இனிதே நடந்த இந்து மகளிர் கல்லூரியின் மலரும் மாலை 2016

.


இந்து மகளிர் கல்லூரியின் மலரும் மாலை 2016 நிகழ்வு இன்று 30 10 2016 இரவு இடம் பெற்றது. சுப்ப சிங்கர் பாடகர் சத்தியபிரகாசும் சோனியாவும் நிகழ்வில் சிறப்பு பாடகர்களாக கலந்து கொண்டு பாடினார்கள். இவர்களோடு உள்ளூர் பாடகர்கள் பலர் சேர்ந்து பாடி ஒரு நல்ல இசை நிகழ்வை கொடுத்தார்கள். இந்த நிகழ்விற்கு சக்தி இசைக் குழுவினர் இசை வழங்கினார்கள்.

இந்து மகளிர் கல்லூரியின் மூன்று மாடிக் கட்டிடத்திற்காக  இந்த இசை நிகழ்வு இடம் பெற்றது . துர்க்கை அம்மன் மண்டபத்தில் இடம்பெற்ற இந்த நிகழ்விற்கு மண்டபம் நிறைந்த மக்கள் வருகை தந்திருந்தார்கள்.  திருமதி கலைச்செல்வி குகசிறி தலைமை உரையை வழங்கினார். இளம் தலை முறையினரான அபிதேவ் மற்றும் வருணி ஆகியோர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி ஆரம்பித்து வைத்தார்கள் . தொடர்ந்து மகேஸ்வரன் பிரபாகரன் இசை நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.
 மங்கள விளக்கை திருமதி ஜெகநாதனும் திருமதி கதிகாமநாதனும் ஏற்றி வைத்தார்கள்.








தமிழ் மொழி வாழ்த்து,  தேசியகீதம் என்பன செல்வி சுருதி செல்வி சுவேதா ஆகியோரால் இசைக்கப்பட்டது . நன்றி உரையை திருமதி சாந்தி உதயன் வழங்கினார். இசை நிகழ்வு மிக நன்றாக இருந்ததாக பலர் குறிப்பிட்டார்கள் . மண்டபத்தில் இருந்த மக்கள் வெக்கை தாங்க முடியாமல் விசிறிக் கொண்டிருந்தார்கள் . குளிர் சாதனம் ஏன் இயக்கப் படவில்லை என்று பலர் கேட்ட வண்ணம் இருந்தார்கள் விடை மட்டும் கிடைக்கவில்லை . 









































No comments: