சங்க இலக்கியக் காட்சிகள் 7 (செந்தமிழ்ச்செல்வர், பாடும்மீன் சு.ஸ்ரீகந்தராசா

.
பண்டைத் தமிழ் மக்களின் வாழ்க்கை முறைகளையும்ää பண்பாட்டினையும் படம்பிடித்துக்காட்டும் சான்றுகளாகத் திகழும்சங்க இலக்கியங்கள் குறித்துரைத்து நிற்கும் சுவைமிகுந்த காட்சிகளை வெளிப்படுத்தும் கட்டுரைத்தொடர்.
----------------------------------------------------------------------------------
காட்சி 7
உறவும்  மகிழ்வும்



கார்காலம் வந்தது. அதனால் போரும் நின்றது. அரசனின் போர்ப்படையில் பணியாற்றிய தலைவன் வீடு திரும்புகின்றான். மனம் நிறைந்த ஏக்கத்தோடு தலைவனைப் பிரிந்திருந்த தலைவி அவன் வந்ததும் அளவில்லா ஆனந்தம் அடைகின்றாள். கார்காலம்தான்  இன்பம் நுகர்வதற்கு ஏற்ற காலம். வீடு திரும்பிய தலைவன் தலைவியுடன் கூடிமகிழ்ந்திருக்கிறான். இருவரும் எல்லையில்லா இன்பத்தில் திளைத்திருக்கிறார்கள். வீட்டில் இருந்து மகிழ்ந்ததோடு மட்டுமன்றி இருவரும் வெளியே சுற்றுலா செல்ல விரும்புகிறார்கள். உறவினர்கள் நண்பர்களின் வீடுகளுக்குச் செல்கிறார்கள். பக்கத்து ஊர்களுக்குச் செல்கிறார்கள்.




கோவில்கள்ää கடற்கரைகள்ää களியாட்ட நிகழ்ச்சிகள் நடைபெறும் இடங்களுக்கொல்லாம் செல்கிறார்கள். அவ்வாறே ஒரு நாள் தலைவன் தலைவியை அழைத்துக்கொண்டு அடர்ந்த மரங்கள் நிறைந்த காட்டுப் பகுதிக்குப் “பொழிலாட்டயர்தலை” நாடிச் சுற்றுலாச் செல்கின்றான். வானுயர்ந்த மரங்கள்ää பச்சைப் பசேலென்ற பற்றைகள்ää பலவண்ணப் பூக்களைத் தாங்கிநிற்கும் செடிகள்ää கொடிகள்ää பச்சை நிறத்தில் பாய்விரித்ததுபோன்ற புல் தரைகள் இப்படி எண்ணிறந்த இயற்கைக் காட்சிகளை இரசித்தபடி இருவரும் நடந்துகொண்டிருக்கிறார்கள். அங்கே கார்காலத்தில் எழக்கூடிய இன்ப உணர்வுகளால் விலங்குகள் விளையாடிக்கொண்டிருக்கின்றன. ஒன்றுடன் ஒன்று கலந்து இன்புற்றிருக்கின்றன. நீண்ட நேரமாக ஒன்றையொன்று பிரியாமல் பிணைந்து கிடக்கின்றன. தலைவன் அந்தக்காட்சிகளையெல்லாம் தலைவிக்குக் காட்டுகிறான். அவளை மகிழ்வூட்டுகிறான். தானும் மகிழ்ச்சியடைகின்றான்.

ஐங்குறுநூறில் முல்லைத்திணைக்கான பாடல்களைப் பாடியவர் பேயனார் என்னும் பெரும்புலவர். அந்தப் பாடல்களில் ஒன்று இந்தக்காட்சியை நம்மனக்கண்முன்னே கொண்டுவந்து நிறுத்துகின்றது. பாடல் இதுதான்:


“உயிர்கலந் தொன்றியசெயிர்தீர் கேண்மைப்
 பிரிந்துறல் அறியா விருந்து கவவி
 நம்போல் நயவரப் புணர்ந்தன
 கண்டிகும் மடவரல்! – புறவின் மாவே”
(ஐங்குறுநூறு பாடல் இல: 419)

இதன் கருத்து:

‘அன்பே! இந்தக் காட்டுப்பகுதியிலே உள்ள விலங்குகளைப்பார்! பருவகாலத்தின் இன்பத்தின் தூண்டுதலால் உடல்கள் மட்டுமன்றித் தம் உயிர்களும் ஒன்று கலந்துவிட்டவாறு அன்புப்பிணைப்போடு அவை ஒன்றுடன் ஒன்று சேர்ந்து மகிழ்கின்றன. ஒன்றைவிட்டு மற்றொன்று பிரிவதென்பதையே அறியாதனவாக நம்மைப்போல விருப்போடு ஒன்றுசேர்ந்து களித்திருக்கின்றன’ என்று தலைவன் தலைவிக்குச் சொல்கிறான்.

“பிரிந்துறல் அறியா” என்பதன் மூலம்ää மனிதர்ளைப்போல காதலியைப் பிரிந்து காதலன் செல்கின்ற நிலைமைகளை விலங்குகள் அறியாதன. அவ்வாறு அவை எப்போதும் பிரிவதில்லை. பிரிவுத் தவறைச் செய்து துயரப்படுவது மனிதர்களாகிய நாம்தான் என்கின்ற உட்கருத்தும் இதில் இழையோடுகின்றது.

No comments: