பாரிஸ் மாநகரில் கவிப்பேரரசு வைரமுத்துவின் 'மூன்றாம் உலகப் போர்" நூல் அறிமுகவிழா..!
பாரிஸ் மாநகரில் கவிப்பேரரசு வைரமுத்துவின் 'மூன்றாம் உலகப் போர்" நூல் அறிமுகவிழா கடந்த சனிக்கிழமை (15 - 06 - 2013) மாலை சிறப்புற நடைபெற்றது.
பாரிஸ் 'மார்க்ஸ் டோர்முவா" (Marx Dormoy) தேவாலயக் கலையரங்கில் மூத்த பத்திரிகையாளர் எஸ். கே. காசிலிங்கம் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில், நடன நிகழ்ச்சிகளையடுத்து கவிஞர் பாலகணேசன் வரவேற்புக் கவிதையை வழங்கினார். கல்லூறு சதீஸ் வாழ்த்துரை வழங்கினார்.


மூத்த எழுத்தாளர், கவிஞர் வி. ரி. இளங்கோவன் நூல் அறிமுகத்தைக் கவிதையாக வழங்கினார். தமிழாசான் குமரன் நூலாய்வுரை நிகழ்த்தினார். நூலாசிரியர் வைரமுத்து ஏற்புரை வழங்கினார்.
'தமிழமுதம்" வானொலி இயக்குனர் எஸ். கே. ராஜென் விழா ஒழுங்குகளை மேற்கொண்டதுடன் நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கினார். பெருந்தொகையான மக்கள் விழாவில் கலந்துகொண்டதுடன் நூலினையும் பெற்றுக்கொண்டனர்.
இந்நூலின் அறிமுக விழாக்கள் சுவிற்சலாந்து, நெதர்லாந்து நாடுகளிலும் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


- தொகுப்பு : ஓவியா