இவ்வாண்டும், அவுஸ்திரேலிய மருத்துவ உதவி நிறுவனத்தின் 15ஆவது ஆண்டு நிதி சேகரிப்புக்;கான வானொலியில் அறைகூவல் (சுயனழைவாழn) சிறப்பாக பெரிய வெள்ளி தினத்தன்று நடைபெற்றது.
சிட்னியில் இன்பத்தமிழ் ஒலி வானொலி ஊடாகவும், மெல்போர்னில் 3CR வானொலி ஊடாகவும் காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை இடம்பெற்ற இந்த நிதி சேகரிப்பில் அன்று மட்டும் $135,000 சேகரிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்த வாரத்திலும் சேர்த்து அந்த தொகை $150,000 ஐ தாண்டியுள்ளதை பெருமையுடன் அறியத் தருகின்றோம்.
இந்த நிதி சேகரிப்பில் சேர்க்கப்பட்ட நிதி, இரண்டு முக்கிய திட்டங்களுக்குப் பயன்படுத்தப்படும்.
1) பாடசாலை மாணவர்களுக்கான உளவியல் சமூக நலத் திட்டம்: (Psychosocial project) இதன்மூலமாக உளவியல் சமூக நலன் பாதிக்கப்பட்ட மாணவர்களை கண்டறிந்து அவர்களுக்கு சிகிச்சை, உதவி செய்தல். இந்திட்டத்தினூடாக ‘மகிழகம்’ என்ற ஒரு நிலையம் வட மாகாணத்திலுள்ள பல பாடசாலைகளில் நிருவப்படவுள்ளன.
2) முல்லைத்தீவு மாவட்டத்தில் பாடசாலை மாணவர்களுக்கான பல் சுகாதார வசதி: அதன் மூலமான ஒரு பல் சுகாதார சிகிச்சை நிலையம் ஒன்று ‘உடையார்கட்டு’ மகா வித்தியாலயத்தில் நிறுவப்படும். அதன் மூலமாக எல்லா மாணவர்களும் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள். முதலாம் வகுப்பு மாணவர்களுக்கு பல் துலக்குதல் பற்றிய பயிற்சியும் வசதிகளும் செய்து கொடுக்கப்படும்.
இன்னமும் தமது பங்களிப்புக்களை செலுத்தாதவர்கள், தொடர்ந்தும் பின்வரும் வழிகளில் உங்களது பங்களிப்பைச் செய்யலாம்:
1) அவுஸ்திரேலிய மருத்துவ உதவி நிறுவனத்தின் இணையத்தளம் (www.ausmedaid.org.au) மூலமாக Paypal வழியாகவோ
2) காசோலை அல்லது காசாகவோ அல்லது Credit Card மூலமாகவோ செலுத்தலாம்.
அவுஸ்திரேலிய மருத்துவ உதவி நிறுவனத்தினருடன் தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி இலக்கம்: 1300 990 828.
இந்த நிதி சேகரிப்புக்கு பங்களித்த அனைத்து மக்களுக்கும் மிக்க நன்றியினை தொரிவித்துக் கொள்கின்றோம்.
டாக்டர். பொ. கேதீஸ்வரன்
தலைவர்
அவுஸ்திரேலிய மருத்துவ உதவி நிறுவனம்