.
‘Paintings Of SivaKumar’ புத்தக வெளியீட்டு விழா இன்று லலித் கலா அகாடமியில் நடைபெற்றது.
நடிகர் சூர்யா முன்னிலையில் தமிழறிஞர் தமிழருவிமணியன் புத்தகத்தை வெளியிட்டார்.
விழாவில் அல்லையன்ஸ் பதிப்பகம் ஸ்ரீநிவாசன், இயக்குநர் லிங்குசாமி, இயக்குநரும், ஒளிப்பதிவாளருமான ராஜீவ்மேனன், இயக்குநர் வசந்த், கவிஞர்-எழுத்தாளர் அறிவுமதி, டாக்டர் சொக்கலிங்கம் , ஓவியர் A.P.ஸ்ரீதர், ஓவியர் தியாகு, நடிகை ரம்யா பாண்டியன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் நல்லகண்ணு, கவிஞர் பிரபஞ்சன், தனஞ்சயன், கவிதாலயா கிருஷ்ணன், பத்மஸ்ரீ சந்திரசேகர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
முன்னிலை வகித்த நடிகர் சூர்யா பேசும்போது, “அப்பாவிற்கு பிறந்த நாள் கொண்டாடுவது எப்போதுமே பிடிக்காது. சென்ற வருடம் பிறந்த நாள் கொண்டாடலாம் என்று நினைத்தோம். ஆனால் அன்று அவர் பழநி முருகன் கோவிலுக்கு சாமியை தரிசிக்க சென்றுவிட்டார்.
இந்த வருடம் அவருடைய 75-வது பிறந்த நாள். அந்த வகையில் அவருக்கு இந்த பிறந்த நாள் மிகச் சிறப்பான பிறந்த நாளாகும். இந்த நாளை நாங்கள் கண்டிப்பாக மிகப் பெரிய அளவில் அனைவருக்கும் என்றும் நினைவிருக்கும் பிறந்த நாளாக மாற்ற வேண்டும் என்று யோசித்துதான் இந்த கண்காட்சியை ஏற்பாடு செய்தோம்.
இந்த காபி டேபிள் புத்தகம் மிக முக்கியமான புத்தகம். இந்நாளை குறிக்கத்தான் இந்த புத்தகத்தை இன்று வெளியிட்டு உள்ளோம்.
அப்பாவின் ஓவியக் கண்காட்சிக்கு இப்போது நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. கண்காட்சிக்கு கிடைத்துள்ள வரவேற்பை கருத்தில் கொண்டு மேலும் இரண்டு நாட்கள் கண்காட்சியை தொடர முடிவு செய்துள்ளோம்.
அப்பா இப்போது இராமாயணம், மகாபாரதத்துக்கு பிறகு திருக்குறளை பேச தயாராகி வருகிறார். இனி வருடம் தோறும் அப்பாவின் பிறந்த நாள் அன்று ஓவிய போட்டி ஒன்றை நடத்தி, அதில் வெற்றி பெறுபவருக்கு பரிசு வழங்கப் போகிறோம்..” என்றார்.
விழாவில் ஏற்புரை நிகழ்த்திய நடிகர் சிவகுமார், “என்னுடைய பிறந்த நாளை கொண்டாடுவதில் எனக்கு விருப்பமே இல்லை. இவர்கள்தான் இந்த ஏற்பாடுகளை செய்துள்ளனர். படைப்பாளனைவிட படைப்புகளுக்குத்தான் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். ஏனென்றால் படைப்புகள்தான் காலம் கடந்து நிற்கும்.
இப்போது அனைவரும் ஐந்து நட்சத்திர ஹோட்டல்களில் பல ஆயிரம் ருபாய் செலவழித்து சாப்பிடுகிறார்கள். நானெல்லாம் அக்காலத்தில் வெறும் ஏழாயிரம் ரூபாய் செலவில், திருச்சியில் இருந்து கன்னியாகுமரிவரை பயணித்து இந்த ஓவியங்களை வரைந்தேன். இப்போதெல்லாம் அப்படி இருக்க முடியாது. இந்த விழாவை இவ்வளவு சிறப்பாக நடத்திய என்னுடைய மகன்கள் மற்றும் இன்னொரு மகனான தனஞ்ஜெயனுக்கு நன்றி..” என்று கூறினார்.
nantri:tamilcinetalk.com
No comments:
Post a Comment