அம்மணி
தமிழ் சினிமாவில் எப்போதாவது தான் தரமான படங்கள் எட்டிப்பார்க்கும், அந்த வகையில் தொடர்ந்து தரமான படங்களாக இயக்கி வருபவர் லட்சுமி ராமகிருஷ்ணன். பாக்ஸ் ஆபிஸ் வசூல் என்பதை மீறி நல்ல படைப்பு என்று சொல்வதே ஒரு கலைஞனுக்கான மரியாதை, அந்த வகையில் லட்சுமி ராமகிருஷ்ணன் இந்த அம்மணியை எப்படி கொண்டு வந்துள்ளார் என்பதை பார்ப்போம்.
கதைக்களம்
லட்சுமி ராமகிருஷ்ணன் அரசு மருத்துவமனையில் வேலைப்பார்க்கிறார். இவருக்கு இரண்டு மகன்கள், ஒரு மகள், ஒரு மகன் குடிகாரன், மற்றொரு மகன் ஆட்டோ ஓட்டுனர். மகள் ஓடி போய் திருமணம் செய்து விடுகிறாள்.
லட்சுமி தன் பணிக்காலம் முடிந்து ஓய்வு எடுக்கும் நிலையில் அவருக்கு குறிப்பிட்ட தொகை பணமாக வருகிறது, இதை அறிந்து மகன்கள், பேரன் என அனைவரும் அவரிடம் அன்பு காட்ட நெருங்க, பிறகு என்ன ஆனது என்பதை மிகவும் உணர்ச்சிப்பூர்வமாக காட்டியிருக்கிறது இந்த அம்மணி.
படத்தை பற்றிய அலசல்
லட்சுமி ராமகிருஷ்ணன் ஒரு இயக்குனராக படத்திற்கு படம் மெருகேறுகிறார், அவர் நடிப்பு நாங்கள் சொல்லி தெரியவேண்டியது இல்லை, ஒரு குப்பத்தில் எப்படி இருப்பார்களோ, அவர்களின் வாழ்க்கையை நம் கண்முன் கொண்டு வருகிறார்.
பணத்திற்காக நடிக்கும் மகன்களையும், பேரனையும் காட்டிய விதம் இன்றைய தலைமுறையில் நடக்கும் பல நிகழ்வுகளை கண்முன் கொண்டு வருகிறது, இவர் நடத்தும் தொலைக்காட்சி ஷோ கண்டிப்பாக உதவி இருக்கும் போல.
சரி, அம்மணி என்று ஏன் படத்திற்கு டைட்டில் வைத்தார்கள்? என்று நீங்கள் கேட்பது புரிகின்றது, லட்சுமி ராமகிருஷ்ணன் வீட்டிலேயே அம்மணி என்ற ஒரு பாட்டி குடியிருக்கிறார், சொந்தங்களால் துரத்தி விடப்பட்ட இவர் லட்சுமி வீட்டில் தான் குடியிருக்கிறார்.
கிட்டத்தட்ட அம்மணி தான் லட்சுமியின் ரோல் மாடல், எந்த கவலையும் இல்லாமல், இந்த வயதிலும் அவர் சந்தோஷமாக தன் காலங்களை கழிக்கின்றார் என்பதை மிக அழகாக காட்டியுள்ளனர், இதை ஒரு காட்சியில் லட்சுமி அவரிடம் கேட்கும் போது கூட ‘வெளிச்சம் சென்று விட்டால் நம் நிழல் கூட நமக்கு சொந்தமில்லை’ என்று அம்மணி சொல்வது கவித்துவமான உண்மை.
படத்தின் ஒளிப்பதிவு இம்ரான் மிகவும் கவர்கிறார், “கே“வின் இசையும் கவணிக்க வைக்கின்றது, அதை விட ரெஜித்தின் எடிட்டிங் படத்திற்கு என்ன தேவையோ அதை அளவாக கொடுத்துள்ளார்.
க்ளாப்ஸ்
நடிகர்கள், நடிகைகளின் யதார்த்த நடிப்பு, குறிப்பாக அம்மணி பாட்டியின் துறுதுறு நடிப்பு.
படத்தின் வசனம் ரசிக்க வைக்கின்றது.
பல்ப்ஸ்
படத்தின் இடைவேளை வரை கதைக்குள் நாம் செல்ல கொஞ்சம் நேரம் எடுக்கின்றது.
மொத்தத்தில் அம்மணி நேர்த்தியான அழகு
No comments:
Post a Comment