ஆஸ்திரேலிய அரசின் நம்பிக்கையும் உலகம் காணும் நிதர்சனமும்
கலாநிதி சந்திரிகா சுப்ரமண்யன்
வழக்கறிஞர் மற்றும் பாரிஸ்டர் உச்ச நீதிமன்றம் (ஆஸ்திரேலியா)
ஆஸ்திரேலியா
உலக அகதி வாரம் கொண்டாடிக் கொண்டு இருக்கும் வேளையில் ஆஸ்திரேலியா அகதி
வருகையை சரியாக கையாளுகின்றதா என்பதே உலக அளவில் கேள்விக் குறியாகி உள்ளது.
ஐக்கிய நாடுகளின் அகதி மாநாட்டு ஒப்பந்தத்தின் கையொப்பதாரியாக ஒரு பொம்மை போல தன் கடமையை செய்யத் தவறவில்லை என்பது போல மாயை ஆக ஒரு செயல்பாட்டு நடவடிக்கையே இங்கு நடக்கும் அகதி நிர்ணய செயல்பாடு என்று தோன்றுகிறது.
அகதிகளாக , குறிப்பாக படகுகளில் வரும் மக்கள் மீது பெரும் வெறுப்பை அள்ளி வீசுகிறார்கள் இங்குள்ள மக்கள் என்பதே உண்மையாகும்.அகதிகளுக்கெதிரான பல நடவடிக்கைகள் மறைமுகமாக தோன்றியுள்ளன என்பது அகதிகள்மீது சட்டப் படும் குற்றங்களின் மூலம் விளங்குகிறது.குறிப்பாக குற்றவியல் வழக்குகளில் மாட்டிக் கொள்ளும் அகதி விண்ணப்ப தாரிகளுக்கு குற்றவாளி என்ற காரணத்தினால் அகதி விசா வழங்கப் படுவது மறுக்கப் பட்டு விடுகிறது.இது தவிர இலங்கை அகதிகளுக்கு குற்றப் பட்டியல் விபரம் கொழும்பில் இருந்து அவர் குற்றங்களுக்கு உட்படாதவர் என்று வர வேண்டும்.இது சாத்தியமா என்று சொல்லக் கூடியவர் எவரும் இல்லை. இந்த விபரம் வந்து சேராத படியால் அகதி அங்கீகாரம் நிர்ணயிக்கப் படாமல் ஒரு தொகை விண்ணப்பதாரிகள் நிலையில்லா வாழ்க்கையைக் கொண்டு இருக்கின்றனர்.
கடந்த ஜூன் மாத அகதி வருகை 22,500 ஐ எட்டியதைத் தொடர்ந்து. இந்த ஆண்டு ஜூன் 30க்குள் 25000 அகதிகள் வருவார்கள் என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக இதுவரை ஆஸ்திரேலிய அரசு 3.2 பில்லியன் டாலர்கள் செலவழித்துள்ளது. அகதிகளுக்காக செலவழிப்பதை குறைப்பதற்காக 2012 ஆகஸ்ட் 13 இன் ‘சலுகை மறுப்பு’ கொள்கை அமுலாக்கப்பட்டது. அதன் கீழ் புதிதாக 2012 ஆகஸ்ட் 13 இன் பின் வரும் அகதிகள் ஆஸ்திரேலியாவிற்கு வெளியே அகதி நிர்ணயம் தீர்மானிக்கப் பட்டபின், அவர்களுக்கு குடும்பத்தை இணைத்து கொள்ளும் சலுகை மறுக்கப் பட்டுவருகிறது.ஆனாலும் இந்தக் கொள்கை அமுலாக்கப் பட்டபின்னரும் கூட 19,760 அகதிகள் வந்து சேர்ந்துள்ளனர்.இந்த எண்ணிக்கை அரசு நினைத்ததை விட அதிகமாகும்.
இப்படி அகதிகள் தொடர்பாக ஆஸ்திரேலியா தன் பொறுப்பைத் தட்டி கழிப்பது சரியா? ‘இல்லை’ என்கின்றனர் அகதி நலக் குழுக்களும், அமைப்புகளும் சார்ந்த சமூக சேவையாளர்கள். ‘ஆம்’ என்கின்றது ஆஸ்திரேலிய அரசு. இதற்கு அகதி உதவி நிலையங்கள் அனைத்தும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.இவற்றைத் தாண்டி இலங்கையர்கள் படகுகளில் வந்து இறங்கிக் கொண்டு இருக்கின்றனர். இவர்களுக்கு அகதி அந்தஸ்து கிடைப்பதை தடுக்கும் முகமாக ஆஸ்திரேலியா, ஆஸ்திரேலியாவிற்கு வெளியே உள்ள அகதி நிர்ணய நிலையங்களிடம் புற அகதி நிர்ணயப் பணியை ஒப்படைத்து வருகின்றது. ஆஸ்திரேலியா இதுவரை 2.3 பில்லியன் டாலர்களை இதற்காக செலவிட்டு ,மேலும் 3.7 பில்லியன்களை செலவிடவும் தயாராக இருக்கின்றது.
1.புற அகதி நிர்ணயம் அகதி வரவைக் கட்டுப்படுத்தும் என்பது ஆஸ்திரேலிய அரசின் நம்பிக்கை.ஆனால் உண்மையில்
· அகதிகள் சொந்த மண்ணில் பாதுகாப்பு இல்லாத காரணத்தினால் உருவாகின்றனர்.
· ஆஸ்திரேலிய குடிவரவுத்துறை செயலர்(2005-2012) அன்ரூ மெட்காஃப்
· ஆஸ்திரேலியாவிற்கு வெளியே உள்ள அகதி நிர்ணயம் செய்வதனால் , அகதிகள்
வருகை குறைந்துவிட்டதாக சொல்ல முடியாது. நரு தீவுக்கு
அனுப்பப்பட்டவர்களில் பலர் ஆஸ்த்திரேலியாவில் அல்லது நியூசிலாந்தில் வதிவிட
உரிமை வழங்கப்பட்டிருக்கிறர்கள்.
· 2012 ஆகஸ்ட் 13 இன் ‘சலுகை மறுப்பு’ கொள்கை அமுலாக்கப்பட்ட பின்னரும் அகதிகள் வருகை கணிசமாக உயர்ந்துள்ளது.
· அகதி
என்றான பின் ஐ நா அகதி மானாட்டு ஒப்பந்தத்தின் கீழ் அவர்களுக்கு
ஆஸ்த்திரேலியாவின் சர்வதேச சட்டக் கடமைகள் எப்பொதும் இருந்து கொண்டுதான்
இருக்கும்.அதன் கீழ் அகதிகளை குடியேற்ற வசதி செய்வது தவிர்க்க முடியாது.
· 2006 இல் 41 ஆஃப்கானிய அகதிகள் திருப்பி அனுப்பப்பட்டு அவர்களில் 29 பேர் தள்ளப் பட்டு இருக்கிறார்கள்.
2.புற
அகதி நிர்ணய மையங்கள் மட்டுமே அகதிகளை சரிவரக் கையாள உகந்த முறையாகும்
என்பது ஆஸ்திரேலிய அரசின் நம்பிக்கை. ஆனால் ஹார்வர்ட் அரசின் கீழ்
நரூவில் 1500 பேர் புற அகதி நிர்ணயம் செய்யப்பட்டனர். பின்னர் அவர்கள்
மன் நலம் குன்றிய, சுய காயம் செய்ய முயற்சித்து , மற்றும்
பல்வேறு காரணங்களின் கீழ் பாதிக்கப்பட்டார்கள். 2012 இல் மீண்டும் நரூவில்
புற அகதி நிர்ணயம் தொடங்கியது. ஓரே ஒரு மன நல ஆலோசகர் மட்டுமே அமர்த்தப்
பட்டிருக்கிறார் என்பது ஹார்வர்ட் அரசின் நரூக் கொடுமைகளை கவனத்தில்
கொள்ளவில்லை இந்த் அரசும் என்பதேயே உணர்த்துகிறது. 3. புற அகதி நிர்ணய மையங்கள் நரூவில் இருப்பதே சரியான முறையாகும் என்பது ஆஸ்திரேலிய அரசின் நம்பிக்கை.
உண்மையில் , நரூவில் உள்ள வாழ்க்கை தரமும் அங்குள்ள அகதி முகாம்களின் சூழலும் மிகக் கேவலமாக இருப்பதாக சர்வதேச அம்னிஸ்டி இயக்கத்தின் அகதி சிறப்பு அதிகாரி கருத்து தெரிவித்திருக்கிறார்.மேலும் இந்த முகாம்கள் வாழத்தகுதி இல்லாத வகையில் அமைந்திருப்பதாகவும், அதனால், அங்குள்ள பலர் மன உடல் நலம் குன்றி இருப்பதாகவும் சர்வதேச அம்னிஸ்டி இயக்கம் கருத்து தெரிவித்துள்ளது
· நரூ 9000 மக்களை 21 சதுர கிலோ மீட்டர் பரப்பில் கொண்டுள்ள குட்டித்தீவு.அங்குள்ள பொருளாதார, சமூக, சட்ட வசதிகள் , அகதி பராமரிப்புக்கு உகந்தது அல்ல.
· நரூ
முகாம்கள் தங்கள் மொத்த அகதி வசதிகளின் கொள்ளளளவை (2001 பேர்)எட்டி
விட்டது.(2001). தற்போது வந்திறங்கிய அகதிகளின் எண்ணிக்கை இதை விட ஆறு
மடங்கு என்பதே உண்மை.
4.மலேசிய தீர்வு சிறந்த முடிவு என்பது ஆஸ்திரேலிய அரசின் நம்பிக்கை. ஆனால் ,
· மலேசியா ஐ நா அகதி மாநட்டின் கையொப்பதாரி இல்லை.
· சர்வதேச அம்னிஸ்டி இயக்கத்தின் அறிக்கைகள் , மலேசியாவில் அகதிகள் துஷ்பிரயோகம், துன் புறுத்தல், மற்றும் கைது செய்யப்பட்டனர் என தெரிவித்து உள்ளது.
· ஆறாயிரம் அகதிகள் ஆண்டுதோறும் பிரம்படி படுகிறர்கள்.
· 2011 இல் ஆஸ்திரேலிய உச்ச நீதிமன்றம் மலேசியாவுக்கு அகதிகளை அனுப்பி வைப்பது ஆஸ்திரேலியாவின் சர்வதேசக் கடமைகளை மீறுவதாகும் எந்த் தீர்ப்பளித்தது.
5.புற அகதி நிர்ணயம் செலவைக் குறைக்கும் என்பது ஆஸ்திரேலிய அரசின் நம்பிக்கை.ஆனால்,2009-2014 இடயில் முன்பு நடந்த பசுபிக் தீர்வு, மனு தீவில் 1 பில்லியனிற்கு மேல் செலவானது, கிரிஸ்மஸ் தீவில் 1 பில்லியனிற்கு செலவாகும் எனப்படுகிறது.
6.ஆஸ்திரேலியா கடல் எல்லைகளில் அகதிகள் வராமல் பார்த்துக் கொள்ளவேண்டும் என்பது ஆஸ்திரேலிய அரசின் நம்பிக்கை
ஆனால் புற அகதி தீர்மானம், கட்டாய பாதுகாப்புக் கைது போன்றவை கடல் வழி வருபவர்க்கே. தொடர்ந்து வான் வழி அகதிகள் வந்த வண்ணம் இருக்கின்றனர்.
7.புற அகதி நிர்ணயம் தொடர்பான அரசின் உறுதியான கொள்கைகள் ஆட் கடத்தலைக் குறைக்கும் என்பது ஆஸ்திரேலிய அரசின் நம்பிக்கை.
ஆனால் , உலக அகதி சட்டங்கள் தொடர்பான முன்னணி ஆய்வாளர் பேராசிரியர் ஜேம்ஸ் ஹாத்வே, “ஆட் கடத்தல் என்பதே ஒரு பொய்யான விஷயம். ஆட் கடத்தல் சந்தையை உருவாக்கியதே நாம் தான். ஒருவர் ஆஸ்திரேலியாவுக்குள் வந்து நியாயமாக அகதி அந்தஸ்த்துக் கோரும் வழி முறைகள் இருந்தால் படகு மூலம் திருட்டுத் தனமாக வரவேண்டிய தேவை ஏற்படாது. ஆனால் நாம் அத்தகைய சூழலை உருவாக்க தவறி விட்டதால் ஆட் கடத்தல் கும்பல்கள் வளர்ந்துவிட்டது.” எனத் தெரிவித்துள்ளார்.
Dr Chandrika Subramaniyan
Solicitor Notary Migration Agent Nationally Accrd Mediator
MAIL: P O BOX 500 Parramatta 2124 l OFFICE : Suite 1 Level 1 ,42 George Street Parramatta NSW 2150
P:(02) 9633 5019 l F :(02) 9633 5071 l M : 0433099000
Women of the West - University of Western Sydney Commended Award 2012
Highly Commended Award - Women Lawyers Association 2011
Nominee Justice Award 2009