தமிழ் சினிமா ஷமிதாப்

.


 தனுஷ் தொட்டதெல்லாம் பொன்னாகும் காலம் போல, தென்னிந்திய சினிமா தாண்டி பாலிவுட்டில் இவர் நடித்த ராஞ்சனா மாபெரும் வெற்றி பெற்று ரூ 100 கோடி வரை வசூல் செய்தது. இந்நிலையில் அடுத்த இவர் என்ன செய்யவிருக்கிறார் என்று பாலிவுட் திரையுலகமே யோசித்த போது, அடுத்த அடியை இடியாக இந்திய சினிமாவின் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சனுடன் ஒரு படத்தில் நடிக்க கமிட் ஆனார்.பாலிவுட் திரையுலகின் முன்னணி இயக்குனர் பால்கி (தமிழ் தெரிந்த பாலிவுட் இயக்குனர்) தன் ஆஸ்தான டீமான அமிதாப், பி.சி, இளையராஜா என களம் கண்ட படம் தான் இந்த ஷமிதாப். இதில் எக்ஸ்ட்ராவாக தனுஷ் வந்து ஒட்டிக்கொண்டுள்ளார்.

கதை

தனுஷ் எப்படியாவது ஒரு பெரிய நடிகனாக வேண்டும் என்று போராடிக்கொண்டு இருக்கிறார். அப்போது உதவி இயக்குனராக இருக்கும் அக்‌ஷ்ரா கண்ணில் பட, இவர் திறமையை கண்டு தன்னால் முடிந்த உதவியை செய்கிறார்.

ஆனால், தனுஷ் காது கேளாதவர் மற்றும் வாய் பேச முடியாதவர். இது ஒரு தடையாக இருக்க கூடாது என்று, சில தொழில் நுட்பம் உதவியை நாடுகிறார்கள். தனுஷின் கம்பீர குரலாக அமிதாப் தோன்றுகிறார். அதன் பின் என்ன இவர்களுக்கிடையே நடக்கும் டாம்&ஜெர்ரி ஈகோ மோதல் தான் மீதிக்கதை. மேலும், யாரும் எதிர்ப்பார்க்காத உருக வைக்கும் கிளைமேக்ஸ்.

நடிகர், நடிகைகளின் பங்களிப்பு

தனுஷ் தான் ஒரு சிறந்த நடிகர் என்று படத்திற்கு படம் நிருபித்து கொண்டே இருக்கிறார். இதற்கு மேல் அவர் தன்னை ஒரு திறமை சாலி என்று நிருபிக்க வேண்டிய அவசியமில்லை. அதேபோல் சும்மாவா சொன்னார்கள் சூப்பர் ஸ்டார் என்று, ஒவ்வொரு காட்சியிலும் சின்ன பசங்களுக்கு இணையாக சிக்ஸர் அடிக்கிறார் அமிதாப். அக்‌ஷரா அவர் இரத்தத்திலேயே நடிப்பு உள்ளது, பிறகு என்ன எல்லோரும் தங்கள் பாத்திரங்களை சிறப்பாகவே செய்துள்ளனர்.

க்ளாப்ஸ்

படத்தின் பலமே அமிதாப்பின் கம்பீரமான குரல் தான், அதற்காகவே இப்படம் தமிழில் டப்பிங் ஆகவில்லை, இளையராஜாவின் இசை, இன்றைய இளைஞர்கள் இன்னும் இவரை தொட பல படிகள் ஏற வேண்டும். பின்னணி இசையில் பின்னுகிறார் இசைஞானி.

பி.சி ஒளிப்பதிவு தான் எப்போது சரியில்லாமல் போனது தற்போது போல, எப்போதும் கிங் தான். படத்தின் வசனம் ஒவ்வொன்றும் யதார்த்தமாகவும், உணர்வுப்பூர்வமாகவும் உள்ளது.

பல்ப்ஸ்

சில படங்களில் நெகட்டிவ் 1, 2 இருந்தாலும் அதை சொல்ல மனம் வராது, அப்படி ஒரு திரைப்படம் தான் ஷமிதாப்.

மொத்தத்தில் ஷமிதாப், குரலா?, உருவமா? அவர்களுக்குள் நடக்கும் போட்டியில் மக்கள் மனதை வென்று விட்டது.

ரேட்டிங்-3.5/5  

நன்றி cineulagam

No comments: