வடையென்றால் வாயைப் பிளக்கும் - Chicago பாஸ்கர்

.

குளிரடித்தாலும் வீட்டுக் கூரை ஒழுகினாலும் 

மழை பெய்தாலும் எங்கள் மனம் சோர்ந்தாலும் 

துயர் சூழ்ந்தாலும் என்னதான் துன்பம் துளைத்தாலும்

உற்சாகம் தந்து என்றும் உயிரூட்டும் வடையே!





வீட்டை விட்டு வந்தாலும், நாட்டை விட்டுப் பறந்தாலும் 

ஓட்டை போட்டு, பாட்டி சுட்டு, சொன்ன கதை மறந்தாலும் 

மனமெங்கும் நிறைந்திருக்கும், சுவை விட்டுப் போகுமா?

உலகெங்கும் கம கமக்க புகழ் கண்ட உளுந்து வடையே!



பல்லில்லா பழையோர்க்கும் சொல்லில்லா சிறியோர்க்கும் 

பைக்கில் செல்லும் புதுசுக்கும் படித்தோர்க்கும் பாமரர்க்கும் 

சுடச் சுட ரீயோடும் தொட்டுத் தின்ன சம்பலோடும் 

சுவையூட்டும் மெதுவடையே உன்னை நாம் மறப்போமா?



கிஸ் என்ற சத்தமிட்டு எண்ணையில் தான் புரண்டு 

கிஸ் அடிக்கும் இளசுகளின் நாவதனில் தான்மிதந்து 

பஸ் ஏறி பயணத்தில் பலபேரின் பசி தீர்த்து 

மிஸ் பண்ணா ஓட்டையுடன் வரலாறு படைத்த வடையே!



செல்லடித்தும் சாகாமல், குண்டடித்தும் மடியாமல்

ரீக்கடையில் அழகாக, வீற்றிருக்கும் மெது வடையே, 


உப்பியிருந்தாலும் மெதுவாய் ஊசிப்போய் இருந்தாலும் 


பரந்தின்று தமிழனின் புகழ் பரப்பும் மெது வடையே!



திருமண பந்தியிலும் திருகோணமலைச் சந்தியிலும் 

சிங்கள நாட்டினிலும் தமிழகத்து தெருக்களிலும் 

சிறப்பாக சூடாக சிந்தையள்ளும் மெது வடையே, 

சிறக்காது சபை என்றும் நீயின்றி எம் வடையே



No comments: