.
கேப்டவுன் பல்கலைக் கழக மாணவர் சங்கத்தின் பிரதான கட்டிடத் திற்கு அவரது பெயர் சூட்டப்பட் டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் அவரது பெய ரில் நினைவு சொற் பொழிவு நிகழ்ச்சி நடைபெறுகிறது. மான் செஸ்டர் பல்கலைக்கழக மாணவர் சங்க கட் டிடத்திற்கு அவரது பெயர் சூட்டி கவுரவிக்கப் பட்டுள்ளார். ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழக ரஸ்கின் கல்லூரி மாணவர் விடுதி அவர் பெயரில் தான். பிரிட்டனில் உள்ள மாணவர் சங்கங்கள் பலவற்றில் இவரது பெயருடன் கட்டி டங்களும் பிரிவுகளும். பிரேசில், சல்வடாரில் இவரது பெயரில் கல்விநிறுவனம். பிரிட்டோரியா மருத்துவக்கல்லூரியும் அவரது பெயரில், டர்பன் பல்கலைக்கழகத்தின் பரந்து விரிந்த வளாகம் அவரது பெயர் தாங்கிநிற்கிறது.இதே பல்கலைக்கழக வளாகத்தின் சுதந்திர சதுக்கத் தில் அவருக்கு மார்பளவு வெண்கலச் சிலை....
இவ்வளவு சிறப்புக்குரிய அவர் யார்?
பெரியஅறிஞரா? போராளியா? அரசியல் தலைவரா? தத்துவ ஞானியா? இவை எல்லா மாகவும் வாழ்ந்து 30 வயதிலேயே மரண மடைந்தவர் அவர். காவல்துறையின் கொடூரத் தாக்குதலுக்கு பலியாகிப் போனவர் அவர்.
மனித குலத்தின் சாபக்கேடாக இன்றும் நீடிக்கின்ற கறுப்பு இன ஒதுக்கலின் உச்சகட்டம் தென்னாப்பிரிக்காவில் நிலை கொண்டிருந்த போது, அந்த மக்களுக்காகப் போராடிய இளை ஞர் இவர்.
பள்ளி செல்லும் சிறாராக இருந்த போதே நிர்வாகத்திற்கு எதிராக செயல்பட்டதால் டிஸ் மிஸ் செய்யப்பட்டார் என்ற இவரின் வரலாற்றுக் குறிப்பு நம்புவதற்கு சிரமமாக இருக்கிறது. ஆனா லும் 30 வயதுக்குள் தலை சிறந்த போராளிகள் வரிசையில் ஒருவராக நின்று விட்டதால் இது சாத்தியம் என்றும் படுகிறது.
தென் ஆப்பிரிக்காவில் வெள்ளை ஏகாதி பத்தியம் வேரூன்றி கருப்பு இன மக்களை மக்களாகவே மதிக்காமல் மிதித்து ஆதிக்கம் செலுத்திய கால கட்டத்தில் -
1946 ஆம் ஆண்டு டிசம்பர் 18ல் ஈஸ்டர்ன் கேப் மாகாணத்தில், கிங்வில்லியம் நகரில் பிறந்தவர் ஸ்டீவ்பைக்கோ. லவ்டேல் பள்ளிப் படிப்பின் போது தான் இவர் நிர்வாகத்திற்கு எதி ராக இருந்ததால் வெளியேற்றப்பட்டார். பின்னர் நேட்டாலில் உள்ள ரோமன் கத்தோலிக்க உறை விடப்பள்ளியில் சேர்க்கப்பட்டார். அதே நகரில் மருத்துவக் கல்லூரியில் படித்தபோது தென் னாப்பிரிக்க மாணவர்களின் தேசிய சங்கத்தில் இணைந்தார். அந்த சங்கத்தில் பல இனத்தின ருக்கும் பிரதிநிதித்துவம் உள்ளதாக சொல்லிக் கொண்டாலும் வெள்ளை இனத்தவர்தான் தலை தூக்கிநின்றனர்.
இதனால் கருப்பர், இந்தியர் மற்றும் மாநிற முள்ள மாணவர்களுக்கு தனிச்சங்கம் தேவை என்பதை உணர்ந்து தென் ஆப்பிரிக்க மாண வர் சங்கத்தைத் தோற்றுவித்தார். கருப்பு இனத் தவர் நலன் கருதும் பல்கலைக்கழக மாணவர் களை ஒருங்கிணைப்பதும், அரசியல் சுயசார் பும் இந்த சங்கத்தின் நோக்கங்களாக இருந் தன. 1968 ஆம் ஆண்டு 22வது வயதில் இந்த சங்கத்தின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட் டார்.
பள்ளிக் கூடமாக இருந்தால் என்ன? பல் கலைக்கழகமாக இருந்தால் என்ன? உணர்ச்சி களை அமுக்கிவைத்துக் கொள்ளாதவராக விளங்கினார் பைக்கோ. தீவிர அரசியல் நடவடிக்கைகள் காரணமாக நேடால் பல் கலைக்கழகத்திலிருந்தும் அவர் வெளியேற் றப்பட்டார்.
1973 ஆம் ஆண்டு பைக்கோவுக்கு வெள்ளை நிறவெறி அரசு விதித்த தண்டனை மிகக் கொடூரமானது. ஒன்றுக்கும் அதிகமான நபர்களிடம் அவர் பேசக்கூடாது. பிற கெங்கே பொதுக் கூட்டங்களில் பேசுவது? கிங்வில்லி யம்ஸ் நகரத்தைவிட்டு வெளியே செல்லக் கூடாது; பொதுப்பத்திரிகைகளில் எழுதக் கூடாது; ஊடகங்களுடன் பேசக்கூடாது. உயி ரோடு புதைக்கப்பட்டதற்கு ஒப்பான நிபந்தனை கள்... பைக்கோ பேசியதையோ எழுதிய தையோ மேற்கோள் காட்டவும் கூடாது என்றால் நிறவெறியின் உச்சத்தைக் கற்பனை செய்து கொள்ளலாம்.
கிளைகளைக் கட்டுப்படுத்தினாலும் வேர் கள் பரவுவதைத் தடுக்க இயலாது அல்லவா? பைக்கோவும் அவர் தலைமை ஏற்றிருந்த கருப்பு இன உணர்வாளர்கள் இயக்கமும் மக்க ளிடம் ஊடுருவிச் செய்த வேலைகள் 1976 ஜூன் 16 சொவைட்டோ பெரும் கிளர்ச்சிக்கு வழி வகுத்தன.
இதுபோதாதா? வெள்ளை இனவெறி காவல்துறையின் இலக்கானார் ஸ்டீவ் பைக்கோ. ஓராண்டுக்குப் பின் 1977 ஆகஸ்ட் 18ல் அந்த விடுதலைப் போராளி பயங்கர வாதத் தடைச்சட்டத்தின் படி காவல்துறையால் கைது செய்யப்பட்டார். போர்ட் எலிசபெத் காவல் துறை அதிகாரிகள் அவரை விசாரித்த 619ஆம் எண்கொண்ட காவல்நிலையம் வரலாற்றில் முக்கிய இடம் பிடித்தது.
நிறவெறி அரசின் ஏவல்துறை 22 மணி நேரத்திற்கும் அதிகமாக விசாரணை என்ற பெயரில் சித்ரவதை செய்தது. அரக்கத்தன மான அதிகாரிகளின் தாக்குதலால் தலையில் காயங்கள் ஏற்பட்டு சுய நினைவிழந்தார் பைக்கோ. ஒரு நாள் முழுவதும் ஜன்னலோடு சங்கிலியால் கட்டிவைத்து கொடுமைப் படுத்தினர்.
1977 செப்டம்பர் 11 அன்று ஒரு காரின் பின்பக்கத்தில் அவரைத் திணித்து 1100 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள பிரிட்டோரியாவுக்குக் கொண்டு சென்றனர். இங்குதான் மருத்துவசதி கொண்ட சிறைச்சாலை இருந்தது. ஆனாலும் அந்தச் சிறையை நெருங்குவதற்கு முன்பா கவே செப்டம்பர் 12 அன்று பைக்கோவை மர ணம் தழுவிக் கொண்டது. தங்களின் விடுதலைக் கான வீரத்திருமகனாய் பைக்கோவை மக்கள் நினைவில் தழுவிக் கொண்டனர்.
வழக்கம் போல் நீண்டநாள் உண்ணாவி ரதம் இருந்ததால் அவர் இறந்து போனதாக கூறியது போலீஸ். ஆனால் தலைக் காயங்கள் காரணமாகவே அவர் இறந்தார் என்பதை உறுதி செய்தது பிரேத பரிசோதனை அறிக்கை.
பிற்காலத்தில் தென்னாப்பிரிக்க பத்திரி கையாளரான டொனால்ட் வுட்ஸ் எழுதிய ‘பைக்கோ’ என்ற புத்தகம் அவரின் வாழ்க்கை யையும் போராட்டங்களையும் விவரித்தன. பைக்கோவின் காயங்களை ரகசியமாகப் படம் பிடித்து வெளிப்படுத்தியவர் டொனால்ட்வுட்ஸ்.
மனிதர்கள் வாழும் காலஎல்லை எதையும் தீர்மானிப்பதில்லை; வாழ்முறைதான் ஏற்ற இறக்கத்தைத் தருகிறது. வெள்ளை நிறவெறி அரசுக்கு எதிராகத் தென்னாப்பிரிக்காவில் கருப்பு இனமக்களையும் -நிறவெறிக்கு எதி ரான மக்களையும் அணி திரட்டிய தளநாய கனாக பைக்கோ விளங்கியதால் இன்றும் பல வடிவங்களில் நினைவு கூரப்படுகிறார்.
Nantri: www.sooddram.com/
No comments:
Post a Comment