உலகச் செய்திகள்


மலேசிய எம்.எச்.370 விமானம்: அல் கொய்தாவுடன் தொடர்புடைய 11 தீவிரவாதிகள் கைது

மலேசிய 'எம்.எச்.370' விமானத்தை கண்டுபிடிப்பது தொடர்பில் அவுஸ்திரேலியாவில் பேச்சுவார்த்தை

மீட்பு பணியில் ஈடுப்பட்டிருந்த சுழியோடி உயிரிழப்பு

தீ அனர்த்தத்தின் போது 4 ஆவது மாடியில் இருந்து பிள்ளைகளை தூக்கி வீசிய தாய்

பாகிஸ்தானில் மதநிந்தனை செய்தவருக்கு ஆதரவாக வாதிட்ட சட்டத்தரணி சுட்டுக்கொலை

மலேசிய எம்.எச்.370 விமானம்: அல் கொய்தாவுடன் தொடர்புடைய 11 தீவிரவாதிகள் கைது

05/05/2014    மலேசிய எம்.எச். 370 விமானம் காணாமல் போனமைக்கு பின்னணியில் இருந்த சந்தேகத்தில் அல் - கொய்தாவுடன் தொடர்புடைய 11தீவிரவாதிகளை அந்நாட்டு அதிகாரிகள் கைது செய்து விசாரணைக்குட்படுத்தியுள்ளனர். 
முஸ்லிம் நாடுகளில் குண்டுத் தாக்குதல்களை நடத்துவதற்கு திட்டமிட்டிருந்த புதிய தீவிரவாத குழுவொன்றின் உறுப்பினர்களென நம்பப்படும் இந்த 11 பேரும் தலைநகர் கோலாலம்பூரிலும் கெடாஹ் மாநிலத்திலும் வைத்து கைது செய்யப்பட்டனர். 
எப்.பி.ஐ. மற்றும் எம்.16 உள்ளடங்கலான சர்வதேச புலனாய்வாளர்களின் கோரிக்கையையடுத்தே மாணவர்கள் வழமைக்கு மாறான பணியில் ஈடுபட்டுள்ளவர்கள்  இளம் கைம்பெண் உயர் தொழில் உத்தியோகத்தர்கள் ஆகியோரை உள்ளடக்கிய மேற்படி குழுவினரை மலேசிய அதிகாரிகள் விசாரணைக்கு உட்படுத்தியுள்ளனர். 
இந்தக் குழுவைச் சேர்ந்தவர்கள் 22 வயதுக்கும் 55 வயதுக்கும் இடைப்பட்ட வயதுடையவர்களாவர். 
அவர்களிடம் காணாமல் போன எம்.எச்.370 விமானம் தொடர்பில் தீவிரமாக விசாரிக்கப்பட்டு வருகிறது. 
எம்.எச்.370 விமானத்தில் பட்டியல் படுத்தப்படாத நிலையில் ஏற்றப்பட்டிருந்த 2.3 தொன் சரக்கு தொடர்பில் மலேசிய விமான சேவை தரவுகளை வெளியிட மறுத்துள்ளமை பல்வேறு ஊகங்களை தோற்றுவித்துள்ளதாக கூறப்படுகிறது. 
அந்த விமானத்தில் ஏற்றப்பட்டிருந்த சரக்குகளின் மத்தியில் 200 கிலோகிராம் லிதியம் பற்றி இருந்ததை அந்த விமானசேவை ஒப்புக் கொண்டுள்ள போதும் தற்போது இடம்பெற்று வரும் விசாரணைகளுடன் தொடர்புபட்ட சட்டக் காரணங்களுக்காக அது தொடர்பில் மேலதிக விபரங்களை வழங்க முடியாதுள்ளதாக தெரிவித்துள்ளது. 
எம்.எச். 370 விமானம் போராளிகளால் திசை திருப்பப்பட்டிருப்பதற்கான சாத்தியம் குறித்து சர்வதேச புலனாய்வாளர்கள் தொடர்ந்து கவனம் செலுத்துவதாகவும் அதன் பிரகாரம் கைது செய்யப்பட்டுள்ள தீவிரவாத குழு தொடர்பில் பரந்தளவான அறிக்கையொன்றை அவர்கள் கோருவதாகவும் மலேசிய தீவிரவாதத்துக்கு எதிரான விசேட பிரிவின் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.  நன்றி வீரகேசரி மலேசிய 'எம்.எச்.370' விமானத்தை கண்டுபிடிப்பது தொடர்பில் அவுஸ்திரேலியாவில் பேச்சுவார்த்தை

06/05/2014    காணாமற்போன மலேசிய 'எம்.எச்.370' விமானத்தை தேடும் நடவடிக்கை தொடர்பான வழிமுறையை திட்டமிடும் முகமாக அவுஸ்திரேலிய, மலேசிய மற்றும் சீன அதிகாரிகள் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.
மலேசிய மற்றும் சீன போக்குவரத்து அமைச்சர்கள் காணாமற் போன விமானத்தை தேடும் நடவடிக்கைக்கு தலைமை தாங்கும் அங்கஸ் ஹூஸ்டன் மற்றும் அவுஸ்திரேலிய பிரதிப் பிரதமர் வரென் தரஸ் ஆகியோர் கன்பராவில் சந்தித்து மேற்படி பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளனர்.
கடந்த மார்ச் 8ஆம் திகதி 239 பேருடன் கோலாலம்பூரிலிருந்து பீஜிங் நகருக்கு பயணித்த வேளை காணாமற் போன 'எம்.எச்.370' விமானத்தை தேடுவதற்காக இதுவரை மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையில் விமானத்தின் சிதைவுகள் எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை. 
இந்நிலையில் மேற்படி விமானத்தின் சிதைவுகளை கண்டுபிடிக்க மேலும் ஆற்றல் மிக்க ஆழற்ற நீர்மூழ்கி கப்பலொன்று தேவைப்படுவதாக அவுஸ்திரேலிய பிரதிப் பிரதமர் வரென் தரெஸ் கன்பராவில் இடம்பெற்ற சந்திப்பின்போது கூறினார்.
இத்தகைய நீர்மூழ்கி உபகரணங்கள் உலகமெங்குமுள்ள கடற்படைகள் மற்றும் அரசாங்கங்களுக்கு சொந்தமாக இருக்கலாம் என்றபோதும் அவற்றை  தனியார் துறையிடமிருந்து பெறுவதே பெருமளவுக்கு சாத்தியமாக உள்ளதாக அவர் தெரிவித்தார்.
இந்நிலையில் அத்தகைய உபகரணமொன்றை பணியில் ஈடுபடுத்துவதற்கு ஒரு மாதம் முதல் இரு மாதங்கள் செல்லலாம் எனவும் அதுவரை ஏற்கெனவே பயன்படுத்தப்பட்ட புளூபின் - 2 ரோபோ நீர்மூழ்கிக் கப்பல் தொடர்ந்து பணியில் ஈடுபடுத்தப்படும் என அவர் கூறினார். நன்றி வீரகேசரிமீட்பு பணியில் ஈடுப்பட்டிருந்த சுழியோடி உயிரிழப்பு

06/05/2014  கடந்த இரண்டு வாரங்களுக்கு முன் 476 பயணிகளுடன் கடலில் மூழ்கிய தென் கொரிய கப்பலின் மீட்பு பணிகளில் ஈடுபட்டிருந்த சுழியோடி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த சுழியோடி மீட்பு பணியில் ஈடுப்பட்டிருக்கும் போது மயக்கமுற்றதன் காரணமாக வைத்தியசலையில் அனுமதிக்கப்ட்டதன் பின்பே உயிரழந்துள்ளார்.
53 வயதுடைய நபரே சம்பவத்தில் உயிரிழந்தவராவார்.


நன்றி வீரகேசரிதீ அனர்த்தத்தின் போது 4 ஆவது மாடியில் இருந்து பிள்ளைகளை தூக்கி வீசிய தாய்

08/05/2014 ரஷ்யாவில் குடியிருப்பு கட்டிடமொன்றில் தீ அனர்த்தம் ஏற்பட்ட போது தாயொருவரால் 4 ஆவது மாடி ஜன்னலால் தூக்கி வீசப்பட்ட இரு பிள்ளைகளை கீழே கூடியிருந்தவர்கள்  கட்டில் விரிப்பால் தாங்கிப்பிடித்து காப்பாற்றிய அதிசய சம்பவம் ரஷ்யாவில் இடம் பெற்றுள்ளது.
ரஷ்ய பஸ்க் கொர்டோஸ்டன் குடியரசிலுள்ள எனேர் ஜெற்றிக் எனும் இடத்திலுள்ள குடியிருப்புக் கட்டடத்தில் ஏற்பட்ட தீ அனர்த்தத்தின் போதே மிலர் அக்ஸ்கவா (36 வயது) என்ற பெண், தனது பிள்ளைகளான வன்யா,(4வயது) மற்றும் நடல்யாவை (13 வயது) நான்காவது மாடி ஜன்னலால் தூக்கி வீசியுள்ளார்.
இந்நிலையில் கீழே தயாராக கூடியிருந்த மக்கள் கட்டிலில் விரிப்பில் அவர்கள் இருவரையும் தாங்கிப்பிடித்து காப்பாற்றியுள்ளனர்.
மேற்படி பெண் தீயணைப்பு படை வீரர்களால் பின்னர் காப்பாற்றப்பட்டார்.
   
நன்றி வீரகேசரி
பாகிஸ்தானில் மதநிந்தனை செய்தவருக்கு ஆதரவாக வாதிட்ட சட்டத்தரணி சுட்டுக்கொலை

08/05/2014  பாகிஸ்தானின் முல்தான் நகரிரில் மத சிந்தனை குற்றச்சாட்டிற்கு உள்ளான பல்கலைக்கழக பேராசிரியர் ஒருவருக்கு ஆதரவாக வாதாடிய சட்டத்தரணி யொருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.
ரஷீட் ரெஹ்மான் என்ற மேற்படி சட்டத்தரணி தனது அலுவலகத்தில் அமர்ந்திருந்த வேளையிலேயே துப்பாக்கிதாரிகளால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.
அவருடன் இருந்த இரு சகாக்கள் இந்த சம்பவத்தில் படுகாயமடைந்துள்ளனர்.
 கடந்த வருடம் மார்ச் மாதம் மத நிந்தனை செய்யும் வகையில் கருத்துக்களை வெளியிட்டதாக கடும்போக்கு மாணவர் குழுக்கள் பஹூதீன் ஸகாரி பல்கலைக்கழகத்தின் விரிவுரையாளரான ஜூனெத் ஹபீஸ் மீது குற்றச்சாட்டை சுமத்தியிருந்தன.
இதனையடுத்து அவருக்கு ஆதரவாக ரெஹ்மான் வாதிட்டு வந்தார்.
தீவிரவாத மதக்குழுக்களின் சினத்துக்கு ஆளாக நேரிடலாம் என்ற அச்சத்தில் மேற்படி வழக்கில் ஆஜராக எந்தவொரு வக்கீலும் ஒரு வருட காலமாக முன்வராத நிலையில் ரெஹ்மான் அந்த வழக்கில் ஆஜரானதாக கூறப்படுகிறது.
மனித உரிமைகள் செயற்பாட்டாளரான ரெஹ்மான் பாகிஸ்தான் மனித உரிமைகள் ஆணையகத்தின் ஒருங்கிணைப்பாளராக கடமையாற்றி வந்தார்.நன்றி வீரகேசரி


No comments: