உலகச் செய்திகள்


பங்களாதேஷில் பெற்றோல் குண்டு தாக்குதல்; 9 பேர் பலி

ஈராக்கில் தற்கொலை குண்டு தாக்குதல் : 14 பேர் பலி

டில்லி சட்டசபைத் தேர்­தலில் ஆம் ஆத்மி அமோக வெற்றி

சிலி மற்றும் ஆர்ஜென்டீனா எல்லையில் பூமியதிர்ச்சி

பங்களாதேஷில் பெற்றோல் குண்டு தாக்குதல்; 9 பேர் பலி

09/02/2015 பங்­க­ளா­தேஷில் பஸ்­ஸொன்றின் மீதும் டிரக் வண்­டி­யொன்றின் மீதும் பெற்றோல் குண்­டு­களை வீசி மேற்­கொள்­ளப்­பட்ட தாக்­கு­தல்­களில் குறைந்­தது 9 பேர் பலி­யா­ன­துடன் 30 பேருக்கும் அதி­க­மானோர் காய­ம­டைந்­துள்­ள­தாக அந்­நாட்டு பொலிஸார் தெரி­வித்­தனர்.

கடந்த மாதம் அர­சாங்க எதிர்ப்பு ஆர்ப்­பாட்­டங்கள் ஆரம்­ப­மா­னது முதற்­கொண்டு இது­வரை இடம்­பெற்ற தாக்­கு­தல்­களில் 70 பேருக்கும் அதி­க­மானோர் பலி­யா­கி­யுள்­ளனர்.
கடந்த வருடம் இடம்­பெற்ற சர்ச்­சைக்­கு­ரிய தேர்­தலின் ஆண்டு தினத்­தை­யொட்டி பொது பகிஷ்­க­ரிப்புப் போராட்­ட­மொன்­றுக்கு எதிர்க்­கட்­சி­யான பங்­க­ளாதேஷ் தேசிய கட்சி அழைப்பு விடுத்­தி­ருந்­தது.


அந்தத் தேர்­தலை பங்­க­ளாதேஷ் தேசிய கட்சி பகிஷ்­க­ரிப்புச் செய்­தி­ருந்­தது.கயி­பண்­டா­வா­லி­ருந்து டாக்­காவை நோக்கிச் சென்ற பஸ் மீது வெள்­ளிக்­கி­ழமை இரவு நடத்­தப்­பட்ட பெற்றோல் குண்டு தாக்­கு­தலில் ஆறு பேர் பலி­யா­கி­யுள்­ளனர்.
அதே­ச­மயம் பரிஸல் மாவட்­டத்தில் டிரக் வண்­டி­யொன்றை இலக்கு வைத்து சனிக்­கி­ழமை நடத்­தப்­பட்ட பெற்றோல் குண்டுத் தாக்­கு­தலில் 3 பேர் பலி­யா­கி­யுள்­ளனர்.
இந்த வன்முறைகளுக்கு எதிர்க்கட்சித் தலைவி காலிதா ஸியாவே காரணம் என குற்றஞ்சாட்டப்படுகிறது.  நன்றி வீரகேசரி

ஈராக்கில் தற்கொலை குண்டு தாக்குதல் : 14 பேர் பலி

09/02/2015 வட ஈராக்கில் தற்கொலை குண்டுதாரியொருவர்  நடாத்திய தாக்குதலில் 14 பேர் பலியானதுடன் 43 பேருக்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர்.

கதிமியஹ் பிரதேசத்தில் அடென் சதுக்கத்தில் நடைபாதை வியாபாரிகளுக்கு அண்மையில் வந்து தற்கொலைக் குண்டுதாரி குண்டை வெடிக்கச்செய்துள்ளார்.
இது அந்நாட்டு தலைநகரில் 3 நாட்களில் இடம்பெற்ற இரண்டாவது தற்கொலைக் குண்டுத்தாக்குதலாகும்.  நன்றி வீரகேசரி


டில்லி சட்டசபைத் தேர்­தலில் ஆம் ஆத்மி அமோக வெற்றி

11/02/2015 இந்­தி­யாவின் டில்லி மாநி­லத்தின் சட்­டப்­பே­ர­ வைக்­காக கடந்த சனிக்­கி­ழமை நடை­பெற்ற தேர்­தலில் ஆம் ஆத்மி கட்சி மாபெரும் வெற்­றி­பெற்று ஆட்­சியை கைப்­பற்­றி­யுள்­ளது. அந்­த­வ­கையில் அர­விந்த கெஜ்­ரிவால் மீண்டும் டில்லி முதல்­வ­ரா­கின்றார்.

டில்லி சட்டப் பரே­வையில் மொத்­த­மாக காணப்­படும் 70 தொகு­தி­களில் 67 இடங்­களில் வெற்­றி­பெற்­றுள்ள ஆம் ஆத்மி கட்சி பெரும்­பான்மை பலத்­துடன் டில்­லியில் ஆட்­சி­ய­மைக்­கின்­றது. இந்­தி­யாவின் மத்­தியில் ஆட்­சியில் உள்ள பார­திய ஜனதாக் கட்சி மூன்று ஆச­னங்­களை கைப்­பற்றி வெற்­றி­யீட்­டி­யுள்­ளது.
ஆம் ஆத்மி கட்­சியின் தலை­வ­ரான அரவிந்த் கெஜ்­ரிவால் 31583 வாக்­குகள் வித்­தி­யா­சத்தில் வெற்றி பெற்­றுள்ளார். ஆம் ஆத்­மியின் முத­ல­மைச்சர் வேட்­பா­ள­ரான அரவிந்த் கெஜ்­ரிவால் 57213 வாக்­கு­களை பெற்று இத் தேர்­தலில் வெற்­றிப்­பெற்­றுள்ளார்.
அவரை எதிர்த்து போட்­டி­யிட்ட பா.ஜ.க.வின் நுபுர் சர்­மா­விற்கு 25630 வாக்­கு­களும், காங்­கிரஸ் வேட்­பாளர் கிரண் வாலி­யா­விற்கு 4781 வாக்­கு­களும் மட்­டுமே கிடைத்­துள்­ளன.இதன் மூலம் டில்­லியின் அடுத்த முதல்­வ­ராக கெஜ்­ரிவால் எதிர்­வரும் 14 ஆம் திகதி பதவி ஏற்க உள்ளார்.
டில்லி சட்­ட­பே­ரவை தேர்தல் கடந்த சனிக்­கி­ழமை நடை­பெற்­றது. இந்­நி­லையில் நேற்று தேர்தல் முடி­வுகள் வெளி­யா­கின. இதன்­போது எதிர்­பார்ப்­பு­களை விட அதி­க­மான இடங்­களை பெற்ற ஆம் ஆத்மி இத்­தேர்­தலில் வெற்­றிப்­பெற்­றுள்­ளது
இதே­வேளை இத்­தேர்­தலில் பா.ஜ.க.வின் முத­ல­மைச்சர் வேட்­பா­ள­ராக முன்­னி­றுத்­தப்­பட்ட கிரண் பேடி தோல்­வியை தழு­வி­யுள்ளார். இவர் தன்னை எதிர்த்து போட்­டி­யிட்ட ஆம் ஆத்மி வேட்­பா­ள­ரான வழக்­க­றிஞர் எஸ்.கே. பக்­கா­விடம் 2277 வாக்­குகள் வித்­தி­யா­சத்தில் தோல்­வி­ய­டைந்­துள்ளார். பக்­கா­வுக்கு 65919 வாக்­கு­களும், கிரண் பேடிக்கு 63642 வாக்­கு­களும் கிடைத்­துள்­ளன. காங்­கிரஸ் கட்­சியின் வேட்­பா­ள­ரான பன்­சி­லா­லுக்கு 6189 வாக்­குகள் மட்­டுமே கிடைத்­துள்­ளன.
கடந்த 2013 ஆம் ஆண்டு டில்லி சட்­ட­ச­பைக்கு நடை­பெற்ற தேர்­தலில் 28 இடங்­களைக் கைப்­பற்­றிய ஆம் ஆத்மி கட்சி காங்­கி­ரஸின் ஆத­ர­வுடன் ஆட்சி அமைத்­தது. ஆனால் ஆட்சி அமைத்த 49 நாட்­க­ளுக்கு பின்னர் 2014 ஆம் ஆண்டு பெப்­ர­வரி 14-ஆம் திகதி முதல்வர் பத­வியை அரவிந்த் கெஜ்ரிவால் இராஜினாமா செய்தார்.
இந்நிலையில் தற்போது சட்டசபை தேர்தலில் வெற்றிப்பெற்றுள்ள கெஜ்ரிவால் தான் முதல்வர் பதவியில் இருந்து இராஜினாமா செய்த பெப்ரவரி 14 ஆம் திகதியில் மீண்டும் பதவி ஏற்க உள்ளார்.  நன்றி வீரகேசரி


சிலி மற்றும் ஆர்ஜென்டீனா எல்லையில் பூமியதிர்ச்சி

12/02/2015 சிலி மற்றும் ஆர்ஜென்டீனா எல்லைப்பிராந்தியத்தில் 6.7 ரிச்டர் அளவான பூமியதிர்ச்சி நேற்று இரவு தாக்கியுள்ளது.
ஆர்ஜென்டீனாவின் அகுயிலா நகரின் மேற்கே 93 கிலோ மீற்றர் தொலைவில் 190 கிலோ மீற்றர் ஆழத்தில் தாக்கிய இந்த பூமியதிர்ச்சியால் ஏற்பட்ட சேத விபரங்கள் அறிக்கையிடப்படவில்லை.     நன்றி வீரகேசரி

No comments: