இனியவளே காத்திருப்பேன் திரைப்படத்தட்டு வெளியீட்டு விழா!


சிட்னியில் இனியவளே காத்திருப்பேன் திரைப்படத்தட்டு வெளியீட்டு விழா 2-6-2013 அன்று பென்டல்ஹில் யாழ் மண்டபத்தில் வெற்றிகரமாக நடைபெற்றது!


கோபி நடராஜா தொகுத்து வழங்க, திரு கருணாகரன் நடராஜா அவர்கள் வரவேற்புரை வழங்க, பிரபல எழுத்தாளர் திரு எஸ் போ அவர்கள் வாழ்த்துரை வழங்க, எழுத்தாளர் திரு மாத்தளை சோமு அவர்கள் டாக்டர் கௌரிபாலன் அவர்கள், திருமதி துரைராஜா அவர்கள், இயக்குனர் தனபாலசுந்தரம் அவர்கள், இயக்குனர் புதியவன் அவர்கள் மற்றும் இனியவளே காத்திருப்பேன் திரைப்பட இயக்குனர் ஈழன் இளங்கோ ஆகியோர் உரையாற்றினார்கள்.


“இனியவளே காத்திருப்பேன்” அவுஸ்திரேலிய மண்ணில், அவுஸ்திரேலியா வாழ் தமிழர்களால் உருவான முதலாவது திரைப்படம் மட்டும் அல்ல, அவுஸ்திரேலிய மண்ணில் நடைபெற்ற முதலாவது இசைத்தட்டு நிகழ்வாக இருக்கட்டும், திரைப்பட வெளியீட்டு விழாவாக இருக்கட்டும், அந்த பெருமை இனியவளே காத்திருப்பேன் திரைப்படத்தையே சாரும். அது மட்டுமல்ல, நாடு கடந்த நோர்வே திரைப்பட விழாவில் 12 இந்திய திரைப்படங்களுடன் சேர்ந்து தேர்வு செய்யப்பட்டு, விருதும் பெற்றதோடு அவுஸ்திரேலிய பாராளுமன்றத்தில்  MP ஜீலி ஓவனால் பாராட்டப்பட்ட பெருமையும் இந்த படத்திற்கும் அதை இயக்கி உருவாக்கிய ஈழன் இளங்கோவையும் சேரும்.
விழாவில் உரையாற்றிய அனைவரும் இந்த திரைப்படத்தையும் இயக்குனர் ஈழன் இளங்கோவையும் வாழ்த்தி உரையாற்றினார்கள், முதலாவது திரைப்படத்தட்டு திருமதி துரைராஜா அவர்களால் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் உரையாற்றிய ஈழன் இளங்கோ, மேடையில் அனைவரும் வாழ்த்திய அளவு நான் ஒன்றும் செய்யவில்லை, எமக்கும் இந்த திரைப்படத்திற்கும் வெற்றியை தேடிதந்த பெருமை மக்களையே சேரும் என்று கூறியதோடு, உழைப்பை உணர்ந்து எங்களை ஆதரித்து உற்சாகபடுத்திய அனைவருக்கும் நன்றி என்றும் தெரிவித்துக்கொண்டார்.
பாலைவனமாக்கப்பட்ட ஈழத்தமிழர்களின் திரைப்பட வரலாற்றிலே பசுமை பூக்க, முயற்சிக்கும் கலைஞர்களுக்கு, நாம், வாழ்த்தெனும் நீரிட்டு, உற்சாக உரமூட்டி, பாராட்டி விடைபெற்றோம்.
இனியவளே காத்திருப்பேன் திரைப்படத்தட்டு சிட்னியில் பெரும்பாலும் அனைத்து இலங்கை இந்திய கடைகளிலும், மெல்பேனில் ஆதி ஜீவலர்ஸ்சிலும் பெற்றுக்கொள்ளலாம்.