நண்பருடன் வீதியில் புரண்டு சண்டையிட்ட ஜேம்ஸ் பெக்கர்: இருவருக்கும் பற்கள் உடைவு


06/05/2014    அவுஸ்திரேலியாவின் செல்வந்தரான கசினோ வர்த்தகர் ஜேம்ஸ் பெக்கருக்கும் அவரது வர்த்தக பங்காளிக்கும் இடையில் மோதல் இடம்பெற்றுள்ளதாக ஆஸி ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
வீதியில் நைன் நெட்வேர்க் வலையமைப்பின் பிரதான நிறைவேற்று அதிகாரியான டேவிட் கிஞ்சலுடனேயே பெக்கர் மோதலில் ஈடுபட்டுள்ளார்.
இருவருக்குமிடையிலான கொடுக்கல் வாங்கல் தொடர்பிலேயே இந்த சண்டை ஏற்பட்டுள்ளதுடன் சண்டையில் இவர்களின் பற்களும் உடைந்துள்ளதாக தெரியவ
இறுதியில் இருவரும் இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கையில், 
இந்த சண்டையானது 35 வருட நட்பின் வளர்ச்சி மற்றும் தாழ்ச்சியின் ஒரு பகுதி எனக் குறிப்பிட்டுள்ளனர். தொடர்ந்தும் தாம் நண்பர்களாகவே இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.
ஜேம்ஸ் பெக்கர் இங்கு கசினோ சூதாட்ட நிலையங்களுடன் கூடிய ஹோட்டல்களை நிர்மாணிக்க முதலீடு செய்யவுள்ளமை குறிப்பிடத்தக்கது. நன்றி வீரகேசரி 


1 comment:

Anonymous said...

"இருவருக்குமிடையிலான கொடுக்கல் வாங்கல் தொடர்பிலேயே இந்த சண்டை ஏற்பட்டுள்ளது" அவுஸ்திரேலியாவின் சனல் 9 செய்திகளின் படி இச்செய்தி தவறானது. சிட்னியில் நடைபெற்ற விடயம் ஒன்றப் பற்றிய செய்திக்குறிப்பை வெளியிடுவதற்கு இலங்கையில் இருந்து வெளிவரும் தினசரி ஒன்றில் தங்கியிருப்பது பொருத்தமாகத் தெரியவில்லை.