ஏனையவர்களிலிருந்து கார்த்திகா வேறுபாடும் விதம் 12 - நாட்டிய கலாநிதி கார்த்திகா கணேசர் .

.
எல்லாளன் காமினி தொடர்


நாடகம் மக்களின் ரசனைக்காகவே படைக்கப் படல் வேண்டும் என்ற சிந்தனையில் இன்று நாடகங்கள் தயாரிக்கப் பட்டு வருகின்றன. பார்த்து இரசித்து மகில்தாலே நாடகம். இது ஒரு பொழுது போக்கு. இதற்கு மாறாக நாடகமானது சமூகத்திற்கு நல்ல பல கருத்துக்களை நாசுக்காக பார்வையாளர் மனதிலே பதிய வைக்க வேண்டும் என்று எண்ணாதவரும் இல்லை. இவ்வாறாகnaam தற்காலத்திலே சிந்தித்து விடை காண முயல்கிறோம். ஆனால் கிபி 2 ஆம் நூற்றாண்டு என கருதப்படும் "நாட்டிய யாய்திரம்" என்ற நூல் இதற்கான தீர்வை என்றோ கூறிவிட்டது.

நாட்டிய யாத்திரம் கூறுவது நாடகம் என்பது "அறிவூட்டும் விளையாட்டு கருவி" என என்றோ வரையறுத்து கூறிவிட்டது. அறிவூட்டும் விளையாட்டுக் கருவி என கூறினரே அன்றி விளையாட்டான அறிவு என கூற வரவில்லை. பார்வையாளருக்கு நாடகமானது, முதலில் களிப்பூட்டும் கலையம்சம் நிரம்பிய ஒரு விளையாட்டாகவே இருத்தல் வேண்டும். அவ்வாறு இருக்கும் போதே அந்த விளையாட்டினைப் பார்க்க மக்கள் வருவார்கள்



இந்த விளையாட்டு முடிந்தபின் மக்கள் பார்வையாளர்கள் மனதி நிரந்தரமாக ஏற்றம் பெற வேண்டிய ஒரு முக்கிய கருத்து, அல்லது அறிவு இருத்தல் வேண்டும். இதுவே நாடகம் பற்றிய எம்மவர் கோட்பாடு. இது எம்மவர்க்கு மட்டுமல்ல அகில உலகினுக்கும் என்றும் பொருத்தமுடைய கொள்கை. அழகானதோ அழகற்றதோ அல்லது கீலத்தரமானதோ, அல்லது குரூரமனதோ, நிறைவானதோ, பொருள் அல்லது பொது நன்மையற்றதோ இவை யாவற்றையும் கலைஞனின் கற்பனா வளத்தினால் சுவையுடன் அளிக்க முடியும். அதாவது நாடகத்தை மிக ரசனையுடன் தயாரிக்க வேண்டும். அவ்வாறு தயாரிக்கும் போதே பார்வையாளர்கள் நன்று ரசிப்பார்கள். இதை நடை முறைப் படுத்துவது நெறியாளரின் திறமையில் தங்கி உள்ளது.


நாட்டிய யாத்திரம் கூறிய 'அறிவூட்டும் விளையாட்டுக் கருவி' என்பதை முரு முழுதாக எக்ற்றுக் கொண்டு எனது சமுதாய கடமையாக 'எல்லாளன் காமினியை' தயாரித்தேன். சமூக பிரச்னைக்கு முகம் கொடுக்க வேண்டியது ஆடற் கலைஞனின் கடமை கூட. எழுத்தாளர் தமது கருத்தை மக்கள் முன் தம் அலுத்து மூலம் எடுத்துச் செல்வார்கள். கவிஞனும் அவ்வாறே. ஆடல் கலைங்கனோ மிக மிக சக்திவாஇத்த ஆடலாக தனது உடலால் கூற கடமைப்பட்டவனே.
இதை சாதிப்பதற்கு கலையை விட வேறெந்தச் சாதனமும் சிறந்ததென கொள்ள முடியாது. கலை என்பது உள்ளத்திலிருந்து வெளிப்படுவதொன்று. இனம் மொழி யாவற்றையும் கடந்து நின்று, மக்களிடம் தொடர்பை ஏற்படுத்த வல்ல மொழியே ஆடற் கலை. அந்த கலையின் சக்தியை அது மக்களிடம் ஏற்படுத்தும்thaakaththai, எனது மற்றைய நாட்டிய நாடகங்கள் மூலம் அறிந்து உனந்திருந்தவ நான் பல வெற்றி படைப்புகளின் பின்பே 'எல்லாளன் காமினியை' தயாரித்தேன்.

நாடு பிடிப்பது அன்றிய அரசர்களின் மன்னர்களின் தர்மம். எல்லாளனும் நாடு பிடித்தான். நடு நிலமையுடன் ஆண்டான். இளைஞன் காமினியும் நாடு பிடிக்க ஆவல் கொள்வது அன்றைய தர்மம். இதையே ஈழத்து ரத்தினத்தின்
 "அரச குளத்தில் பிறந்தோர் நாடுகள் பிடிப்பது தப்போ அம்மா,
அதில் இனம் மதம் என்றொரு வேற்றுமை சொல்லி தடுப்பது முறையோ அம்மா,
அவன் தமிழன் என்பதால் அவனோடு போராட கனவிலும் நான் நினைக்கவில்லை அம்மா,
என் தந்தை ஓரரசன் யானோ இளவரசன்
அதனாற் போர் வேண்டு அம்மா"

தாயார் விகாரமகாதேவி முன் தனயன் காமினி குமுறுகிறான். இது எல்லாளன் காமினி வாழ்ந்த கி.பி இரண்டாம் நூற்றாண்டு நிலை. நாடு பிடிக்க மன்னர்கள் செய்த போரை எமது இலக்கியமான புறநானூறும் விளக்குகிறது. மன்னர்கள் போறே வாழ்வாக கொண்ட வீரயுக காலமது.

காமினியாக அரும்பு மீசையுடன் கம்பூர இளைஞன் ஆக நின்ற உஷா நாதனின் தோற்றப்பொலிவு  தாய் விகாரமகாதேவியாக அண்ணன்த ராணி பாலேந்திராவின் உணர்ச்சி மிக்க நடிப்பும் ஒவ்வொரு பார்வையாலரையுமே தாயக மாறி, காமினி போருக்குப் பவதற்கு சம்மதம் கொடுப்பது போல எண்ணத் தொடங்குவர். இங்கு நான் நாட்டிய நாடகத்தின் வலுவை உணர்ந்தேன்.
அன்றைய 'எல்லாளன் காமினி' மேடை ஏற்றத்தை குழப்புவதற்கு ஒரு இளைஞர் கூட்டம் வந்திருந்தது. உணர்ச்சி வசப்பட்ட இளம் சந்ததியினர். இதே நாடகத்தை இயல்பு வழுவாத (Realistic Style) நாடகமாக மேடை ஏற்றி இருந்தால் அவர்கள் நிட்சயமாக குழப்பம் விளைவித்திருப்பார். காமினியின் மனப் போக்கை அனல் கக்கும் வசனமாக பெசியுர்ந்தால் பார்வையாளரின் அடிமன உணர்ச்சியை கிளரியுருக்கும், அதே காட்சி சிறந்த கவிதா நயத்துடன் இசையாக வெளிவர அதற்கேற்ப நாட்டியமாக நடிக்கும்  போது மக்கள் கலையுடன் ஒன்றி விடுகின்றனர். கூற வந்த விஷயம் மக்கள் மனதி ஆழமாக பதிந்து விடுகிறது. இதுவே நாட்டிய நாடகத்தின் சிறப்பம்சம் ஆகும். வந்த இளைஞர் கூட்டம் என்னிடம் 'குழப்ப வந்தோம் வாயை அடைத்து விட்டீர்கள்' என கூறிச் சென்றனர்.

கல்வி அறிவில்லாத மக்களுக்கு அறிவை வளன்குவதேர்காகவே "பாரத நாட்டிய யாய்த்திரம்" நாட்டிய "அறிவூட்டும் விளையாட்டுக் கருவி" என்றது.

ஆனால் அறிவு படைத்த அதாவது கல்வி அறிவுள்ள சமுதாயத்திலும் மக்கள் சிந்தனைக்கு விருந்தாக நல்ல பல கருத்துக்களை கூற நாட்டிய நாட்கள் வலுவுள்ள சாதனமாகவே இருப்பதை உணர்ந்தேன்.
நாட்டிய நாடகம் எனும் பொது புராண இதிகாசங்கள் தான் ஆடப் பட வேண்டும் என்பதல்ல. எந்த விஷயத்தையும் எடுத்தாளக் கூடிய வலு எமது நாட்டிய நாடகத்திற்கு உண்டு.

இந்த நேரத்திலே இந்திய விடுதலை போராட்ட கால கட்டத்திலே மக்களிடம் விழிப்புணர்ச்சியை ஏற்படுத்துவதற்கு Indian People’s Theater கலைகளை பயன்படுத்தியதை நாம் நினைவு கூற வேண்டும். இந்த இயக்கத்திலே நாட்டிய கலைஞர் உதயஷங்கரும் இணைந்து செயல்பட்டதாக அறிகிறோம். எவ்வாறான நாட்டியங்களை தயாரித்தார் என்பதை அறிய முடியவில்லை.


ஜாதி கொடுமைக்கு ஆளாகி அடிமையிலும் கேவலமாக நடத்தப்பட்ட தமிழக மக்களை தட்டி எழுப்ப திராவிட கழகத்தில் அண்ணாத்துரை நாடகங்களையே பயன்படுத்தினார். ஓடி ஓடி ஒரு நாளைக்கு நான்கு இடங்களில் நாடகம் நடத்தியது உண்டு என 'பாரிநிலையம்' என்ற நூல் வெளியீட்டு நிறுவனத்தின் உரிமையாளர் பாரி செல்லப்பன் மூலமாக அறிந்தேன்.