சிட்னியில் உலகத் தமிழ் இலக்கிய மாநாட்டு மலர் கட்டுரை


உலகத் தமிழ் இலக்கிய மாநாடு சிட்னிஆஸ்திரேலியா மலர்

கட்டுரை
கலாநிதி சந்திரிகா சுப்ரமண்யன்
( பொறுப்பாளர் - விழா மலர்க்குழு மற்றும் மக்கள் தொடர்பு  )

கட்டுரை விதி முறைகள்

·       கொடுக்கப் பட்டுள்ள தலைப்புகளுக்குள் ஒன்றாக அடங்க வேண்டும.
·       அரசியல்,  இனத்துவேசத்தை  தூண்டும் கட்டுரைகள் நிராகரிக்கப்படும்.
·       கட்டுரைகளின் தரம், அடங்கல், எழுத்து ஆகியவை நடுவர் குழு பரிந்துரைக்கு ஏற்புடையதாக இருக்க வேண்டும்.
·       நடுவர்களின் முடிவே கட்டுரை பிரசுரமாவதை  தீர்மானிக்கும்.
·       A 4 -5 பக்கங்களுக்கு மிகை படாமல்.
·       10 அளவு ஒற்றை குறீயீட்டு எழுத்துரு.(Unicode).
·       மின்னஞ்சலில் உடல் பகுதியில் ஒட்டி அனுப்பவும். இணைப்பாக அனுப்ப வேண்டாம்.
·       கட்டுரைகளின் கருத்துக்கள்  படைப்பாளியின் பொறுப்பாகும்.
·       நடுவர்களின் பார்வையில் கட்டுரைகளின் கருத்துக்களில் சில பகுதிகள் அகற்றப் பட வேண்டும் எனப் பட்டால் அகற்ற வேண்டியது  படைப்பாளியின் பொறுப்பாகும்.
·       கட்டுரைகள் வந்து சேர வேண்டிய கடைசி நாள் 30.06.2013




கட்டுரைத் தலைப்பு கீழ் கண்ட பரந்த தலைப்புகளை சார்ந்த  ஏதாவது ஒன்றின் கீழ் இருக்கலாம்.



·       சங்கத் தமிழ் பாடி தமிழர் புகழ் வளர்ப்போம்

·       இலக்கியங்களில் சிறந்தது தமிழ் இலக்கியங்கள்

·       தமிழர் வரலாற்றை இளம் தலை முறையினருக்கு…….

·       தமிழர் வரலாறு

·       சங்க இலக்கியங்களில் சிறப்பியல்

·       சங்க காலம் காட்டும் தமிழரின் வளம்

·       யாமறிந்த மொழியே தமிழ்

·       தொன்மையான  மொழி தமிழே!

·       புலம் பெயர்ந்தோர் வாழ்வில் தமிழ்

·       சங்க கால போர் முறைகள்

·       தமிழ் மொழி செம்மொழியே…

·       இலங்கைத் தமிழர் வரலாறு

·       சிந்து வெளி நாகரிகத்தில் தமிழர்

·       தமிழின் நவீனத்துவம்

·       கணனித் தமிழ்


Dr Chandrika Subramaniyan
Solicitor   
0433099000