“குன்றத்துக் குமரன்” கோயில் அவுஸ்திரேலிய சைவப் பெருமக்களுக்கு ஒரு வரப்பிரசாதம்! --- பத்மலிங்கம்

.
அவுஸ்திரேலியாவிற்குப் புலம்பெயர்ந்து வதியும் சைவத் தமிழ்ப்பெருமக்கள் பல மாநிலங்களிலும் திருக்கோயில்களை அமைத்துச் சைவசமயத்தை முறையாக வளர்த்துவருவதைக் காணக் கூடியதாகவுள்ளது. “கோயில் இல்லாத ஊரிலே குடியிருக்கலாகாது” என்னும் முதுமொழிக்கு முக்கியத்துவம் அளித்து நீர்வளமும் நிலவளமும் அருள்வளமும் ஒருங்கே அமைந்த மெல்பேர்ணின் வடமேற்குப் பகுதியிலே திருக்கோயில் இல்லாத குறையை நிவர்த்தி செய்யும்வண்ணம்  சக்தி வாய்ந்த பெருங் கோயிலாகக் “குன்றத்துக் குமரன்” கோயிலை முருக பத்தர்கள் அமைத்தமை சைவப் பெருமக்களுக்கு ஒரு பெரும் வரப்பிரசாதமாக அமைந்துள்ளது. 






‘சுயம்பு’வாக ஒரு விருட்சத்திலே விநாயகப்பெருமான் தோற்றம் கொண்டு கோயில் அமைப்பதற்கு உகந்த இடம் இதுதான் என்பதை மெய்யடியாருக்கு உணர்த்தி அருளியமை இக்கோயிலின் தனிச் சிறப்பெனலாம். சிவம்; வளர்க்கும் திருக்கோவில் அமையச் சிறப்பாக இருக்கவேண்டிய மூர்த்தி தலம் தீர்த்தம் என்னும் மூன்று அம்சங்களும் ஒருங்கே அமைந்த சிறப்பு இந்தக் குன்றத்துக் குமரன் கோயிலின் தெய்வீகத் தன்மையைக் காட்டுகிறது. ஐந்து ஏக்கர் நிலத்தைக்கொண்ட வளாகத்தில் நிறுவப்பட்ட இந்தக் கோயில்வாசலில் சிறந்த சிற்ப வேலைப்பாடுகளுடன் எழிலுருவாகக் காட்சியளிப்பது கோயிலின் இராசகோபுரம் என்றால் மிகையாகாது. திறமைமிக்க சித்திரச்சிற்ப வேலைப்பாடுகளால் வண்ணத் திருக்கோயிலை அமைத்த பெருமை பினாங்கைச் (மலேசியா) சேர்ந்த மாமேதையான ~;தபதி தாமரைக்கண்ணன் அவர்களைச் சேரும்;. 2006 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 30ஆம் திகதி இந்தக் கோயிலின் அத்திவாரம் இடுவதற்கும் சங்குகள் பதிப்பதற்கும் குறித்த சுப நாளன்று கடும் மழை பொழிந்தவண்ணம் இருந்தது. ஆனால் முருகனின் திருவருளினால் முகூர்த்த நேரம் பார்த்து ஒரு மணியளவிற்கு மழை முற்றாக விட்டுக்கொடுத்தது. இதுவும் இறையருளென பத்தர்கள் மகிழ்ச்சியுடன் குறிப்பிட்ட நிகழ்ச்சிகளைத் திருப்தியாகச் செய்ய முடிந்தது.





கோயில் கட்டிட வேலைகள் துரிதமாக நடைபெறத் திருவருள் துணைநின்றது. கல்லினாலும் உலோகங்களினாலும் முறைப்படி உருவாக்கப்பட்ட விக்கிரகங்களுக்குக் கடவுளரை எழுந்தருளச் செய்து தெய்வசத்தியை ஊட்டும் நிகழ்வாகப் பிரதிட்டை செய்யப்பட்டது. இந்த வருடம் பெப்ரவரி மாதம் 12ஆம் திகதி காலை 9.15 முதல்10.40 வரையுமுள்ள பஞ்சமி திதியும்  அத்தம் நட்சத்திரமும் அமிர்த சித்த யோகமும் கூடிய நல்லோரையில் முருக பத்தர்களின் கரகோசங்களும் மந்திரங்களும்  ஒலிக்க மங்கல வாத்தியங்களும் முழங்க திருமுருகனுக்குக் குடமுழுக்கு நடைபெற்றது கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது. அவுழூ;திரேலியாவின் பல மாநிலங்களிலிருந்தும் பத்தர்கள் ஆயிரக்கணக்கில் இந்த சரித்திரப் பிரசித்தி பெற்ற வைபவத்திற்; கலந்து சிறப்பித்து முருகனின் பரிéரண அருளைப் பெற்றனர். இவ்வைபவத்திற்கென அவுஸ்திரேலியா நிêசிலாந்து இந்தியா மற்றும் சிறீலங்கா ஆகிய நாடுகளிலிருந்து மகா கும்பாவிடேக வைபவத்தைச் சிவாகம விதிமுறைகளுக்கமைய சிறந்தமுறையில் செய்யக்கூடிய சிவாச்சாரியார்கள் வரவழைக்கப்பட்டிருந்தனர். சகல கிரிகைகளும் ஓம் என்னும் பிரணவப் பொருளின் திருவுருவமாக விளங்கும் விநாயகப் பெருமானின் கருணையினால்  தங்குதடையின்றி நிறைவேறியன. இன்னுமொரு சிறப்பு என்னவென்றால் “பாற்று கேவ்” (டீயுவுரு ஊயுஏநு வுநுஆPடுநு) கோயில் முருகனின் திருக்கரத்தில் இருந்த  சக்திவாய்ந்த வேலாயுதம் இந்தக் கோயிலுக்கு  அன்பளிப்புச் செய்யப்;பட்டதாகும்.



சுயம்பு உருவாக விருட்சத்தில் தோற்றிய விநாயகப் பெருமானுக்கு இந்த விருட்சம் உள்ள இடத்திலேயே வழிப் பிள்ளையாராக விநாயகர் கோயிலும் கட்டப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. மகா கும்பாவிடேக நாளன்று நிகழ்ச்சிகளின் முடிவில் கட்டிடக் கலைஞரான ~;தபதி தாமரைக் கண்ணன் அவர்களுக்கு “சிற்பக் கலை விற்பன்னர்” என்னும் கௌரவப் பட்டம் கோயில் நிருவாகசபையினரால் வழங்கப்பட்டது. எல்லோரையும் கவரக்கூடிய முறையில் திருக்கோயில் கட்டிமுடிக்கப்பெற்றமை எல்லோராலும் பாராட்டப்பட்டது. 





இதைத் தொடர்ந்து 48 நாள்களாகத் தொடர்ந்து மண்டலாபிடேகம் செந்தண்மை அந்தணர்களால் சிறப்பாக நடைபெற்றது. புpன்னர் மார்ச் மாதம் 31ஆம் திகதி காலை முருகப் பெருமானுக்கு 1008ச் சங்குகளினால் சங்காபிடேகம் விமரிசையாக நடைபெற்றது. அன்று மாலைப் éசையைத் தொடர்ந்து அழகன் முருகனை வண்ண ஊஞ்சலில் அமர்த்தி  மங்கல வாத்தியம் மெருகூட்டத் திருëஞ்சற்பதிகம் பாடப் பாட முருகன் அசைந்தாடிய காட்சி அற்புதமாய்க் கண்கொள்ளாக் காட்சியாயிருந்தது. திருëஞ்சற் பதிகத்தைச் சிட்னியைச் சேர்ந்த பல்வைத்திய கலாநிதி இளமுருகனார் பாரதி அவர்கள் இயற்றித் தந்தார்கள். அவர் “தங்கத் தாத்தா” என்று அழைக்கப்படும் நவாலிêர் சோமசுந்தரப் புலவர் அவர்களின் பேரனாவார்.  அன்று திருëஞ்சற் பாடல்களைச் சங்கீத வித்துவான் திருமதி சிவகங்கா சகாதேவன் அவர்கள் இசையுடன் பாடியமை நன்றாக இருந்தது. இதையடுத்து கேயில் நிர்வாக சபையின் முன்நாட் தலைவர் திரு பத்மலிங்கம் அவர்கள் பல்வைத்திய கலாநிதி இளமுருகனார் பாரதி அவர்களை அறிமுகப்படுத்திவைக்க  கோயில் நிர்வாகசபையின் காரியதரிசி திரு காசிநாதன் அவர்கள் பொன்னாடை போர்த்திக் கௌரவித்ததைத் தொடர்ந்து  கோயிற் பிரதம சிவாச்சாரியார் சிவத்திரு சுப்பிரமணியக்குருகச்கள் காளாஞ்சி கொடுத்துச் சிறப்புச் செய்தார். திருëஞசல் பாடிய திருமதி சிவகங்கா அவர்களையும் கோயிலை சிவாகமப்படி நிர்மாணித்த சிற்பக்கலை விற்பன்னர் திரு தாமரைக்கண்ணன் அவர்களையும்  கட்டிடக் கலைஞர் திரு நந்தகுமார் அவர்களையும் கோயிலுக்காக அல்லும் பகலும் அயராது உழைத்த முருகபத்தர் திரு வைத்தியநாதன் அவர்களையும் கோயில் நிர்வாக சபைத் தலைவர் சிவத்திரு விநாயக சர்மா அவர்கள் பொன்னாடை போர்த்திக் கௌரவித்ததுடன் நிகழ்ச்சிகள் அனைத்தும் நிறைவுபெற்றன..
“குன்றத்துக் குமரன்” திருக்கோயில்  அவுஸ்திரேலிய சைவப் பெருமக்களுக்கு ஒரு வரப்பிரசாதமாக அமைந்துள்ளது.


2 comments:

Anonymous said...

“குன்றத்துக் குமரன்” திருக்கோயில் விழர பற்றி அற்புதமான விமர்சனம்
---- திரு

kirrukan said...

கடவுள்மாரும் இப்ப புலத்தில்தான் சுயம்புருவில் வருவினம் போல கிடக்கு....தாயகத்தில் புத்தர் இராணுவத்தின் துணையுடன் இவையிளின்ட இடத்தை பிடிக்க சைவக்கடவுள்மார் புலத்துக்கு வருகிறார்கள்....

அதுசரி இந்து கடவுள்மார் சுயம்பு உருவில் ஏன் சிங்கள பகுதியில் உருவாகுவதில்லை.......