இலங்கைச் செய்திகள்


72 இலங்கையர்கள் நாடு திரும்பினர்

வீட்டுத் திட்டத்தை மீள் பரிசீலனை செய்யக் கோரி ஜனாதிபதிக்கு கடிதம்

 'நல்லிணக்க படைவீரர்கள் கிராமம்"

முஸ்லிம் மக்களை சந்தித்து கலந்துரையாடிய கோத்தபாய

 "இராணுவம் வெள்ளைவானில் கடத்திச் சென்றதை கண்டேன்"

 மகள் திரும்பி வரு­வாளா ? : கதறி அழும் தாய்

வைத்தியர்கள் பாரிய ஆர்பாட்டம்

குமார் குணரட்ணத்திற்கு ஒரு வருட சிறைத் தண்டனை

வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தினால் தொழில் உரிமைப் போராட்டம்

புனர்வாழ்வுடன் 7 முன்னாள் புலி உறுப்பினர்கள் விடுதலை

பிள்ளையானுக்கு பிணை மறுப்பு.!

குற்றவாளிகளுக்கு தண்டணை வழங்குங்கள்: வித்தியாவின் தாயார் ஜனாதிபதியிடம் கோரிக்கை







72 இலங்கையர்கள் நாடு திரும்பினர்




28/03/2016 இலங்கையிலிருந்து மத்தியக் கிழக்கு நாடுகளுக்கு வீட்டு பணிப் பெண்களாக  சென்ற 72  பேர் மீண்டும் நாட்டுக்கு திருப்பி அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.
இவர்கள் மத்தியக் கிழக்கு நாடுகளில் பல துன்பங்களை அனுபவித்து வந்ததை தொடர்ந்தே அவர்கள் அந்நாடுகளில் உள்ள இலங்கை தூதரகத்தால் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.
இன்று காலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த இரண்டு இலங்கை விமானச் சேவைக்கு சொந்தமான விமானங்களில்  சவூதியில் இருந்து 12 பேரும் குவைத்திலிருந்து 48  பேரும் கட்டாரிலிருந்து 12 பேரும் வந்தடைந்துள்ளனர். 
இவ்வாறு வந்தவர்களில் 22 பேர் ஆண்களும் 50 பேர் பெண்களும் அடங்குவர். இவர்கள் காலி, பொலன்னறுவை,குருணாகல், மட்டக்களப்பு,  மற்றும் ஏறாவூர் பிரதேசங்களை சேந்தவர்கள் .
நாட்டை வந்தடைந்தவர்களுக்கு வெளிநாட்டு வேலை வாய்ப்புத் திணைக்களம் பணம் கொடுத்து அவர்களின் வீடுகளுக்கு அனுப்பிவைத்துள்ளது. நன்றி வீரகேசரி 










வீட்டுத் திட்டத்தை மீள் பரிசீலனை செய்யக் கோரி ஜனாதிபதிக்கு கடிதம்


30/03/2016 வடக்கு, கிழக்கில் 65ஆயிரம் வீடுகளை நிர்மாணிக்கும் வீட்டுத்திட்டத்தை நிறுத்தி, அந்த வீடுகள் வடக்குக்கு பொருத்தமானவையா என்பது தொடர்பில் மீள்பரிசீலனை செய்யுமாறு கோரி, வடமாகாண அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளார்.
இக்கடிதத்தின் பிரதிகள், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் ஆகியோருக்கும் அனுப்பப்பட்டுள்ளது.
மேற்படி வீட்டுத்திட்ட பொருத்து வீடுகள் (இரும்பு வீடுகள்), வடக்கு மக்களுக்கு பொருத்தமற்றவை எனவும் அவற்றை நிறுத்தி, அவற்றுக்குப் பதிலாக வடக்குக்கு பொருத்தப்பாடுடைய வீட்டுத்திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் எனவும், கடந்த 24ஆம் திகதியன்று வடமாகாண சபையில் நிறைவேற்றப்பட்ட பிரேரணையை மேற்கொள்காட்டி அவைத்தலைவர் இந்தக் கடிதத்தை எழுதியுள்ளார்.
அந்த கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
போரால் பாதிக்கப்பட்ட வடக்கு மக்களுக்கு வீட்டுத்திட்டத்தை வழங்கும் அரசாங்கத்தின் திட்டத்தை வரவேற்கின்றோம். ஆனால், இந்த பொருத்து வீடுகளை எங்களுக்கு வழங்கியதையிட்டு மனவருத்தம் கொள்கின்றோம்.
2.1 மில்லியன் ரூபாய் செலவில் ஒவ்வொரு வீடும் அமைக்கப்படுவது அதிகூடிய செலவாகும். இவ்வாறு அமைக்கப்படும் வீடுகளின் பாதுகாப்பு என்பது கேள்விக்குறியாகவுள்ளது. வீட்டின் சுவர் வலிமையற்றது. இலகுவில் உடையக்கூடியது. திருடர்கள், கொள்ளையர்கள் ஆகியோருக்கும் பாலியல் துஸ்பிரயோகம் செய்வோருக்கும் இந்த வீடுகள் இலகுவான வழிகளை ஏற்படுத்திவிடும்.
மேலும், இந்த 2.1 மில்லியன் ரூபாய் செலவில் வடக்கில் சாதாரணமாக கட்டப்படும் சீமெந்து வீடுகள் இரண்டைக் கட்டிவிட முடியும். இந்த வீடுகள் வடக்கிலுள்ள காலநிலை மற்றும் சூழலுக்கு முற்றும் பொருத்தமற்றதாகவுள்ளது.
வெப்ப காலங்களில் இந்த வீடுகள் அதிகளவான வெப்பமாக காணப்படுவதுடன், மழை காலங்களில் வெள்ளம் வீடுகளுக்கும் புகுந்துகொள்ளும் நிலைமையும் காணப்படுகின்றது. இந்த வீடுகள் தொடர்பில் நாங்கள் திருப்பதியற்று இருக்கின்றோம். ஆதலால் இந்து வீடுகளை நடைமுறைப்படுத்துவதற்கு முன்னர் இது தொடர்பில் பரிசீலனை செய்யவும்´ என அந்தக் கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.   நன்றி வீரகேசரி 








 'நல்லிணக்க படைவீரர்கள் கிராமம்"

30/03/2016 வவுனியா கொக்கலிய பிரதேசத்தில் 'நல்லிணக்க படைவீரர்கள் கிராமம்" எனும் பெயரில் அமைக்கப்பட்டுள்ள படைவீரர்களுக்கான வீடுகளை எதிர்வரும் ஏப்ரல் மாதம் மூன்றாம் திகதி உத்தியோகபூர்வமாக கையளிக்கும் நிகழ்வு இடம்பெறவுள்ளது.
குறித்த வீட்டுத்திட்டத்தில் பூங்குடுதீவு மாணவி வித்தியாவின் குடும்பத்தினருக்கும் வீடொன்றை அமைத்துள்ளதாகவும் பாதுகாப்பு அமைச்சின் செயளாளர் கருனாசேன ஹெட்டியாராச்சி தெரிவித்தார் அதேபோல் அதியுயர் பாதுகாப்பு வலயம் என்னும் பெயர் தற்போது பெயர்ப்பலகையில் மட்டுமே உள்ளது. எனவே நாம் தேசிய பாதுகாப்புக்கு எவ்விதமான பாதிப்பும் ஏற்படாத வகையிலேயே மீள்குடியேற்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளோம் எனவும் அவர் குறிப்பிட்டார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியளாளர் மாநாட்டில் கலந்துக்கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கருத்து தெரிவித்தார்.


அவர் மேலும் குறிப்பிடுகையில்,
நல்லாட்சி அரசாங்கத்தின் மிக முக்கியமான செயற்பாடாக தேசிய நல்லிணக்கத்தையும் மக்களுக்கு பாதுகாப்பை வழங்குவதையும் கொண்டுள்ளது. நாம் வடக்கு தெற்கு மக்களிடையே தேசிய உணர்வை ஏறபடுத்துவதற்கான முயற்சிகளையே மேற்கொண்டு வருகின்றோம். இதனையே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களும் தனது கொள்கையாக கொண்டுள்ளார். தற்பொது தேசிய பாதுகாப்புக்கு அச்சுறத்தல் நிலவுவதாக மக்களிடையே போலியான பிரச்சாரங்களை மேற்கொள்கின்றனர்.
ஆனால் எமது நாட்டின் பாதுகாப்பு தொடர்பில் நாம் அதிக வழிப்புணர்வுடன் செயற்படுகின்றோம். இதற்கென கடற்படை, விமானப்படை, மற்றும் சிவில் பொலிஸ் என்பனவற்றுக்கு சகல விதமான அறிவுறுத்தல்களும் வழங்கப்பட்டள்ளன. அத்தோடு நாம் அனைத்து விதமான தீவிரவாத நடவடிக்கைகளையும் முடக்க ஏற்பாடுகளையும் மேற்கொண்டுள்ளோம்.
எனவே மக்களிடையே பொய்யான பிரச்சாரங்களை கொண்டுசெல்ல வேண்டாம் என கேட்டுக்கொள்கின்றோம். இந்நிலையில் புலம்பெயர் தமிழர்கள் தனியாட்சி வேண்டும் என்ற நிலைப்பாட்டடை மாற்றிக்கொள்ள தயங்குகின்றனர். ஆனால் இந்நிலைப்பாட்டிலிருந்து விடுபட்டு சகல இணக்குழுக்கள் மத்தியிலும் சமாதானத்தை ஏற்படுத்துவதவே இவ்வாறான படைவீரர் கிராமங்களை உருவாக்கியுள்ளோம்;. அதேபோல் தற்போது அதியுயர் பாதுகாப்பு வலயங்கள் என்பது பெயர்பலகைகளுகக்கு மட்டுப்படுத்தப்பட்ட விடயமாகியுள்ளது.
எமது நாட்டின தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் விடுக்கப்படும் வகையிலான எந்த விதமான பாதகமான தன்மைகளும் தற்போது இடம்பெறவில்லை எனவே அதியுயர் வலையங்களிள் செயற்பாடுகள் பெயர்பலகைகளுக்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்டுள்ளன. அதேபோல் தற்போது அதியுயர் பாதுகாப்பு வலயங்களை விடுவித்து முன்னெடுக்கப்படும் மீள்குடியேற்ற செயற்பாடுகளினாலும் எமது எவ்வாறான எதிர்விளைவுகக்கு முகம்கொடுக்க வேண்டிய அவசியம் தோன்றாது அதனால் தேசிய பாதுகாப்பையும் கருத்திற்கொண்டாதாக மீள்குடியேற்ற செயற்பாடுகள் அமையும் என்றார்.    நன்றி வீரகேசரி 











முஸ்லிம் மக்களை சந்தித்து கலந்துரையாடிய கோத்தபாய

30/03/2016 முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ நீர்கொழும்பு போருதொட்ட பிரதேசத்திற்கு நேற்று முன்தினம் திங்கட்கிழமை மாலை விஜயம் செய்து பிரதேசத்தைச் சேர்ந்த முஸ்லிம் மக்களைச் சந்தித்து கலந்துரையாடினார்.
இந்த மக்கள் சந்திப்பு போருதொட்ட தக்கியா வீதியில் இடம்பெற்றது. மேல் மாகாண சபை உறுப்பினர் எம்.எஸ்.எம். சகாவுல்லாவின் அழைப்பின் பேரில் இடம்பெற்ற இந்த சந்திப்பின் போது கடந்த அரசாங்கக் காலத்தில் முஸ்லிம்கள் எதிர்நோக்கிய பல்வேறு விடயங்கள் தொடர்பில் அங்கு வாழ் முஸ்லிம் மக்கள் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவிடம் வினவினர். இந்த நிகழ்வில் மேல் மாகாண சபை உறுப்பினர் எம்.எஸ்.எம். சகாவுல்லா அங்கு உரையாற்றுகையில்
பொதுபலசேனாவின் பிரச்சினை காரணமாக சிறுபான்மை மக்களின் வாக்குகள் கடந்த தேர்தல்களின் போது மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்திற்கு கிடைக்கவில்லை. இதன் காரணமாக ஜனாதிபதி தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷ தோல்வியடைந்தார். இந்த சந்திப்பில் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவிடம் நேரடியாகவே இது தொடர்பாக பொது மக்கள் தமது சந்தேகங்களை கேட்கலாம் என்றார்.

இந்நிலையில் அங்கு வருகை தந்திருந்த மக்கள் தமது கேள்விகளை கேட்டதன் பின்னர், முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ அதற்கு பதிலளித்து உரையாற்றுகையில்
பொது பலசேனாவுடன் இருந்த பௌத்த மக்கள் தற்போது கடும் கோபத்தில் உள்ளனர். பொது பலசேனாவின் செயற்பாடுகள் காரணமாகவே சிறுபான்மையினரின் வாக்குகளை இழந்து முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதி தேர்தலில் தோற்றார் என்று இன்று பௌத்த மக்கள் குற்றச்சாட்டு சுமத்துகின்றனர்.
தம்புள்ள பள்ளிவாசல் தொடர்பான பிரச்சினையில் பொது பலசேனா சம்பந்தப்படவில்லை. அளுத்கமையில் இதற்கு முன்னரும் பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளன. ஆயினும் அப்போது அதனை யாரும் அரசியல் லாபத்திற்காக பயன்படுத்தவில்லை. கிரீஸ் பூதம் பிரச்சினையிலும் என் மீது பழிபோடப்பட்டது. அன்று எமது அரசாங்கத்தில் இருந்த முஸ்லிம் அரசியல்வாதிகள் மக்களுக்கு உண்மை நிலைமையை எடுத்துக் கூறவில்லை. இதன் காரணமாக முஸ்லிம் மக்கள் என் மீது சந்தேகப்பட்டனர் என்றார்.   நன்றி வீரகேசரி










 "இராணுவம் வெள்ளைவானில் கடத்திச் சென்றதை கண்டேன்"

30/03/2016 ஓமந்தை,எனது கணவரை வவுனியா, கல்மடு - ஈச்சங்குளம் வீதியில் வைத்து 57 ஆவது படைப்பிரிவு இராணுவம் வெள்ளைவானில் கடத்திச் சென்றதை கண்டேன் என பேரின்பராஜா பாலேஸ்வரி என்பவர் காணாமல் போனோர் தொடர்பான விசாரணைகளை நடத்தும் ஜனாதிபதி ஆணைக்குழுவிடம் சாட்சியமளித்தார்.
காணாமல் போனோர் தொடர்பாக விசாரணைகளை நடத்தும் மெக்ஸ்வெல் பரணகம தலைமையிலான ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணைகள் நேற்று வவுனியா பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற போதே ஆணைக்குழு முன் சாட்சியமளித்த குறித்த பெண் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். 


அவர் தனது சாட்சியத்தில் மேலும் தெரிவிக்கையில்,
நாங்கள் முல்லைக்குளம், கல்மடுவில் வசிக்கின்றோம். கடந்த 2007 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 08 ஆம் திகதி எனது கணவர் எமது பகுதியில் வசிக்கும் ஒருவருடன் வீட்டில் இருந்து மோட்டார் சைக்கிளில் வவுனியாவுக்கு சென்றார். காலையில் சென்றவர் 11.30 மணியளவில் வங்கியில் பணத்தை வைப்புச் செய்து விட்டு திரும்பி வந்து கொண்டிருந்தார். அந்த சந்தர்ப்பத்தில் ஈச்சங்குளத்திற்கும் - கல்மடுவிற்கும் இடையில் அமைக்கப்பட்டிருந்த இராணுவ காவலரண்கள் இரண்டின் அருகே வீதி தடை போடப்பட்டு மக்கள் அவ்வீதியால் செல்ல விடாமல் தடுக்கப்பட்டது.
இதன்போது அந்த இராணுவக் காவலரண் இரண்டும் அமைந்துள்ள பகுதிக்குள் வைத்து எனது கணவன் பேரின்பராஜா (வயது 34) மற்றும் அவருடன் சென்ற உதயகுமார் ஆகிய இருவரையும் 57 ஆவது படைப்பிரிவு இராணுவத்தினர் மோட்டார் சைக்கிளில் இருந்து இறக்கி வெள்ளை வானில் ஏற்றிச் சென்றனர்.
அவ்விடத்திற்கு அருகில் இருந்த எனது சகோதரி வீட்டில் இருந்த நான் எனது கணவனை கடத்தும் போது நேரில் கண்டேன். அந்த இராணுவத்தை இப்பொழுதும் என்னால் அடையாளம் காட்ட முடியும். நான் கணவன் நின்ற இடத்திற்கு செல்ல முற்பட்ட போது காவலரணில் இருந்த இராணுவம் என்னை செல்லவிடவில்லை. ஒரு காவலரணில் ஜெயவர்த்தன என்ற இராணுவ வீரர் இருந்தார். அவருக்கும் கடத்திய இராணுவத்தினரை தெரியும்.
அதன்பின் நான் இராணுவத்திடம் கேட்ட போது தாம் கடத்தவில்லை எனக் கூறிவிட்டார்கள். பொலிஸ்நிலையம், மனித உரிமை ஆணைக்குழு, இராணுவ முகாம் என எனது மூன்று பெண் பிள்ளைகளுடனும் ஏறி இறங்கி வருகின்றேன். இறுதியாக உங்களிடம் வந்துள்ளேன் என கண்ணீர் மல்க சாட்சியமளித்தார்.   நன்றி வீரகேசரி









மகள் திரும்பி வரு­வாளா ? : கதறி அழும் தாய்

30/03/2016 ஓமந்தை,எனது இரண்டு மகன்­களை ஷெல்­வீச்சில் பலி­ கொ­டுத்த நான் மக­ளையும் காணாமல் தவிக்கின்றேன் என சிவ­பாதம் செல்­வ­ராணி என்ற தாயார் காணாமல் போனோர் குறித்து விசாரணை நடத்தும் ஜனா­தி­பதி ஆணைக்­கு­ழு­விடம் நேற்று கண்ணீர் மல்க சாட்­சி­ய­ம­ளித்தார்.
வவு­னியா பிர­தேச செய­ல­க­த்தின் கேட்போர் கூடத்தில் நேற்று இடம்­பெற்ற காணா­மல்­போனோர் தொடர்­பான விசா­ரணை மேற்­கொள்ளும் ஜனா­தி­பதி ஆணைக்­கு­ழுவின் முன் சாட்­சி­ய­ம­ளிக்­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.
தொடர்ந்தும் அங்கு அவர் சாட்­சி­ய­ம­ளிக்­கையில் 
நானும் என் கண­வரும் 05 பிள்­ளை­க­ளுடன் எனது சொந்த ஊரான நெல்­வே­லிக்­கு­ளத்தில் இருந்து இடம்­பெ­யர்ந்து சென்றோம். விடு­த­லைப்­பு­லி­க­ளுக்கு எதி­ராக இலங்கை இராணும் நடத்­திய யுத்­தத்தின் உக்­கி­ரத்தால் இடம் பெயர்ந்த நாம் அங்­கா­டிகள் போல் ஒவ்­வொரு இட­மாக இடம்­பெ­யர்ந்து இறு­தி­யாக முள்­ளி­வாய்க்­காலை அடைந்தோம். அங்கு எமது உயிரை பாது­காக்க எண்­ணிய போதும் செல் தாக்­கு­தலில் அகப்­பட்டு என் இரு ஆண் பிள்­ளை­களை இழந்தேன்,

செல் வீச்சில் சித­றிய என் பிள்­ளை­களை எண்ணி அழு­வதா என் ஏனைய பிள்­ளை­களை காப்­பதா என்ற மரண போராட்­டத்தின் மத்­தியில் என் எஞ்­சிய பிள்­ளைகள் மற்றும் சக­வீ­ன­மான என் கண­வ­ருடன் உக்­கிர செல் அடி­யிலும் உயிரை காக்க முற்­பட்டேன்.
இந் நிலையில் நாம் ஒடிய போது செல் உக்­கி­ரத்தில் என் குடும்பம் சித­ற­டிக்­கப்­பட்டு இறு­தி­யாக எல்­லோரும் இணையும் போது என் மகளை தவ­ற­விட்டு விட்டேன்.
என் மகள் என்­னி­டத்தில் வந்து சேர்வாள் என்­றெண்ணி நந்­திக்­க­டலின் மிதந்து கிடக்கும் சிறு குழந்­தைகள் மற்றும் ஏனைய உடல்­களின் நடுவில் சிறு மண் திட்டில் ஒர் இர­விலும் பக­லிலும் காத்­தி­ருந்தும் பயனில்லாமல்போய் விட்டது.
என் மகள் திரும்பி வர மாட்டாளா என்றெண்ணி ஏங்கி ஏங்கி தவிக்கின்றேன், தற்போது எனக்கு நெஞ்சு நோய் ஏற்பட்டுள்ளது என்றார்.   நன்றி வீரகேசரி








வைத்தியர்கள் பாரிய ஆர்பாட்டம்



29/03/2016 இலங்கையில் மாதபேயில் அமைக்கப்பட்டுள்ள தனியார் மருத்துவக்கல்லூரியை மூடுமாறுகோரி இன்று நண்பகல் மட்டக்களப்பில் வைத்தியர்களினால் பாரிய ஆர்பாட்டம் மற்றும் கண்டன பேரணிகள் என்பன நடாத்தப்பட்டன.
மட்டக்களப்பு வைத்தியதிகாரிகள் சங்கம் ஏற்பாடு செய்த இப்போராட்டம் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை முன்பாக பேரணியாக ஆரம்பித்து மட்டக்களப்பு மஹாத்மா காந்தி பூங்காவில் நிறைவடைந்து அங்கு ஆர்பாட்டம் நடைபெற்றது. 
பெரும் எண்ணிக்கையிலான வைத்தியதிகாரிகள் இதில் பங்கு கொண்டிருந்தனர். 
மும்மொழிகளிலும் பதாதைகளையும் ஏந்தியிருந்தனர்.   நன்றி வீரகேசரி









குமார் குணரட்ணத்திற்கு ஒரு வருட சிறைத் தண்டனை

31/03/2016 முன்னிலை சேஷலிசக் கட்சியின் அரசியல் துறை பொறுப்பாளர் குமார் குணரட்ணத்திற்கு ஒரு வருட சிறைத்தண்டனையும் 50 ஆயிரம் ரூபா அபராதமும் விதித்து கேகாலை நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

குடிவரவு சட்டத்தை மீறியமை தொடர்பிலேயே குமார் குணரட்ணத்திற்கு கேகாலை நீதிமன்றம்  ஒரு வருட சிறைத்தண்டனையும் 50 ஆயிரம் ரூபா அபராதமும் விதித்து தீர்ப்பளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.   நன்றி வீரகேசரி










வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தினால் தொழில் உரிமைப் போராட்டம்


31/03/2016 மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள வேலையற்ற பட்டதாரிகளுக்கு நிரந்தர வேலைவாய்ப்பை வழங்குமாறு கோரி அம்மாவட்டத்தில் இன்று ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.
மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தின்  மட்டக்களப்பு நகரிலுள்ள காந்தி பூங்காவுக்கு முன்பாக நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதன்போது, வேலையற்ற பட்டதாரிகளுக்கு நிரந்தர வேலைவாய்ப்பை வழங்குமாறு வலியுறுத்தப்பட்டதுடன், மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள வேலையற்ற பட்டதாரிகளுக்கு நியமனம் வழங்குவதாக கிழக்கு மாகாண முதலமைச்சரினால் வழங்கப்பட்ட வாக்குறுதி நிறைவேற்றப்படாமை தொடர்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.


வேலையற்ற பட்டதாரிகளுக்கு உடனடியாக வேலைவாய்ப்பை வழங்குவதை துரிதப்படுத்துவதுடன், அதற்கான உத்தியோகபூர்வ அறிவிப்பை வெளியிட்டு ஆக்கபூர்வமான நடவடிக்கையை எடுக்க வேண்டுமென மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தின் தலைவர் ரி.கிஷாந்த் தெரிவித்தார். 
 நன்றி வீரகேசரி








புனர்வாழ்வுடன் 7 முன்னாள் புலி உறுப்பினர்கள் விடுதலை


31/03/2016 வவுனியா பூந்தோட்டம் புனர்வாழ்வு முகாமில் புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர்கள் 7 பேர்நேற்று விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
புனர்வாழ்வு பெற்று வந்த 46 முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர்களில் 7 பேரே இவ்வாறு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.  நன்றி வீரகேசரி







பிள்ளையானுக்கு பிணை மறுப்பு.!


01/04/2016 முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவரும் கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான சிவநேசதுரை சந்திரகாந்தனுக்கு பிணை கோரிய மனு தொடர்பான வழக்கு எதிர்வரும் 28.4.2016 ஆம் திகதிக்கு மட்டக்களப்பு மேல் நீதிமன்றத்தினால் ஒத்தி வைக்கப்பட்டது.
கடந்த 25.5.2005 ஆம் ஆண்டு மட்டக்களப்பு புனித மரியாள் தேவாலயத்தில் ஆராதனையில் ஈடுபட்டிருந்த தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசங்கத்தின் படுகொலை தொடர்பான சந்தேகத்தின் பேரில் பிள்ளையான் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.   நன்றி வீரகேசரி











குற்றவாளிகளுக்கு தண்டணை வழங்குங்கள்: வித்தியாவின் தாயார் ஜனாதிபதியிடம் கோரிக்கை


03/04/2016 எனது மகளின் படுகொலை விசாரணையை விரைவுபடுத்தி விரைவில் நீதியை பெற்றுத்தாருங்கள் என வித்தியாவின் தாயார் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்தார்.
வவுனியா நகர்ப்பகுதியில் வித்தியாவின் குடும்பத்தினருக்கு வீடு கையளிக்கும் நிகழ்வு இன்று பகல் இடம்பெற்றபோதே வித்தியாவின் தாயார் இக்கோரிக்கையை முன்வைத்தார்.
யாழ்ப்பாணம் புங்குடுதீவில் வன்புணர்வு செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வித்தியாவின் தாயாரை ஜனாதிபதி யாழ்ப்பணத்தில் சந்தித்திருந்தபோத தனது குடும்பத்தினருக்கு பாதுகாப்பு கருத்தி வவுனியாவில் வீடொன்றை பெற்றுத்தருமாறு கோரியிருந்தார். இந்நிலையில் வவுனியா காமினி மகா வித்தியாலயத்திற்கு அருகாமையில் வீடொன்று நிர்மாணிக்கப்பட்டிருந்தது.
இதனை ஜனாதிபதியினால் கையளிக்கும் நிகழ்வு வவுனியாவில் இடம்பெற்றபோதே வித்தியாவின் தாயார் இக்கோரிக்கையை முன்வைத்திருந்ததுடன் மகளின் கொலை தொடர்பான விசாரணையை விரைவுபடுத்தி குற்றவாளிகளுக்கு விரைவில் தண்டனை வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்நிகழ்வில் ஜனாதிபதியுடன் பாதுகாப்பு அமைச்சின் செயலளார், பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ரூவான் விஜயவர்த்தன, வன்னி பாராளுமன்ற உறுப்பினர் கே.கே. மஸ்தான் உட்பட பலரும் கலந்துகொண்டிருந்த நிலையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர் நிகழ்வை புறக்கணித்திருந்தனர்.   நன்றி வீரகேசரி