.
பாக்கிஸ்தானில் பயங்கரம் : 58 பேர் பலி
பாக்கிஸ்தானில் பயங்கரம் : 58 பேர் பலி
25/10/2016 பாக்கிஸ்தானின் மேற்கு நகரான குவெட்டாவின் பொலிஸ் பயிற்சி கல்லூரியின் மீது ஆயுததாரிகள் நடத்திய தாக்குதலில் 58 பேர் பலியாகியுள்ளனர்.
மேலும், இந்த தாக்குதல் சம்பவத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
இதேவேளை, தாக்குதலில் காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஆயுததாரிகள் கட்டடத்திற்குள் நுழைந்து துப்பாக்கிச் சூடு நடத்த ஆரம்பித்ததும் ஒரு பாரியளவிலான பாதுகாப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த தாக்குதல் சம்பவத்தை தாங்கள் மேற்கொண்டதாக எந்த குழுவும் இது வரை கூறவில்லை. நன்றி வீரகேசரி
No comments:
Post a Comment