இரகசியங்களை வெளியுலகத்திற்கு அறியத்தருவதற்கு பின்னாலிருந்த 29 வயதுக்காரன்

எட்வர்ட் ஸ்நோவ்டன்: அமெரிக்க தேசிய பாதுகாப்பு கண்காணிப்பு இரகசியங்களை வெளியுலகத்திற்கு அறியத்தருவதற்கு பின்னாலிருந்த 29 வயதுக்காரன்
-ஹொங்காங்கிலிருந்து கிளென் கிறீன்வால்ட்,ஈவன் மக்அஸ்கில் மற்றும் லௌரா பொய்ற்ராஸ்
edward-snowdenமெரிக்க அரசியல் வரலாற்றிலேயே மிகவும் குறிப்பிடத்தக்க இரகசியக் கசிவு ஏற்படுத்துவதற்கு தனிப்பட்ட வகையில் பொறுப்பாக இருந்துள்ளார், 29 வயதான எட்வர்ட் ஸ்நோவ்டன் என்பவர், இவர் முன்னாள் அமெரிக்க குற்றவியல் உளவுப் பிரிவான சி.ஐ.ஏ யின் தொழில்நுட்ப உதவியாளரும், பாதுகாப்பு ஒப்பந்தகாரரான பூஸ் அலென் ஹமில்டனில் தற்போது பணியாற்றி வருபவருமாவார். ஸ்நோவ்டன் தேசிய பாதுகாப்பு முகவர் நிறுவனத்தில் கடந்த நான்கு வருடங்களாக பூஸ் அலென் மற்றும் டெல் உட்பட்ட பல்வேறு வெளி ஒப்பந்தகாரர்களின் பணியாளராக கடமையாற்றி வந்துள்ளார்.
கார்டியன் பத்திரிகை பல நாட்கள் நடத்திய நேர்காணல்களின்பின் அவரது வேண்டுகோளுக்கு இணங்க அவரது அடையாளத்தை வெளிப்படுத்துகிறது. உயர் இரகசியங்களடங்கிய எண்ணற்ற ஆவணங்களை பொதுமக்களுக்கு வெளிப்படுத்துவதற்கு தீர்மானித்த அந்தக் கணமே அநாமதேய பாதுகாப்பினை தெரிவுசெய்வதில்லை என்று அவர் முடிவு செய்திருந்தார். ”நான் யார் என்பதனை மறைத்து வைக்கும் நோக்கம் எனக்கிருக்கவில்லை, ஏனெனில் நான் எந்தத் தவறையும் செய்யவில்லை என்பதை நான் அறிந்திருந்தேன்” என்று அவர் சொன்னார்.


அமெரிக்க வரலாற்றில் பொதுமக்களுக்கு இரகசியங்களை வெளிப்படுத்தியவர்களான டானியல் எல்ஸ்பேர்க் மற்றும் பிரேட்லி மானிங் இவர்களைப் பின்தொடர்ந்து ஸ்நோவ்டனின் பெயரும் இடம்பெறுகிறது. உலகின் மிகவும் இரகசிய அமைப்புகளில் ஒன்றான அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு நிறுவனத்தின் (என்.எஸ்.ஏ) விடயங்களை வெளியில் ஒப்படைப்பதற்கு இவர் பொறுப்பாக இருந்துள்ளார். அவர் வழங்கிய முதல் தொகுப்பு ஆவணங்களுடன் இணைத்துள்ள குறிப்பில் அவர் எழுதியிருந்தது “என்னுடைய நடவடிக்கைகளுக்காக நான் பாதிப்படையவேண்டி வரும் என்பது எனக்குப் புரிகிறது,ஆனால் உலகத்தை ஆட்சி செய்யும்,இரகசிய சட்டங்கள்,சமனற்ற மன்னிப்பு,மற்றும் தவிர்க்கமுடியாத நிறைவேற்று அதிகாரங்கள் என்பனவற்றின் கூட்டமைப்பை ஒரு கணப்பொழுதேனும் வெளிப்படுத்த நான் விரும்புவது நிறைவேறினால் அதனால் நான் திருப்தி அடைவேன்” என்று.
தனது முகத்திரையை பகிரங்கமாக அகற்ற அவர் முடிவு செய்திருந்தபோதும் ஊடகங்களின் கவனத்தை தவிர்க்கவேண்டும் என்று அவர் தொடர்ச்சியாக வலியுறுத்தினார்.” பகிரங்க கவனஈர்ப்பினை நான் விரும்பவில்லை ஏனெனில் இந்தக்கதை என்னைப்பற்றியதாக இருப்பதை நான் விரும்பவில்லை. அமெரிக்க அரசாங்கம் என்ன செய்கிறது என்பதைப்பற்றியதாக அது இருப்பதையே நான் விரும்புகிறேன்”.
இந்த விடயங்கள் பொதுமக்களிடம் செல்வதால் தனக்கு ஏற்படப்போகும் china-morning-postபின் விளைவுகளைப்பற்றி அவர் பயப்படவில்லை,தான் அப்படிச் செய்வதனால் தனது வெளிப்படுத்தல்களால் எழப்போகும் பிரச்சினைகள் சகலரது கவனத்தையும் திசை திருப்பும் என்று அவர் சொன்னார்.” ஊடகங்கள் அரசியல் விவாதங்களை தனிப்பயனாக்க விரும்பும் என்பது எனக்குத் தெரியும், மற்றும் அரசாங்கம் என்னை பேய்போல் ஆட்டிவிக்கும் என்பதும் எனக்குத் தெரியும்”
இத்தகைய அச்சங்கள் இருந்தபோதிலும் தன்னுடைய வெளிப்பாடு தான் வெளிப்படுத்தும் விடயத்தின் கவனத்திலிருந்து திசை திரும்பாது என்கிற நம்பிக்கை அவருக்கிருந்தது. ”அந்த ஆவணங்களின் மீதான கவனம் மற்றும் அதுபற்றிய விவாதம் உலகெங்கும் உள்ள பிரஜைகளிடையே என்ன விதமான உலகத்தில் நாங்கள் வாழவேண்டியுள்ளது என்கிற ஒரு தீப்பொறியை கிளப்பும் என நான் நம்பினேன், நான் உண்மையில் இதைத்தான் விரும்பினேன்” என்று சொன்ன அவர் மேலும் கூறுகையில் “ என்னுடைய ஒரே நோக்கம் மக்களின் பெயரால் மக்களுக்கு எதிரான விடயங்கள் செய்யப்படுகின்றன என்பதை மக்களுக்கு அறிவிப்பதே” என்று தெரிவித்தார்.
அவர் மிகவும் வசதியான ஒரு வாழ்க்கையை வாழ்ந்தார், அவரது சம்பளம் கிட்டத்தட்ட 200,000 அமெரிக்க டொலர்கள், அவருடைய பெண் சிநேகிதியுடன் ஹவாயில் ஒரு வீட்டைப் பகிர்ந்து கொண்டிருந்தார், ஒரு நிலையான தொழில் மற்றும் அவர் நேசிக்கும் ஒரு குடும்பம் என்பன அதில் அடங்கியிருந்தன.” அவை அனைத்தையும் தியாகம் செய்ய நான் விருப்பமாக இருந்தேன் ஏனெனில் என்னுடைய நல்ல மனச்சாட்சியால், அமெரிக்க அரசாங்கம் உலகெங்கிலுமுள்ள மக்களின் தனியுரிமை, இணைய சுதந்திரம், மற்றும் அடிப்படை உரிமைகளை அது இரகசியமாக கட்டி எழுப்பியிருந்த பிரமாண்டமான கண்காணிப்பு இயந்திரங்களை பயன்படுத்தி அழிப்பதை அனுமதிக்க முடியவில்லை.
‘நான் அச்சப்படவில்லை ஏனெனில் இதைத்தான் நான் தெரிவுசெய்திருந்தேன்’.
மூன்று வாரங்களுக்கு முன்னர் ஸ்நோவ்டன் தனது இறுதித் தயாரிப்புகளைச் செய்திருந்தார், அதன் விளைவாக கடந்தவாரம் தொடர்ச்சியான பல புதிய கதைகள் வெற்றிகரமாக வெளியாகின. அவர் வேலை செய்யும் ஹவாயில் உள்ள என்.எஸ்.ஏ அலுவலகத்தில் அவர் வெளியிடவிருந்த இறுதி ஆவணத் தொகுப்பை அவர் பிரதி செய்திருந்தார். அதன்பின்னர் அவர் என்.எஸ்.ஏ மேற்பார்வையாளரிடம் கடந்த வருடம் தான் அனுபவிக்க நேர்ந்த சில தொடர்ச்சியான வலிப்பு அறிகுறிகள் காரணமாக தனக்கு வலிப்பு நோய் இருப்பதாக தான் உணர்வதால் அதற்காக சிகிச்சை பெறுவதற்குவேண்டி சில வாரங்கள் தான் வேலையிலிருந்து வெளியேற வேண்டியிருக்கும் என அறிவித்தார்.
தனது பயணப்பைகளை ஆயத்தம் செய்துகொண்டபின் தனது பெண் சிநேகிதியிடம் சில வாரங்கள் தான் வெளியே செல்லவேண்டியிருக்கிறது என சொன்னார்,அதற்காக அவர் தெரிவித்த காரணம் தெளிவற்றதாக இருந்தது.”கடந்த தசாப்தம் முழுவதும் புலனாய்வு உலகத்தில் வேலை செய்வதில் கழித்த ஒருவருக்கு அத்தகைய நிகழ்வு அசாதாரணமான ஒன்றல்ல”
மே 20ல் அவர் இப்போதுவரை தங்கியிருக்கும் இடமான ஹொங்கோங்குக்கான விமானம் ஒன்றில் ஏறினார். அவர் அந்த நகரத்தை தேர்ந்தெடுத்ததுக்கு காரணம் “அவர்கள் சுதந்திரமான பேச்சுரிமை மற்றும் அரசியல் முரண்பாட்டுக்கான உரிமை என்பனவற்றில் ஒரு உற்சாகமான அர்ப்பணிப்பை கொண்டவர்களாக இருந்ததுதான்”, அத்தோடு அமெரிக்க அரசாங்கத்தின் ஆணையை எதிர்க்கும் உலகத்தில் உள்ள இடங்கள் சிலவற்றில் அதுவும் ஒன்று என்று என அவர் நம்பினார்.edward-snowden1
அவர் அங்கு வந்து மூன்று வாரங்களாக ஒரு ஹோட்டல் அறையில் பதுங்கியிருந்தார்.” நான் அங்கு தங்கியிருந்த காலப்பகுதி முழுவதிலும் மொத்தமாக மூன்று தடவைகள் மட்டுமே அறையை விட்டு வெளியேறியிருந்தேன்” என்று அவர் தெரிவித்தார். அது ஒரு சொகுசான ஹோட்டல், மற்றும் உணவுகளை சாப்பிடுவதும் அறைக்குள்ளிருந்துதான் அதனால் அவர் மிகப் பெரிய கட்டணங்களை அதற்காகச் செலுத்தவேண்டியிருந்தது.
தான் உளவு பார்க்கப்படுவேனோ என அவர் ஆழ்ந்த கவலை அடைந்திருந்தார். மறைந்திருந்து பார்ப்பது கேட்பது என்பனவற்றை தடுப்பதற்காக தனது ஹோட்டல் அறையின் கதவுகளை அவர் தலையணைகள் கொண்டு அடைத்திருந்தார். தனது மடிக்கணணியில் கடவுச் சொற்களை பதியும்போது மறைவான ஒளிப்படக் கருவிகளால் அதைக் காணமல் இருப்பதற்காக தனது தலையையும் மற்றும் மடிக்கணணியையும் ஒரு பெரிய சிவப்பு போர்வையால் மறைத்திருந்தார்.
அது சில சமயங்களில் பயத்தின் காரணமாக ஏற்படும் சித்தப்பிறழ்ச்சி போலிருந்தாலும், அத்தகைய பயங்களுக்கு ஸ்நோவ்டனிடம் தகுந்த காரணங்கள் இருந்தன. கிட்டத்தட்ட ஒரு தசாப்த காலமாக அவர் அமெரிக்க உளவுப்பிரிவு உலகத்தில் பணியாற்றியிருந்தார். அமெரிக்காவில் உள்ள மிகப்பெரிய இரகசிய கண்காணிப்பு நிறுவனமான என்.எஸ்.ஏ, அத்துடன் இந்த கிரகத்தில் மிகவும் சக்திவாய்ந்த ஒரு அரசாங்கம், என்பன தன்னை தேடும் என்பது அவருக்கு நன்கு தெரியும்.
தான் வெளிப்படுத்திய தகவல்கள் வெளிவர ஆரம்பித்ததும்,அவர் தொலைக்காட்சியை பார்த்தார் மற்றும் இணையத்தை கண்காணித்து வாஷிங்டன் வெளிப்படுத்திய அச்சுறுத்தல்கள் மற்றும் தன்னை தண்டிப்பதாக அறிவித்த சபதம் என்பனவற்றை தெரிந்துகொண்டார். அவர்களிடம் உள்ள நுட்பமான தொழில்நுட்பத்தின் மூலம் தான் இருக்குமிடத்தை தெரிந்துகொள்வது அவர்களுக்கு வெகு சுலபமான ஒன்று என்பது அவருக்கும் மிக நன்றாகவே தெரிந்திருந்தது.
என்.எஸ்.ஏ காவல்துறையினர் மற்றும் இதர சட்ட அமலாக்கப் பிரிவினர் ஹவாயிலுள்ள அவரது வீட்டுக்கு இரண்டுமுறை விஜயம் செய்து ஏற்கனவே அவரது சிநேகிதியை தொடர்பு கொண்டிருந்தார்கள்,இருந்தபோதிலும் அது அவர் வேலைக்கு செல்லாத காரணத்தை பற்றி அறியவேண்டிதற்காகத்தான் என்றும் மற்றும் இந்த இரகசிய கசிவு விடயத்துடன் தொடர்புபட்ட சந்தேகம் பற்றியது அல்ல என்றும் அவர் நம்பியிருந்தார். “என்னுடைய தெரிவுகள் அனைத்தும் மோசமானவையாகவே இருந்தன” என்று அவர் சொன்னார். அமெரிக்கா அவர் சரணடைவதற்கு எதிராக வேண்டிய நடவடிக்கைகளை மேற்கொள்ளக்கூடும், வாஷிங்டனுக்கு அது முக்கியமான சிக்கல் நிறைந்ததாகவும்,நீண்ட மற்றும் கணிக்கமுடியாத ஒன்றாகவும் இருக்கும். அல்லது சீன அரசாங்கம் அவரை ஒரு பயனுள்ள தகவல்தரும் ஆதாரமாகக் கருதி விசாரிப்பதற்காக கடத்தக் கூடும். அல்லது அவரை பிடித்து பொதியாக கட்டி அமெரிக்காவுக்கு செல்லும் விமானத்தில் ஏற்றிவிடுவதில் சென்று முடியக்கூடும். “ ஆம் சி.ஐ.ஏ யின் முன்னால் என்னை ஒப்படைக்க முடியும்.என்னை தேடி ஆட்கள் வரக்கூடும். அல்லது மூன்றாவது பகுதி பங்காளர்கள் வரக்கூடும். அவர்கள் அநேக நாடுகளுடன் மிகவும் நெருக்கமாக பணியாற்றுகிறார்கள்.அல்லது அவர்கள் சிலகுண்டர்களுக்கு பணம் செலுத்தியிருக்கலாம். அவர்களின் முகவர்கள் அல்லது சொத்துக்களுக்கு அறிவித்திருக்கலாம்.
இங்கே இந்த வீதிக்கு அருகிலும் ஒரு சி.ஐ.ஏ நிலையம் உள்ளது - அதாவது ஹொங்கோங்கிலுள்ள அமெரிக்க தூதரகம் - அடுத்த வாரம் முழுவதும் அவர்கள் மிகவும் சுறுசுறுப்பாக இயங்குவார்கள் என்று என்னால் நிச்சயமாகச் சொல்லமுடியும். அந்த கவலையுடன்தான் எனது மிகுதிக் காலத்தை நான் கழிக்கவேண்டியிருக்கும், எனினும் அது நீண்ட காலமாக இருக்கப்போகிறது.poster-supporting-Snowden
ஒபாமா நிhவாகம் பொதுமக்களுக்கு இரகசியத்தை அம்பலப்படுத்தியவர்களை ஒரு வரலாற்று முன்மாதிரியற்ற விகிதத்தில் தண்டிப்பதை அவதானித்துள்ளதால் அமெரிக்க அரசாங்கம் தனது முழு பலத்தையும் பயன்படுத்தி தன்னை தண்டிக்க முயற்சிக்கும் என அவர் முழுவதுமாக எதிர்பார்க்கிறார். “ நான் பயப்படவில்லை ஏனென்றால் இதைத்தான் நான் தெரிவு செய்திருந்தேன்” என்று அமைதியாக சொன்னார்.
அரசாங்கம் ஒரு விசாரணையை மேற்கொண்டு நான் ஒற்றர்கள் சட்டத்தை மீறி எதிரிகளுக்கு உதவியுள்ளேன் என்று கூறலாம், ஆனால் இந்த முறை எவ்வளவு பாரிய ஊடுருவலாக மாறியுள்ளது எனச் சுட்டிக்காட்டும் எவருக்கும் எதிராகப் பயன்படுத்த முடியும். பலமணி நேரமாக நடந்த நேர்காணலில் அவர் உணர்ச்சிவசப்பட்டது இந்த ஓரிடத்தில் மட்டுமே, தனது தெரிவின் தாக்கம் தனது குடும்பத்தின்மீதும் விழலாம் என அவர் யோசிக்கிறார், அவர்களில் அநேகர் அமெரிக்க அரசாங்கத்தில் பணியாற்றுகிறார்கள்.”நான் அச்சப்படும் ஒரே விடயம் எனது குடும்பத்திற்கு ஏற்படப்போகும் தீய விளைவுகளை பற்றியே, இனிமேலும் என்னால் அவர்களுக்கு உதவி செய்ய முடியாது. அது இரவு நேரங்களில் என்னை தூங்கவிடமல் செய்கிறது” என்று கண்களில் கண்ணீர் பொங்க சொன்னார்.
‘வேறு யாராவது செயல்படும்வரை நீங்கள் காத்திருக்க முடியாது’
அமெரிக்க அரசாங்கம் தனது அரசியல் கலாச்சாரத்துக்கு ஒரு அச்சுறுத்தலை விடுக்கிறது என்று ஸ்நோவ்டன ஒருபோதும் நம்பவில்லை. அவர் முதலில் வட கரோலினாவில் உள்ள எலிசபெத் நகரத்தில்தான் வளாக்கப்பட்டார். பின்னர் அவரது குடும்பம், மெரிலான்ட்டிலுள்ள போட் மெடேட்டில் என்.எஸ்.ஏ தலைமையகத்துக்கு அருகில் இடம்பெயர்ந்தது. தான் ஒரு நட்சத்திர அந்தஸ்துள்ள மாணவனாக இருக்கவில்லை என்பதை அவர் சுயமாகவே ஏற்றுக்கொள்கிறார்.உயர் பாடசாலை சான்றிதழ் பெறுவதற்கு தேவையான திறமைச் சித்திகளை பெறுவதற்காக, அவர் மெரிலாண்ட்எல் உள்ள சமூக கல்லூரியில் சேர்ந்து கணக்கீடு பிரிவில் பயின்றார், ஆனால் அவர் தனது ஒப்படைப்பு வேலைகளை ஒருபோதும் பூர்த்தியாக்கவில்லை.(பின்னர் அவர் தனது பொது தகமை சான்றிதழை பெற்றுக்கொண்டார்).
2003ல் அவர் அமெரிக்க இராணுவத்தில் சேர்க்கப்பட்டு சிறப்பு படைகளில் சேர்வதற்காக பயிற்சி திட்டத்தை ஆரம்பித்தார். தனது இரகசிய கசிவுகளை நியாயப்படுத்த அவர் இப்போது அதே கொள்கைகளை நாடுவதாக அவர் தெரிவித்தார், அவர் பேசும்போது “ நான் ஈராக் யுத்தத்தில் போராட விரும்பினேன்,ஏனெனில் மனிதனாக இருப்பதால் அடக்குமுறையில் அகப்பட்டுள்ள மக்களை அதிலிருந்து விடுவிப்பதற்கு உதவுவதற்கான ஒரு கடமை எனக்கு இருப்பதாக நான் எண்ணினேன்” எனத் தெரிவித்தார்.
அந்த யுத்தத்தின் நோக்கம் பற்றிய தனது நம்;பிக்கைகள் எவ்வளவு சீக்கிரத்தில் சிதறிப்போனது என்பதை அவர் நினைவுகூர்ந்தார்.”எங்களுக்கு பயிற்சியளித்தவர்களில் அநேகர் அராபியர்களை கொல்லும்படி எங்களை தூண்டினார்களே தவிர, யாருக்கும் உதவும்படி சொல்லவில்லை” என்றார் அவர். பயிற்சியின்போது நடந்த ஒரு விபத்தில் அவரது இரண்டு கால்களிலும் முறிவு ஏற்பட்டதால் அவர் விடுவிக்கப்பட்டார்.
அதன்பின்னர் அவர் தனது முதலாவது வேலையை ஒரு என்.எஸ்.ஏ வசதியாக, இரகசிய வசதிகள் நிறுவனம் ஒன்றினால் ஒரு பாதுகாப்பு காவலராக மெரிலான்ட் பல்கலைக்கழகத்தில் கடமைக்கு சேர்ந்ததின் மூலம் பெற்றுக்கொண்டார். அங்கிருந்து அவர் சி.ஐ.ஏக்கு சென்றார் அங்கு அவர் தகவல் தொழில்நுட்ப பாதுகாவலராக பணியாற்றினார். இணையத்தை பற்றிய அவரது புரிந்துணர்வு மற்றும் கணணி நிரலாக்கலில் அவருக்கு இருந்த புலமை என்பன உயர் கல்விச் சான்றிதழ் கூட பெறாத அவரால் அடையமுடியாத மிக உயர்ந்த ஸ்தானத்தை வெகு சீக்கிரத்திலேயே அவரை அடைய வைத்தது.
2007ம் ஆண்டளவில் சுவிட்சலாந்தின் ஜெனிவாவில் சி.ஐ.ஏ அவரை இராஜதந்திர பாதுகாப்புடன் பணிக்கு அமர்த்தியது. அங்கு அவரது பொறுப்புகள் கணணி வலையமைப்பு பாதுகாப்புகளைப் பராமரித்தல் என்பதினால் பரவலான வரிசையில் உள்ள வகைப்படுத்திய ஆவணங்களை அணுகுவதற்கு அவருக்கு வழி கிடைத்தது. அந்த அனுமதியுடன் மாத்திரம் கிட்டத்தட்ட மூன்று வருடங்களை அவர் சி.ஐ.ஏ அலுவலர்களுடன் கழிக்கவேண்டியிருந்தது, அது, தான் கண்டவற்றில் உள்ள நியாயங்கள் பற்றி தீவிரமாக அவரை கேள்வி கேட்க வைத்தது.
அது தொடர்பான ஒரு நிகழ்ச்சியாக, சி.ஐ.ஏ செயற்பாட்டாளர்கள் ஒரு இரகசிய வங்கித் தகவலைப் பெறுவதற்காக ஒரு சுவிஸ் வங்கியாளரை நியமனம் செய்ய முயற்சித்தது சம்பந்தமான வழமையான ஒரு நிகழ்ச்சியை அவர் விபரித்தார். அவர்கள் இதை அணுகியவிதம் பற்றி ஸ்நோவ்டன் சொன்னது, அவர்கள் அந்த அதிகாரியை வேண்டுமென்றே குடிக்க வைத்து, அவரது சீருந்தை வீட்டுக்கு ஓட்டிச்செல்லும்படி உற்சாகமூட்டினார்கள், அந்த வங்கி அதிகாரி குடித்துவிட்டு வண்டியோட்டியதற்காக கைது செய்யப்பட்டதும் இந்த இரகசிய முகவர்கள் அவருக்கு உதவிசெய்ய முன்வந்ததின் மூலம் அவரது நட்பைத் தேடிக்கொண்டார்கள், மற்றும் அந்த இணைப்பு ஒரு வெற்றிகரமான நியமனத்தை மேற்கொள்ள வழியமைத்தது.
“ஜெனிவாவில் நான் கண்டவற்றில் அநேகம் உண்மையில் என்னை வெறுப்படையச் செய்தன எனது அரசாங்கம் எப்படி செயல்படுகிறது மற்றும் அதன் தாக்கம் உலகத்தை என்ன செய்யும் என்று எண்ணினேன். நல்லதை விட அதிகம் கெடுதல் செய்யும் ஒன்றின் ஒரு அங்கமாக நானும் இருக்கிறேன் என்பதை நான் உணர்ந்தேன்” என்றார் அவர்.
ஜெனிவாவில் சி.ஐ.ஏ கட்டுப்பாட்டில் தான் இருந்தபோதுதான், முதல்தடவையாக அரசாங்க இரகசியங்களை வெளிப்படுத்துவதைப்பற்றி தான் எண்ணியதாக அவர் தெரிவித்தார். ஆனால் அப்போது இரண்டு காரணங்களுக்காக அவர் அதை nதிரிவு செய்யவில்லை.
முதலாவது அவர் சொன்னார், “சி.ஐ.ஏ வைத்திருந்த பெரும்பாலான இரகசியங்கள் மக்களைப்பற்றியது, இயந்திரங்களையோ அமைப்புகளையோ பற்றியனவாக இருக்கவில்லை,எனவே அது யாரையாவது ஆபத்தில் சிக்க வைத்துவிடும் என நான் எண்ணியதால் அவற்றை வெளிப்படுத்துவதை அசௌகரியமானதாக நான் உணர்ந்தேன்” இரண்டாவதாக 2008ல் நடந்த பராக் ஒபாமாவின் தேர்தல் அங்கு உண்மையான ஒரு மறுசீரமைப்பு நடைபெறும் என்று அவருக்கு நம்பிக்கையூட்டியதால், தேவையில்லாமல் தகவல்களை வெளிப்படுத்த வேண்டியதில்லை என அவர் எண்ணினார்.
2009ல் என்.எஸ்.ஏ வசதியுடன் செயல்படும், ஒப்பந்தத்தை கொண்ட ஜப்பானில் நிறுவப்பட்டுள்ள இராணுவத் தளத்தை சேர்ந்த ஒரு தனிப்பட்ட ஒப்பந்தகாரருக்காக பணியாற்றுவதற்கான தனது முதல் வேலையை பொறுப்பேற்பதற்காக அவர் சி.ஐ.ஏ யைவிட்டு விலகினார். அப்போதுதான் தான் கட்டுப்படுத்த வேண்டும் என்று நினைத்த முக்கிய கொள்கைகளை ஒபாமா முடுக்கிவிட்டதை தான் அவதானித்தாகவும் அதன் விளைவாக தான் கடினமாகியதாகவும் அவர் சொன்னார்.
அவருடைய அனுபவத்தில் அவர் கற்றுக்கொண்ட முதலாவது பாடம் “ வேறு யாராவது உங்களைச் சுற்றி செயற்படும்வரை உங்களால் காத்திருக்க முடியாது என்பதுதான். நான் தலைவர்களைத் தேடினேன், ஆனால் தலைவர்கள்தான் செயற்படுவதில் முதலாவதாக இருக்கிறார்கள் என்பதை நான் உணர்ந்து கொண்டேன்”.அடுத்த மூன்று வருடங்களில் எப்படி அனைவரும் என்.எஸ்.ஏ யின் கண்காணிப்பு செயற்பாடுகளை நுகர்கிறார்கள் என்பதை அவர் கற்றுக்கொண்டார்,”அவர்கள் ஒவ்வொரு உரையாடலையும் மற்றும் ஒவ்வொரு விதமான நடத்தையையும் மேற்கொள்ளும்போது அவர்களுக்கு தெரிந்த உலகத்தின் எண்ணப்படியே செய்கிறார்கள்” என அவர் தெரிவித்தார்.
ஒருமுறை தான் இணையத்தில் “எல்லா மனித வரலாற்றிலிருந்தும் மிகவும் முக்கியமான கண்டுபிடிப்பு” என்கிற விடயம்பற்றி தான் பார்த்ததை அவர் விபரித்தார். ஒரு வளர்ந்தவன் என்கிற முறையில் “ நான் சொந்தமாக ஒருபோதும் சந்தித்திராத பலவிதமான கருத்துக்கள் பற்றி மக்களுடன் பேசுவதில்” சில சமயம் நாட்கணக்கில் செலவழிப்பதுண்டு.ஆனால் இணையத்தின் மதிப்பு அதன் அடிப்படைத் தனியுரிமையுடன் சேர்த்து எங்கும் பரவியுள்ள கண்காணிப்பு முறைகளால் வேகமாக அழிக்கப்படுகின்றன.”நான் என்னை ஒரு நாயகனாகப் பார்க்கவில்லை” என்ற அவர் “ஏனெனில் நான் செய்வது எனது சுய ஆர்வத்தின் பேரில், தனியுரிமை இல்லாத ஒரு உலகத்தில் வாழ நான் விரும்பவில்லை,மற்றும் அதன்காரணமாக அறிவார்ந்த ஆய்வு மற்றும் படைப்பாற்றல் என்பனவற்றுக்கு இடமில்லாமல் போகிறது” என்றும் தெரிவித்தார்.
ஒருமுறை, என்.எஸ்.ஏ யின் கண்காணிப்பு வலை விரைவிலேயே திரும்பபெற முடியாத நிலைக்கு வந்துவிடும் என்கிற முடிவுக்கு அவர் வந்திருந்தார், அது அவர்; செயற்படுவதை தெரிவு செய்வதற்கு சில காலத்துக்கு முன்பு என்று அவர் கூறினார். “ அவர்கள் செய்வது ஜனநாயகத்திற்கு ஒரு இருத்தலியல் அச்சுறுத்தல்லை ஏற்படுத்துகிறது”.
கொள்கை பற்றிய ஒரு விடயம்
அந்த நம்பிக்கைகளைப் போன்ற வலுவான பல கேள்விகள் இன்னமும் பாக்கியுள்ளன, அவர் ஏன் அதை செய்தார்? தனது சுதந்திரம் மற்றும் வசதியான வாழ்க்கைமுறை என்பனவற்றை கைவிட்டு? “ பணத்தைக் காட்டிலும் மிகவும் முக்கியமான பல விடயங்கள் உள்ளன. பணம்தான் எனது குறிக்கோளாக இருந்திருந்தால், என்னால் அந்த ஆவணங்களை எத்தனையோ நாடுகளுக்கு விற்று மிகப்பெரும் பணக்காரனாக ஆகியிருக்க முடியும்”
அவருக்கு அது கொள்கை சம்பந்தமான ஒரு விடயம். “ அரசாங்கம் தனக்கு உரிமையில்லாத அதிகாரத்தை தானே வழங்கியுள்ளது. பொதுமக்கள் கவனக்குறைவாக விடப்படலாகாது. அதன்விளைவு என்னைப்போன்ற மக்களுக்கு அவர்கள் அனுமதிக்கப்பட்டதைவிட அதிகம் செல்வதற்கான கட்டுப்பாடின்மை தோன்றக்கூடும்” என்று அவர் சொன்னார்.
இணைய சுதந்திரம் மீதான அவரது பற்றுறுதி அவரது மடிக்கணணியில் ஒட்டப்பட்டிருந்த ஒட்டுப்படத்தின் மூலம் பிரதிபலித்தது,” நான் கணணியுடனான நேரடித் தொடர்பு உரிமைகளை ஆதரிக்கிறேன் - மின்னணு எல்லை அறக்கட்டளை” எனும் வாசகங்கள் அதிலிருந்தன. மற்றொரு படம்; அனாமதேயத்தை வழங்கும் நேரடித் தொடர்பு நிறுவனத்தின் தோர் திட்டத்தை விளக்குகிறது.
மற்றும் சில கற்பனையாளர்கள் போல அவர் இல்லை என்பதற்கான நம்பகத்தன்மையை உறுதிப்படுத்தும்படி நிருபர்கள் அவரிடம் கேட்டபோது, அவர் தயக்கமின்றி தனது சுயவிபரங்கள், சி.ஐ.ஏ அடையாள அட்டையிலுள்ள அவரது சமூக பாதுகாப்பு இலக்கம், மற்றும் காலாவதியான அவரது இராஜதந்திர கடவுச்சீட்டு என்பனவற்றை அப்பட்டமாக தெரியப்படுத்தினார். அதில் எந்த மாற்றமும் இருக்கவில்லை. அவரது தனிப்பட்ட வாழ்க்கையை பற்றி எதைக் கேட்டிருந்தாலும்; அதற்கு அவர் பதில் சொல்லியிருப்பார்.
அவர் அமைதி, சாமர்த்தியம், எளிய நடைமுறை, என்பனவற்றை கொண்டவராக இருந்தார். கணணிகளில் நிபுணரான அவர் கண்காணிப்பின் தொழில்நுட்ப பகுதி பற்றி பேசும்போது மிகவும் மகிழ்ச்சி அடைந்தவராக தோன்றினார்,அந்த விளக்கத்தின் தரத்தை அநேகமாக ஒரு சக தொடர்பாடல் நிபுணரால் மட்டுமே விளங்கிக் கொள்ள முடியும். ஆனால் தனியுரிமையின் மதிப்பை பற்றிப் பேசும்போது அவர் தீவிர ஆர்வம் காட்டியதுடன், உளவுத்துறையினரின் நடத்தைகள் காரணமாக அது சீராக அரிக்கப்பட்டு வருவதாக அவர் உணர்கிறார்.
அவரது செயல்முறை அமைதியானதாகவும் மற்றும் வெகு தளர்வானதாகவும் இருந்தது, ஆனால் அவர் மறைவிடம் தேடியது முதல் ஹோட்டல் கதவில் தட்டு கேட்பதற்கு காத்திருக்கும் வரைஅவரிடம் ஒருவகை பதற்றம் இருப்பதை புரிந்து கொள்ள முடிகிறது. ஒரு தீ எச்சரிக்கை மணி ஒலித்தபோது, “ இதற்கு முன்னால் இப்படி நடக்கவில்லை” தான் ஏமாற்றப்படுகிறோமோ என்கிற கவலையுடனும் அது உண்மையாக இருக்குமோ அல்லது சோதனையா என்கிற ஆச்சரியத்துடனும், அல்லது தன்னை வீதிக்கு கொண்டுவருவதற்காக சி.ஐ.ஏ செய்யும் தந்திரமோ என்கிற சந்தேகத்தடனும் அவர் தெரிவித்தார்.
அவரது படுக்கையை சுற்றி அவரது பெட்டி, அறைக்குள் பரிமாறப்பட்ட காலை உணவின் எச்சங்களடங்கிய ஒரு தட்டு, முன்னாள் உதவி ஜனாதிபதி டிக் செனியின் சுயசரிதமான அங்லர் நூலின் ஒரு பிரதி, என்பன சிதறிக் கிடந்தன. கடந்தவார செய்திகள் பற்றி கதைகள் கார்டியனில் வெளிவர ஆரம்பித்தது முதல் ஸ்நோவ்டன் அவரது தெரிவுகளின் தாக்கங்களைப்பற்றி அறிவதற்காக தொலைக்காட்சிகளை அவதானமாக பார்த்தபடியும், இணையத்தை வாசித்தபடியுமே உள்ளார். தான் கிளப்புவதற்கு ஏங்கிய விவாதம் இறுதியில் இடம்பெறுவதையிட்டு அவர் திருப்தியடைந்தவர் போலக் காணப்பட்டார்.
உறுதியாக அடுக்கிவைத்த தலையiணைகளில் சாய்ந்தவாறே சி.என்.என் னில் வுல்ப் பிளிட்சர் ஒரு விவாதக் குழுவிடம் அரசாங்கத்தின் ஊடுருவல் பற்றியும் அதை கசியவிட்டவர் யார் என்பது பற்றி அவர்களுக்கு ஏதாவது யோசனை உள்ளதா என்று கேட்பதையும் அவர் பார்த்து ரசிக்கிறார். 8,000 மைல்களுக்கு அப்பால் அதை கசியவிட்டவர் முகத்தில் ஒரு வறண்ட புன்னகைகூட இல்லாமல் அசையாமல் அதை பார்த்துக்கொண்டிருக்கிறார்.
ஸ்நோவ்டன் தான் எல்ஸ்பேர்க் மற்றும் மனிங் ஆகிய இருவரைப்பற்றியும் தான் பாராட்டுவதாக தெரிவித்தார், ஆனால் இராணுவ தனியாட்களுக்கும் மற்றும் தனக்கும் இடையில்; ஒரு அதிவிசேட திறமை இருப்பதாக விவாதிக்கிறார், யதேச்சையாக ஸ்நோவ்டனின் கசிவு செய்தியாக ஆரம்பித்த வாரத்தில்தான் மற்றவரின் வழக்கு விசாரணை ஆரம்பித்துள்ளது.
“நான் வெளிப்படுத்திய ஒவ்வொரு ஆவணத்தையும் அது சட்டபூர்வமாக பொதுமக்களின் நலனை உறுதிப்படுத்துகிறதா என கவனமாக மதிப்பீடு செய்த பின்னரே வெளியிட்டேன்.அங்கு ஒரு பெரிய தாக்கத்தை ஏற்படத்தக்கூடிய பலவகையான ஆவணங்களும் இருந்தன,நான் அவைகளை வெளியிடவில்லை,ஏனெனில் மக்களுக்கு தீங்கு விளைவிப்பது எனது நோக்கமல்ல,வெளிப்படைத் தன்மையே எனது நோக்கம்.
அவர் பத்திரிகையாளர்களுக்கு கொடுப்பதற்கான ஆவணத்தை வேண்டுமென்றே தெரிவு செய்தார் அவர்களின் தீர்ப்பே பொதுமக்களின் தீhப்பாகவும் இருக்கும் என்று அவர் நம்பினார் அதில் மறைப்பதற்கு என்ன இருக்கிறது.
அவரது எதிர்காலத்தை பற்றி அவர் தெளிவற்றவராகவே உள்ளார். கசிவு காரணமாக ஏற்பட்டுள்ள விளம்பரம் தனக்கு சிறிதளவு பாதுகாப்பை தரக்கூடும் என அவர் நம்புகிறார், அவர்கள் அழுக்காவதை அது சற்று கடினமாக்கும்.
அவரது பார்வையில் அவரது சிறந்த நம்பிக்கையாகவிருப்பது ஐஸ்லாந்தில் தஞ்சம் பெறுவதற்கான சாத்தியமே. இணைய சுதந்திரத்தில் ஒரு வெற்றி வீரனைப்போல திகழும் அதன் மதிப்பினைக் கொண்டு அது அவரது பட்டியலில் முதலிடத்தை பெற்றுள்ளது. அது ஒரு நிறைவேறாத ஆசையாகவும் போகலாம் என்பதும் அவருக்குத் தெரியும். ஆனால் ஏற்கனவே முதல்வாரத்தில் வெளியான கதைகளின் காரணமாக தீவிர அரசியல் சர்ச்சைகள் உருவாகியுள்ளன “அது அத்தனை மதிப்புவாய்ந்ததாக இருப்பதையிட்டு நான் திருப்தி அடைகிறேன். எனக்கு எந்த வருத்தமும் இல்லை” எனத் தெரிவித்தார் ஸ்நோவ்டன்.
நன்றி : கார்டியன் டொட் கோ டொட் யுகே
தேனீ மொழிபெயர்ப்பு: எஸ்.குமார்
10years_thenee-1
yaarl oli
LTTE_Chambers1
புலிகளின் வதை முகாம்களில் ஒன்றரை ஆண்டுகள்
துன்புற்ற தோழர் மணியம் எழுதும் அனுபவத்தொடர்
புலம்பெயர் எல்.ரீ.ரீ.ஈ செயற்பாட்டாளர்கள்
தங்களை மனித உரிமைக் காவலர்களைப்போல்
காட்டிக்கொள்கிறார்கள்
.
கதம்பமான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமை:
கலக்கமான இலங்கைத் தமிழரின் அரசியல் எதிர்காலம்

அரசியல் தீர்வைப் பின்தள்ளும் பிழையான மூலோபாயம்
முஸ்லிம்களுக்கு எதிரான வெறுப்பூட்டும் பிரச்சாரத்தை நிறுத்துங்கள்