சசிகலாவுக்கும், அஜீத்துக்கும் சரியான போட்டி...

.

2016ம் ஆண்டு நிறைவடைந்து 2017ம் ஆண்டு புது வருடம் பிறக்கப் போகிறது. தற்போது 2017ஆம் ஆண்டுக்கான காலண்டர்கள் அச்சடிக்கும் பணி நடைப்பெற்று வருகின்றது. மேலும் காலண்டர் மற்றும் டைரி விற்பனைகளும் தற்போது ஜோராக நடந்து வருகிறது.


அரசியல் கட்சியினர் தங்களுக்குப் பிடித்த தலைவர்களின் படங்களை அச்சிட்டு வருகின்றனர். 2017ம் ஆண்டு புத்தாண்டு காலண்டர்களின் வடிவமைப்பில் கூட சசிகலாவை முன் நிறுத்தி தாயாரிக்க சொல்லி கடைகளில் ஆர்டர் அளித்து வருகின்றனர் அதிமுகவினர். ஜெயலலிதா படம் போட்ட காலண்டர்களுக்கு கொடுத்த ஆர்டர்களை கேன்சல் செய்தும் விட்டனர் அதிமுகவினர்.


கோவை மாவட்டத்தில் சசிகலா படம் போட்ட பாக்கெட் கார்டுகளுக்கு ஆர்டர்கள் குவிந்து வருகிறது. மேலும் புத்தாண்டையொட்டி சசிகலா படம் போட்ட காலண்டர்களுக்கும் அதிமுகவினர் ஆர்டர் கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்தநிலையில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலாவுக்கு, நடிகர் அஜித் ஆகியோரின் புகைப்படங்களை அச்சடிக்கவே அதிகளவில் ஆர்டர்கள் வருவதாக சிவகாசி சுற்றுவட்டாரப்பகுதிகளில் காலண்டர் அச்சகம் நடத்துபவர்கள் கூறியுள்ளனர். மேலும் இந்த விஷயத்தில் அஜித்துக்கு,சசிகலாவிற்கும் தான் உண்மையான போட்டி நிலவி வருவதாகவும் கூறப்படுகிறது.
ஏற்கனவே அதிமுகவிற்கும் ஜெயலலிதாவிற்கு அரசியல் வாரிசு அஜீத்துதான் என்று அவரது ரசிகர்கள் கூறி வருகின்றனர். இந்த நிலையில் காலண்டர் அச்சிடுவதில் அஜீத்துக்கும் சசிகலாவிற்கும் போட்டி நிலவுவதும் சுவாரசியம்தான்.

No comments: