தமிழ் சினிமா 24 விமர்சனம்


24 விமர்சனம்காலத்தை கடந்து செல்லும் ஐன்ஸ்டினின் Time Machine கதைக்களத்தை கொண்டு ஹாலிவுட்டில் பல படங்கள் வந்துள்ளது. அந்தவரிசையில் தமிழில் இயக்குனர் விக்ரம் கே குமார் இயக்கத்தில் சூர்யா முதன் முறையாக ஒரு மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடித்து வெளிவந்திருக்கும் படம்தான் 24.

கதைக்களம்

1990 இல் இரட்டை சகோதர்களான தம்பி சூர்யா(சேதுராமன்) தனது ஆராய்ச்சியான Project24 வாட்சை கண்டுபிடிக்கிறார். அதை அண்ணன் சூர்யா(ஆத்ரேயா) தனக்கு சொந்தமாக்க முயற்சி செய்ய தனது தம்பி சூர்யாவையும், அவருடய மனைவி நித்யா மேனனயும் கொலை செய்கிறார். ஒரு கட்டத்தில் ஒரு விபத்தில் தம்பி சூர்யாவின் குழந்தையையும், அவர் அடைய நினைத்த project24 யும் தவறவிட்டு கோமாவுக்கு செல்கிறார் ஆத்ரேயா.
பின்னர் 26 வருடம் கழித்து நிகழ்காலத்தில் அவர் அடைய நினைத்த project24ஐ அடைந்தாரா? மகன் சூர்யா பெரியப்பாவை பழி வாங்கினாரா? என்பதை பல சுவராஷ்யங்களுடன் கொடுத்திருக்கிறார் இயக்குனர் விக்ரம்.கே.குமார்.

படத்தை பற்றிய அலசல்

சூர்யா சூர்யா சூர்யா...ஒருவர் இருந்தாலே மிரட்டுவார், இதில் 3 சூர்யா ஒவ்வொரு கதாபாத்திரத்திலும் கதைக்கு தேவையானதை அழகாக செய்திருக்கிறார்.. அதிலும் ஆத்ரேயா அடுத்த வருட பெஸ்ட் வில்லன் விருது எடுத்து வைக்க வேண்டியது தான். ஆரம்பத்தில் அதிரடியாக களம் இறங்கி பின் கோமாவிற்கு சென்று வீல் சேரில் உட்கார்ந்தாலும் மிரட்டல் தான்.
சூர்யாவே முழுப்படத்தையும் ஆக்ரமிக்கிறார், சமந்தா, நித்யா மேனன் எல்லாம் பெரிதான கதாபாத்திரம் இல்லை. காதல் காட்சிகளில் டைம் மிஷின் பயன்படுத்தியது அழகாக இருக்கிறது.
படத்தின் காட்சியமைப்புக்கள் தான் தனி அப்லாஸ் கொடுக்க வேண்டும், முதன் முறையாக ஒரு ஒளிப்பதிவிற்காக ரசிகர்கள் கை தட்டுகிறார்கள். திரு சூப்பர் சார். ஹாலிவுட் தரம். அதிலும் அந்த மிஷினில் சாவி போட்டு திறக்கும் போது அத்தனை நுணுக்கம்...கண்டிப்பாக ஆர்ட் டைரக்ட்ரையும் பாராட்டியே ஆகவேண்டும். படத்தின் முதல் 20 நிமிடம் பிரம்மிக்க வைக்கின்றது.
ஏதோ ஸ்டீபன் ஸ்பில்பர்க் படம் பார்ப்பது போல் இருந்தது. அடுத்தடுத்து அதே அதிரடியை கையாண்டு இருக்கலாம், கொஞ்சம் ஜனரஞ்சக ரசிகர்களுக்காக காதல் காட்சிகள் சேர்த்திருப்பது படத்திற்கு எந்த விதத்தில் பலம் என்று தெரியவில்லை. டைம் மிஷின் மட்டுமின்றிப்ரீஸ்(freeze) என்ற கான்செப்ட்டும் வருகிறது. அதில் தோனியுடன் செல்பி எடுக்கும் காட்சி எல்லாம் அட்ராசிட்டி. கற்பனைக்கு அப்பாற்பட்டு ரசிக்க வைக்கின்றது.
டைம் மிஷின் என்றால் பல வருடங்கள் பயணம் செய்வதை மட்டும் பார்த்து வந்த நமக்கு 10 நிமிடத்திலிருந்து 1 நாள் வரை முன்னோக்கி பின்னோக்கி செல்லும்படி திரைக்கதையில் மிரட்டியிருக்கிறார் விக்ரம் குமார். குறிப்பாகக் கிளைமேக்ஸில் காலம் கடந்து செல்லும் காட்சி. என்ன டைம் மிஷினில் மட்டும் கவனம் செலுத்தியிருக்கலாம், காதலை தவிர்த்து...!.
அதிலும் கிளைமேக்ஸ் அரைமணி நேரம் டைம் மிஷினுக்கே உரிய திரைக்கதையில் விளையாடுகிறார். ஏ.ஆர்.ரகுமான் எப்போதும் போல் பின்னணியில் முன்னணி என்று நிரூபித்துவிட்டார்.

க்ளாப்ஸ்

சூர்யாவின் ஆத்ரேயா கதாபாத்திரம் இன்னும் நிறைய ரசிகர்ளை சூர்யாவிற்கு கொடுக்கும் படத்தின் இரண்டாம் பாதியில் வரும் டுவிஸ்ட்கள் ஆர்வத்தை தூண்டுகிறது.
ஆய்வு கூடம் 1990களுக்கு ஏற்றார் போல் தத்ரூபமாக இருக்கிறது. படத்தின் டெக்கனிக்கல் விஷயம். குறிப்பாக படத்தின் இரண்டாவது ஹீரோ ஒளிப்பதிவாளர் திரு. கிளைமேக்ஸ் அரைமணி நேரம் மற்றும் படத்தின் முதல் பாதி.

பல்ப்ஸ்

காதல் காட்சிகள், குறிப்பாக இரண்டாம் பாதியில் வரும் காதல் காட்சிகள் பொறுமையை சோதிக்கின்றது.
அடிக்கடி சூர்யா தன்னை வாட்ச் மெக்கானிக் என்று அடிக்கடி சொல்வது சலிப்பை தட்டுகின்றது
மொத்தத்தில் 24 டைம் மிஷினுக்குள் நம்மை அழைத்து சென்று ஒரு விஷ்வல் ட்ரீட்டை கொடுத்துள்ளது

ரேட்டிங்- 3.25/5  நன்றி cineulagam