பிரம்மோஸ் சோதனை வெற்றி

.

ஒலியைவிட அதிக வேகத்தில் 290 கி.மீ. வரை சென்று இலக்கை தாக்கும் திறன்கொண்ட பிரம்மோஸ் ஏவுகணையை கடற்படை கப்பலில் இருந்து செலுத்தி, இந்தியா நேற்று வெற்றிகரமாக பரிசோதித்துள்ளது.
கோவா கடற்கரையில் நிறுத்தப்பட்டிருந்த, கடற்படையின் சக்திவாய்ந்த மற்றும் புதிய போர்க் கப்பலான ‘ஐ.என்.எஸ். கொல்கத்தா’வில் இருந்து இந்த ஏவுகணை செலுத்தப்பட்டது. நிர்ணயிக்கப்பட்ட திசையில் சென்று இலக்கை துல்லியமாக இது தாக்கியது.
ஐ.என்.எஸ். கொல்கத்தா போர்க் கப்பல் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 16-ம் தேதி கடற்படையில் சேர்க்கப்பட்டது. அதிக எண்ணிக்கையில் பிரம்மோஸ் ஏவுகணைகளை ஏவும் திறன் இந்தக் கப்பலுக்கு உள்ளது. வழக்கமான போர்க் கப்பல்கள் ஒரே நேரத்தில் 8 ஏவுகணைகளை மட்டுமே செலுத்தும். ஆனால் ஐஎன்எஸ் கொல்கத்தா ஒரே நேரத்தில் 16 ஏவுகணை களை செலுத்தும் திறன் கொண்டது. இந்த வகையி லான போர்க் கப்பல்களில் இதுவே முதலானது.
இதுபோல மேலும் இரண்டு போர்க் கப்பல்கள் கடற்படையில் சேர்க்கப்பட உள்ளன. இந்த 3 கப்பல்களிலும் முக்கிய ஆயுதமாக பிரம்மோஸ் ஏவுகணை இடம்பெறும். இந்த கப்பல்களில் பயன்படுத்தப்படும் ஏவுகணை செலுத்து வாகனம் (universal vertical launcher module UVLM) தனித்தன்மை வாய்ந்தது. பிரம்மோஸ் ஏரோஸ்பேஸ் நிறுவனம் மூலம் இது வடிவமைக்கப்பட்டு காப்புரிமை பெறப்பட்டுள்ளது. ரேடார் கண்களில் சிக்காமலும், எந்த திசையிலும் ஏவுகணைகளை செலுத் தும் திறனும் இந்த செலுத்து வாகனத்துக்கு உள்ளது.

No comments: