யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முதுநிலை மூன்று நூல்கள் வெளியீட்டு விழா

.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முதுநிலை விரிவுரையாளர் கலாநிதி த.கலாமணி எழுதிய 'தெளிதல்', 'எம்மவர்கள்', 'பூதத்தம்பி இசை நாடகம்' ஆகிய மூன்று நூல்களின் வெளியீட்டு விழா  செவ்வாய்க்கிழமை(13) யாழ். கரவெட்டி தேவரையாளி இந்துக் கல்லூரியில் இடம்பெற்றது.
குறித்த நிகழ்வு கோப்பாய் ஆசிரிய கலாசாலையின் பிரதிமுதல்வர் செந்தமிழ்ச்சொல்லருவி ச.லலீசன் தலைமையில் நடைபெற்றது.
ஜீவநதி வெளியீட்டகத்தின் வெளியீடாக அமைந்த இம் மூன்று நூல்களுக்குமான வெளியீட்டுரையை மூத்த எழுத்தாளர் சாகித்யரத்னா தெணியான் நிகழ்த்தினார்.
தெளிதல்' நூலுக்கான நயப்புரையை யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முதுநிலை விரிவுரையாளர் இ.இராஜேஸ்கண்ணாவும், 'எம்மவர்கள்' நூலுக்கான நயப்புரையை ஓய்வுபெற்ற வங்கியாளர் எழுத்தாளர் கொற்றை பி.கிருஷ்ணானந்தனும், 'பூதத்தம்பி' இசைநாடக நூலுக்கான நயப்புரையை யாழ். தேசிய கல்வியியற் கல்லூரி விரிவுரையாளர் கே.ஆர். கமலநாதனும் ஆற்றினர்.'தெளிதல்' நூலின் முதற்பிரதியை யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற் கல்லூரியின் பீடாதிபதி ச.அமிர்தலிங்கமும், 'எம்மவர்கள்' நூலின் முதற்பிரதியை யாழ். தேசியக் கல்வியியற் கல்லூரியின் உபபீடாதிபதி கலாநிதி பா.தனபாலனும், 'பூதத்தம்பி' நூலின் முதற்பிரதியை நூலாசிரியரின் சகோதரர் டாக்டர் வி.கணேசவேலும் பெற்றுக்கொண்டனர்.

நிகழ்வின் தொடக்கமாக தேவரையாளி பாடசாலையை நிறுவிய பெரியார் சூரனின் உருவச்சிலைக்கு செ.கணேசன் மாலை அணிவித்தார். நூலாசிரியரை யாழ். நாட்டார் வழக்கியல் கழகத்தின் சார்பில் கலாபூஷணம் எஸ்.சிதம்பரநாதன் பொன்னாடை போர்த்திக் கெளரவித்தார்.
குறித்த வெளியீட்டு விழாவில் பெரும் எண்ணிக்கையான ஆர்வலர்கள் கலந்து கொண்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.


nantri http://www.tamilwin.com/

No comments: