சங்க இலக்கியக் காட்சிகள் 39- செந்தமிழ்ச்செல்வர், பாடும்மீன் சு.ஸ்ரீகந்தராசா

.
பண்டைத் தமிழ் மக்களின் வாழ்க்கை முறைகளையும்ää  பண்பாட்டினையும் படம்பிடித்துக்காட்டும் சான்றுகளாகத் திகழும்சங்க இலக்கியங்கள் குறித்துரைத்து நிற்கும் சுவைமிகுந்த காட்சிகளை வெளிப்படுத்தும் கட்டுரைத்தொடர்.

எனக்கு நீ தலைவனுமில்லை! 
உனக்கு நான் பணியாளுமில்லை!


தலைவன் அரசபணியாக வெளிய10ர் சென்றுவிட்டான். திரும்பி வருவதாக அவன் சொல்லிச் சென்ற காலமும் கடந்துவிட்டது. அவன் வரவில்லை. அவனைப் பிரிந்ததினால் எற்பட்ட துன்பத்தில் வாடியிருந்த தலைவிக்குக் குறித்த காலம் கடந்தபின்னரும் அவன் வராமல் இருப்பதால் துயரம் அதிகமாகிää அவள் துடித்துப் போகின்றாள். அது பெருநோயாகி அவள் உடல் மெலிந்துää களையிழந்து கிடக்கிறாள். அவளின் தோழி அவளுக்கு ஆறுதல் வார்த்தைகளைக் கூறுகின்றாள். இந்த நேரத்தில் தலைவனிடமிருந்து தூதுவனாகப் பாணன் ஒருவன் வருகின்றான்.  தலைவன் சென்ற வேலை இன்னும் முடியவில்லை என்றும் அதனால் இன்னும் சிலகாலம் பிரிவுத் துயரைப் பொறுத்துக்கொள்ளுமாறும் தலைவிக்குச் சொல்லிவருமாறு தன்னைத் தூதாக அனுப்பியதாகக் கூறுகின்றான். அப்போது அவனைப் பார்த்துத் தோழி சொல்கிறாள்:



“பாணனே! இவளது கைகளைப் பார். அவை மெலிந்துவிட்டதால்ää ஓளி வீசுகின்ற கைவளையல்கள் அந்தக் கைகளிலிருந்து நெகிழ்ந்து கழன்று விழுகின்றன. இவளின் உள்ளத்தில் ஏற்பட்ட துன்பத்தினால் உடல் வாடி வதங்கிவிட்டது. பல இதழ்களையுடைய மலர்களைப் போன்றனவும்ää மைதீட்டப்படுவனவுமான இவளது கண்கள் துயரத்தினால் கலங்கிக் கிடக்கின்றன. இவ்வளவும் ஏற்படக்கூடியவிதமாக இவளைத் தனிமையிலே விட்டுப்பிரிந்து சென்றிருக்கிறான் கடமையுணர்வு நிரம்பிய உனது தலைவன். உன்னைப் பார்த்தால் நீயும் இதையெலெ;லாம் உணர்கின்றவன் போலத்தெரியவில்லை. இப்பொழுதும் நீ அவனது தூதுவனாகத்தான் வந்திருக்கிறாய். உன்தலைவனின் தகுதிதான் என்னவோ?”
என்று ஏழனமாகக் கூறிக் குற்றம் சாட்டுகின்றாள்ää

பாடல்:

எல்வளை நெகிழää மேனி வாடப்
பல்லிதழ் உண்கண் பனியலைக் கலங்கத்
துறந்தோன் மன்ற. மறங்கெழு குருசில்
அதுமற் றுணர்ந்தனை போலாய்
இன்னும் வருதிää என் அவர் தகவே.

(ஐங்குறுநுர்று. முல்லைத்திணை. பாடல் இல:471. பாடியவர்: பேயனார் என்ற பெரும் புலவர்)

தோழியின் சுடுமொழி கேட்ட தலைவி பாணனுக்குச் சார்பாகப் பேசுகின்றாள். “தோழி அவனைக் குறை சொலல்லாதே அவனைப் பார்த்தால் அப்படிப்பட்டவனாகத் தெரியவில்லை. நான் அணிந்திருந்த தொடிகள் நெகிழ்ந்து சோர்ந்து விழும் அளவுக்கு வாட்டமுற்றிருக்கின்ற எனது தோள்களையும்ää அழகை இழந்துவிட்ட எனது கண்களையும் பார்த்துவிட்டுää சிறியயாழ் மீட்டும் இந்தப் பாணன் பெரிதாகப் புலம்பிவிட்டான். என்னை விரும்பிய நிறைந்த காதலோடு நம்மைப் பிரிந்து சென்ற தலைவனைப் போன்றவனல்ல இவன். இவனைப் பழித்துப் பேசாதே. நம்மீது மிகுந்த அன்புடையவன் இவன்.” என்று தலைவி தோழியைப் பார்த்துக் கூறுகின்றாள்.

பாடல்:

தொடிநிலை கலங்க வாடிய தோளும்
வடிநலன் இழந்தவென் கண்ணும் நோக்கிப்
பெரிதும் புலம்பின்னேää சீறியாழ்ப் பாணன்
எம்வெங் காதலொடு பிரிந்தோர்
தம்மோன் போலான். பேரன்பினனே!

(ஐங்குறுநுர்று. முல்லைத்திணை. பாடல் இல:475. பாடியவர்: பேயனார்)

பிரிவாற்றாமையால் தலைவி படுகின்ற வேதனையை நேரிலே சென்றறிந்த பாணன் தலைவனிடம் சென்று அதுபற்றி எடுத்துக்கூறுகின்றான். தலைவன் ஏற்றுள்ள பணியிலிருந்து சிலநாட்களாவது விடுமுறை எடுத்துக்கொண்டு அவளைச் சென்று கண்டுää அவளது துன்பத்தைப் போக்கும்படி தலைவனிடம் வேண்டுகின்றான். தனக்கு அவ்வாறு கடமையை விட்டுவிட்டு இடையிலே செல்ல முடியாதென்றும்ää  இன்னும் கொஞ்சக்காலம் அவளைப் பொறுத்திருக்குமாறு அவளிடம் சென்று கூறிவரும்படியும் தலைவன் பாணனைக் கேட்கின்றான். தான் எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் இன்னமும் இரக்கமில்லாமல் தன் கடமையே பெரிதென்று நினைக்கின்ற தலைவன் மீது பாணனுக்கக் கோபம் வருகின்றது. “இப்படிப்பட்ட உனக்கு நான் மட்டுமல்ல எங்கள் இனமே இனிமேல் பணியாளாயிருக்க மாட்டோம்ää நீயும் எங்களுக்குத் தலைவனல்லää உன்னிடம் வேலை செய்ய எனக்கு விருப்பமுமில்லை. நான்போகிறேன்” என்று பாணன் சொல்கின்றான். இந்தக் காட்சியைக் கூறும் பாடல் வருமாறு:

பாடல்:

நினக்கியாம் பாணரும் அல்லேம்ää எமக்கு
நீயும் குருசிலை யல்லை மாதோ
நின்வெங் காதலி தன்மனைப் புலம்பி
ஈரிதழ் உண்கண் உகுத்த
பூசல் கேட்டும் அருளாதோயே!

(ஐங்குறுநுர்று. முல்லைத்திணை. பாடல் இல:480. பாடியவர்: பேயனார்)

இதன் நேரடிக்கருத்து:

 உன்னையே தன் உள்ளத்தால் விரும்பிää வாடிய தன் உயிரைப் போய்விடாதபடி உனக்காகக் காத்திருக்கும் உன் காதலிää தன் இல்லத்திலேயிருந்து பிரிவுத்துயரால் துன்புற்றுää குளிர்ச்சியான மலர்களைப் போன்றனவும்ää மைதீட்டப்பெறுவனவுமான அவளது கண்கள் கலங்கி வெளிப்படுத்திய அவளின் துயரத்தைப்பற்றி நான் இவ்வளவுநேரமும் சொன்னவற்றையெல்லாம் கேட்டதற்குப் பிறகும்ää நீ அவளுக்கு இரங்கி அவளைச் சென்று காண நினைக்காதிருக்கிறாய். ஐயா! இனி நாங்கள் உனக்குப் பணிசெய்யும் பாணர்களல்ல. எங்களுக்கு நீ தலைவனுமல்ல. (என்று தலைவனைப் பார்த்துப் பாணன் கூறுவதாக அமைந்த செய்யுள் இது)

No comments: