பொன். கனகசபாபதி நினைவு விளையாட்டு நாள் மகாஜனக் கல்லூரி பழைய மாணவர் சங்கம்
இவ்வாண்டும், மகாஜனக் கல்லூரியின் பொன். கனகசபாபதி நினைவு விளையாட்டு நாள் மார்ச் மாதம் 28ம் திகதி அன்று சிறப்பாக நடைபெற்றது.

இந்த நிகழ்வில் பூப்பந்தாட்டம் (Badminton) போட்டிகள் இடம்பெற்றன. இதில் ஆண்கள், பென்கள், பொதுவான இரட்டையர் ஆட்டங்கள் நடைபெற்றன. இந்தப் போட்டியில் பல சிறந்த பூப்பந்து விளையாட்டு வீரர்கள் கலந்து கொண்டு போட்டியை விறுவிறுப்பாக்கினர்.
இந்தப் போட்டியில் வெற்றிபெற்றோர் விபரம்:
1) ஆண்கள் இரட்டையர் போட்டியில்
1ம் பரிசு: கிருபா – வினோமன்
2ம் பரிசு: முரளி – உமாபதி

2) பெண்கள் இரட்டையர் போட்டியில்
1ம் பரிசு: ஜெகா – ராணி
2ம் பரிசு:  லேகா – சிவரதி

3) பொது இரட்டையர் போட்டியில்
1ம் பரிசு: கிருபா – ராணி
2ம் பரிசு: சண் குமாரலிங்கம் – பசுமதி

இந்தப் போட்டியுடன், கரம், சதுரங்கம், உதைபந்தாட்டம், துடுப்பாட்டம் என்ற பல விளையாட்டுக்களும் சிறுவர்களுக்கான ஒழுங்கு செய்யப்பட்டிருந்தன.
அப்பம், டீடீஞ என்ற மக்கள் மனதைப் கவர்ந்த உணவுகள் விற்பனை செய்யப்பட்டன.
பூப்பந்து விளையாட்டில் பங்குபற்றியவர்களுக்கு எமது நன்றி, அதில் வெற்றி பெற்றவர்களுக்கு எமது பாராட்டுக்கள்.
இந்த நிகழ்வில் உதவிய அனைவருக்கும் எமது நன்றிகள்.
மகாஜனக் கல்லூரி பழைய மாணவர் சங்கம்
(சிடனி, கன்பரா, குயிஸ்லாந்து கிளை)