பண்டிகை தந்ததொரு பாடம் - தேமொழி

.

சிலர் உயிர்த்தெழுந்த நாளை உலகம் கொண்டாடும்
சிலர் உயிர்துறந்த நாளை அகிலம் கொண்டாடும்
நாம் வாழும் வாழ்க்கை நிர்ணயிக்கும்
நம் வாழ்விற்குப் பிறகு பெறும் மரியாதையை
நல்லவர் மாண்டால் துக்கம் சூழ்வதும்
தீயவர் மாண்டால் துயரம் நீங்குவதும்
எடுத்துரைக்கும் செய்தி அறியாதவரா நாம்
அறிவுறுத்தும் பாடம் புரியாதவரா நாம்
காந்தியாக ஏசுவாக வாழ்ந்ததற்காக
என்றும் போற்றப்படுவதும் நம் கையில்
நரகாசுரனாக  மகிஷாசுரனாக வீழ்ந்ததற்காக
என்றும் விழாவாகிப் போவதும் நம் கையில்
பிறர் போற்றும் வாழ்வாக இல்லாவிடினும்
பலர் தூற்றும் மறைவாக இல்லாதிருக்கட்டும்
திருந்தி நாம் வாழந்திட பெற்றிடும் அறிவுரையிது
தீபாவளிப் பண்டிகை தரும் நல்லதோர் பாடமிது

No comments: