காதல் - சேது சுப்ரமணியம்

.

காதல் ,
அழகைப் பார்ப்பதில்லை 
ஆற்றலைப் பார்ப்பதில்லை 
இனம் , மொழி  பார்ப்பதில்லை 
ஈன்றவரைப் பார்ப்பதில்லை 
உறவுகளைப் பார்ப்பதில்லை 
ஊர் ,உலகம் பார்ப்பதில்லை 
எந்த மதம் பார்ப்பதில்லை  
ஏற்றவனா பார்ப்பதில்லை 
ஐயஸ்வர்யம் பார்ப்பதில்லை 
ஒழுக்கத்தைப் பார்ப்பதில்லை 
வயதும் பார்ப்பதில்லை 
பள்ளிப் பருவத்திலும் வரும் 


பாடைப் பருவத்திலும் வரும் 
வெற்றியும் அடைவதுண்டு 
தோல்வியும் வருவதுண்டு 
உணர்ச்சிவசக் காதல் 
உடனே கருகிவிடும்.
உணர்வு பூர்வக் காதல் 
உறவில் நிலைத்துவிடும். 
காதல் கொள்வீர் 
காதலைப் போற்றுவீர்.
காதலில் வெல்வீர் 
சாதலைத் தவிர்ப்பீர் 
காதல் வாழ்க 
காதலர் வாழ்க 
காதலர்  தினம் வாழ்க  
காதலர்தினம்   வாழ்க 

சிலேடை சித்தர் சேது சுப்ரமணியம் 
99401 93912 

No comments: