கவிஞர் கி பி அரவிந்தன் நினைவு இலக்கியப் பரிசு - 'புலம்பெயர் இலக்கியப் பதிவர் போட்டி 2017'

.
தலைப்பு : கவிஞர் கி பி அரவிந்தன் நினைவு இலக்கியப் பரிசு 
- 'புலம்பெயர் இணைய வலைப் பதிவர் போட்டி 2017' - தகவல் பகிர்வு

உலகளாவிய தமிழ் ஊடகத்துறை நெறியாளர்களுக்கு
வணக்கம்!

கவிஞர் கி பி அரவிந்தன் நினைவு இலக்கியப் பரிசு - 'புலம்பெயர் இலக்கியப் பதிவர் போட்டி 2017' தொடர்பாக தங்களுடன் தொடர்பு கொள்கிறோம். இத்தகைய செயற்திட்டம் பரவலான பார்வையாளர்களைச் சென்றடையவும் அதனூடாக எழுத்தூக்கமுடன் எழுத்தாளர்கள் மற்றும் வாசகர்கள் பங்கு கொள்ளவும் தங்களைப் போன்ற ஊடக நெறியார்கள் தகுநல் பணியாற்றி ஒத்துழைப்பு வழங்க அன்புடன் எதிர்பார்க்கிறோம்.

நான் முகிலன் மறைந்த கவிஞர் கிபி அரவிந்தன் அவர்களுடைய சுமார் நான்கு தசாப்தமான நெருங்கிய தோழன். தற்போது காக்கைச் சிறகினிலே மாத இதழ் ஆசிரியர் குழுவில் இணைந்து பணியாற்றுகிறேன்

காக்கைச் சிறகினிலே மாத இதழ் முன்னெடுக்கும் 
கவிஞர் கி பி அரவிந்தன் நினைவு இலக்கியப் பரிசு - 
'புலம்பெயர் இலக்கியப் பதிவர் போட்டி 2017' - வள்ளுவராண்டு 2048

காக்கைச் சிறகினிலே இதழ் தொடக்க நெறியாளராகப் பணியாற்றி மறைந்த இலக்கியவாதி 'கி பி அரவிந்தன்' கனவின் மீதியில் எழும் புதிய தடமாக அமைகிறது இந்தப் போட்டி. 

பாரதி கண்ட "சென்றிடுவீர் எட்டுத் திக்கும், கலைச் செல்வங்கள் யாவுங் கொணர்ந்திங்கு சேர்ப்பீர் !" என்ற கனவை நனவாக்கும் முயற்சிகளில் ஒன்று. புலம்பெயர் இலக்கியப் பதிவர் பரிசாக இம்முறை நடாத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.  இதற்கேற்ப இணைய வலைப் பதிவர்களையும் அவர்களது வலைப்பதிவின் நுழைவு முகவரிகளையும் அவர்களது சிறப்பான பதிவுகளையும் குறிப்பிட்டு தகுந்த வகையில் எமக்கு அறிமுகப்படுத்தி வைக்கலாம். புலப்பெயர்வின் வாழ்வில் தமது தன்னார்வத்தினால் புலப்பெயர்வின் சுயாதீனப் படைப்புகளாக  வழங்கிவரும் ஆற்றலாளர்களைக் கௌரவிக்கும் முகமாக இந்தப் போட்டி  அமைகிறது. இத்தெரிவில் இணையத் தளங்கள் பரிசீலனைக்கு எடுக்கப்படமாட்டாது.
தொன்மமும் நீட்சியுமாக நீண்ட நெடிய பயணத்தில் இயங்கும் தமிழ் இயல் - இசை - நாடகமென்ற முத்தளத்தையும் கடந்து புதிய ‘கணினித் தமிழாக’ நான்காவது பரிமாணத்தில் இன்று பவனி வரும் சூழலில் இப்போட்டி அமையப் பெறுகிறது

உலகெங்கும் வியாபித்தவர்களாகி தொடரும் வாழ்வில் அடுத்தடுத்த தலைமுறையினர் எண்ணங்களைக் கொண்ட எழுத்துகளையும் படைப்புகளையும் ஊக்குவிக்கும் முகமாக இப் போட்டி அமைகிறது.

நெறியாளர் தமிழ் இலக்கிய ஆர்வலர் இ. பத்மநாப ஐயர் அவர்களது வழிகாட்டுதலுடன் உலகளாவிய தமிழ் எழுத்தாளர்கள் கொண்ட குழுவினராக மதிப்புக்குரிய கவிதா லட்சுமி (நோர்வே) - மதிப்புக்குரிய கானாப் பிரபா (அவுஸ்திரேலியா) - மதிப்புக்குரிய இரா. எட்வின் (தமிழ்நாடு) - மதிப்புக்குரிய முகிலன் (பிரான்சு) ஆகியோர் பரிசீலனை செய்வர்.

0- படைப்பு அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: kaakkaicirakinile@gmail.com
0- தலைப்பு: 'புலம்பெயர் இணைய வலைப் பதிவர் போட்டி 2017' எனக் குறிப்பிடல் வேண்டும்.
0- படைப்புகள் அனுப்பவேண்டிய கடைசி நாள் : 15.01.2017
.........................................................
முதல் பரிசு : 10 000 இந்திய ரூபாய்கள் மற்றும் சான்றிதழ்
இரண்டாவது பரிசு : 7500 இந்திய ரூபாய்கள் மற்றும் சான்றிதழ்
மூன்றாவது பரிசு : 5000 இந்திய ரூபாய்கள் மற்றும் சான்றிதழ்
ஆறுதல் பரிசுகள் - சிறந்த பதிவர்களையும் அவர்களது சிறப்பான பதிவுகளையும் குறிப்பிட்டு அனுப்பும் வாசகர்களுக்கு வழங்கப்படும்

No comments: