட்கர்ட் நகருக்கு குடிபெயர்ந்துள்ளதுடன் இவரது தந்தை பாரந்தூக்கி தயாரிக்கும் நிறுவனத்தில் பணியாற்றியுள்ளார். தாய் துப்புரவு பணிகளில் ஈடுபட்டு வந்துள்ளார்.
ஜேர்மனியின் கிரீன் கட்சியை சேர்ந்த முத்ரீம்  ஆர்ஸ், படீன் - வுட்டம்பேர்க் என்ற மாகாணத்தின் வரி மற்றும் நிதி தொடர்பான அரசு ஆலோசகராக பணியாற்றி வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.    நன்றி வீரகேசரி 










மொரி­ஷியஸ், தென் ஆபி­ரிக்­காவில் கண்­டெ­டுக்­கப்­பட்ட இரு சிதை­வுகள் எம்.எச்.370 விமா­னத்­திற்­கு­ரி­யவை

13/05/2016 மொரி­ஷியஸ் தீவு மற்றும் தென் ஆபி­ரிக்கக் கடற்­க­ரை­களில் கண்­டெ­டுக்­கப்­பட்ட இரு விமான சிதை­வுகள் காணா­மல்­போன மலே­சிய எம்.எச். 370 விமா­னத்தின் சிதை­வுகள் என பெரும்­பாலும் நிச்­ச­ய­மா­கி­யுள்­ள­தாக மலே­சிய மற்றும் அவுஸ்­தி­ரே­லிய அதி­கா­ரிகள் நேற்று வியா­ழக்­கி­ழமை தெரி­வித்­தனர்.
மேற்­படி விமா­ன­மா­னது 2014 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 239 பேருடன் கோலா­ லம்பூர் நக­ரி­லி­ருந்து பீஜிங் நக­ருக்கு பய­ணித்த வேளை காணா­மல்­போ­னது.

இத­னை­ய­டுத்து அந்த விமா­னத்தைக் கண்­டு­பி­டிக்கும் முக­­மாக தென் இந்து சமுத்­தி­ரத்தில் 120,000 சதுர கிலோ­மீற்றர் பரப்பளவில் 3 கப்­பல்கள் மூலம் மேற்­கொள்­ளப்­பட்ட தேடுதல் நட­வ­டிக்கைகள் தோல்­வியைத் தழு­வி­யி­ருந்­தன.
இந்­நி­லையில் அண்மையில் கண்­டு­பி­டிக்­கப்­பட்­டுள்ள சிதை­வு­களில் 5 சிதை­வுகள் குறிப்­பிட்ட மலே­சிய விமா­னத்­தி­னு­டை­ய­வை­யாக இருக்­கலாம் என நம்­பப்­பட்­டது.


தொடர்ந்து அந்த சிதை­வுகள் அனைத்தும் அவுஸ்­தி­ரே­லி­யாவில் அந்­நாட்டு போக்­கு­வ­ரத்து பாது­காப்பு பணி­மனை மற்றும் ஏனைய சம்­பந்­தப்­பட்ட நிறு­வ­னங்­களைச் சேர்ந்த நிபு­ணர்­களால் பரி­சோ­த­னைக்­குட்­ப­டுத்­தப்­பட்­டன. இத­னை­ய­டுத்து மொரி­ஷியஸ் தீவு மற்றும் தென் ஆபி­ரிக்கக் கடற் ­க­ரை­களில் கரை­யொ­துங்­கிய இரு சிதை­வுகள் மலே­சிய எம்.எச். 370 விமா­னத்தின் சிதை­வுகள் என பெரும்­பாலும் நிச்­ச­ய­மா­கி­யுள்­ள­தாக மலேசிய போக்குவரத்து அமைச்சர் லியோவ் தியோங் லாய் நேற்று வியாழக்கிழமை தெரிவித்துள்ளார். அதே சமயம் அவுஸ்திரேலிய போக்குவரத்து பணிமனையும் அவரது அறிவிப்பை ஆமோதித்துள்ளது.   நன்றி வீரகேசரி