ஷோபா ஜெயமோகனின் இசை அரங்கம் என் பார்வையில் .....


                                    கலா ஜீவகுமார் 

ஷோபா ஜெயமோகனின் இசை அரங்கேற்றம் சென்ற சனிக் கிழமை 10 /03 /12  Hill centre இல் இடம் பெற்றது. அந் நிகழ்விற்கு செல்லும் வாய்ப்பு எனக்கும் கிடைத்தது . இசையை முறையாகப் பயிலா விட்டாலும் இசையை ரசிக்கும் ஓர் ரசிகையாக இந்த விமர்சனத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.
Hill centre இற்கு அருகில் இருந்த காரணத்தால் மாலை 6 மணிக்கே வீட்டில் இருந்து புறப்பட்டு 6 . 15 இற்கு மண்டபத்தினுள் நுழையும் போதே மண்டபம் முற்று முழுதாக மக்கள் திரளால் நிறைந்து காணப்பட்டது. 



மண்டபத்தின் முன்னாக பிள்ளையார் அமர்ந்திருந்து மக்களை வரவேற்கிறார். சரியாக 6 . 30 மணிக்கு குறிப்பிட்டபடி அலாரம் அடித்ததுபோல் திரை விலக கலைமகளாகக் காட்சி அளித்தார் ஷோபா.





 அழகு, ஆற்றல் அத்தனையும் ஒருங்கிணைந்த ஒரு தேவதையாக கையில் வீணயில்லா கலைமகளாக பக்க வாத்தியக் கலைஞர்கள் புடை சூழ அமர்ந்திருந்தார். மேடை அலங்காரம் மிகவும் எளிமையாக , ஆனால் மிகவும் அழகாக பிள்ளையார் துணையாக அருமையாக அமைந்திருந்தது.
வரவேற்புரையுடன் நிகழ்வு ஆரம்பமாகியது. உரையை திருமதி ஷாமினி storer சுருக்கமாக ஆற்றி கலைஞர்களையும் அறிமுகப் படுத்தி வைத்தார். உரையில் குறையேதும் இல்லாவிடினும் தமிழில் அமைந்திருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும் என்று எண்ணத் தோன்றியது. இடையிடையே அறிவிப்பாளர்கள் என்ற பெயரில் யாரும் வந்து தொந்தரவு செய்யாமல் ஒவ்வொரு பாடலையும் அது அமைந்த ராகம் , தாளம் போன்ற சகல விடயங்களையும் திரையில் காண்பித்தது மிகவும் அருமை.
ஷோபாவின் முதலாவது பாடல் அவரது தந்தையார் Dr . ஜெயமோகன் எழுதிய நாமகளைத் துதி பாடும் வர்ணமாக அமைந்திருந்தது. தந்தையார் கவி வடிக்க மகள் குரல் கொடுத்து அந்தப் பாடலுக்கு பெருமை சேர்த்துக் கொண்டனர். ஆஸ்திரேலியா வில் பிறந்து வளர்ந்த ஒரு குழந்தை அழகு தமிழில் கர்நாடக சங்கீதத்தை இசைத்த விதம் கேட்போரை மெய் சிலிர்க்க வைத்தது என்றால் அது மிகையாகாது. அருமையான குரல் வளம் , மண்டபமே மிகவும் அமைதியாக இருந்து இசையை ரசித்துக்கொண்டிருந்தது. வர்ணத்தை தொடர்ந்து பல கீர்த்தனங்களும் கிருத்திகளும் மழையாகப் பொழிந்துகொண்டிருந்தன. இடையில் பூர்வி கல்யாணி ராகத்தை இசைத்து அதனைத் தொடர்ந்து அதே ராகத்தில் அமைந்த " ஆனந்த நடமாடுவார் " பாடலை பாடியபோது மண்டபமே அதிரும்படி கரகோஷம் எழுந்தது. தொடர்ந்து " சிறையாரும் மடக்கிளியே " என்ற தேவாரமும் " ராம சந்திர புவயாமி " என்ற பாடலும் இடம் பெற்றது. அதனைத் தொடர்ந்து ராக ஆலாபனை , பைரவி ராகம் பாடி அதே ராகத்தில் அமைந்த " யாரோ இவர் யாரோ "பாடலைப் பாடி எல்லோரையும் இன்னுமோர் உலகத்திற்கே அழைத்துச் சென்று விட்டார் .தொடர்ந்து வந்த இடைவேளையின்போது பலரும் இந்தப் பாடலைப் பற்றியே பேசிக்கொண்டிருந்ததை கேட்கக் கூடியதாக இருந்தது
செவியின்பத்தைக் கொடுத்ததுடன் நின்றுவிடாது இடைவேளையின்போது பல்சுவை சிற்றுண்டிகளையும் வழங்கி மீண்டும் நிகழ்விற்கு அழைத்துச் சென்றனர் Dr ஜெயமோகன் குடும்பத்தினர். சிட்னியில் பல்வேறு நிகழ்வுகள் ஒரே நாளில் நடந்து கொண்டிருக்கும் காரணத்தினால் சிலர் எல்லோருக்கும் தலை காட்ட மண்டபத்தை விட்டு வெளியேறியிருந்ததைக் காணக் கூடியதாயிருந்தது. ஆனால் இடைவேளையின் பின்புதான் இன்னும் அருமையான சுவையான பரீட்சயமான பல பாடல்களைக் கேட்கக் கூடியதாக இருந்தது என்பதை இடைவேளையுடன் சென்றவர்களுக்கு வருத்தத்துடன் கூறிக் கொள்ள விரும்புகிறேன். 




குறிப்பாக யாழ் வீரமணி ஐயரால் நல்லுர்க் கந்தன் மீது பாடப்பட்ட லதாங்கி ராகத்தில் அமைந்த " கந்தனோடு என்ன காந்தம் " என்ற பாடல் எம்மை நல்லூர்க் கந்தனிடமே அழைத்துச் சென்றது என்றால் அதை யாரும் மறுக்க மாட்டார்கள்.
"அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு " என்பது எமக்குத் தெரிந்தவரை ஒரு இரு வரிக் குறள். இந்த இருவரிக் குறளை ஒரு முழுப் பாடலாக கேட்டது என் வாழ்வில் இதுவே முதல் தடவை. வியந்தேன். பலரும் வியந்தார்கள். அந்தக் குறளுக்கு அணி சேர்த்தாள் ஷோபா. வள்ளுவர் மட்டும் இன்றிருந்து இதனைக் கேட்டிருந்தால் ஆனந்தக் கண்ணீர் வடித்திருப்பார். அவரது குறள் ஷோபாவின் குரலால் வளம் பெற்றது என்றே கூற வேண்டும்.
அடுத்து தனது பேரன் அடிக்கடி பாடும்  " துன்பம் நேர்கையில் யாழெடுத்து நீ இன்பம் சேர்க்க மாட்டாயா " என்ற பாடலை அவருக்கே காணிக்கையாக்கி கண்களில் கண்ணீர் மல்க அமைதியாகப் பாடி பலரது கண்களையும் கலங்க வைத்தாள் பேத்தி. இந்தப் பாடல் பாடி முடியும் வரை அவளது கண்களிலிருந்து கண்ணீர் பெருகிக் கொண்டேயிருந்தது. அவரது ஆத்மா நிச்சயமாக அன்று சாந்தி பெற்றிக்கும் என்பதில் எவ்வித ஐயமுமில்லை.
தொடந்து பாடிய " சம்போ சிவா சம்போ " என்ற பாடலும் பலரதும் மனத்தைக் கவர்ந்தது. ஐயப்பன் பாடல், தில்லானா, திருப்புகழ் என்பவற்றுடன் நிகழ்ச்சி நிறைவு பெற்றது.  பாடல் தெரிவுகள் யாவும் நன்றாக இருந்தது.


ஒரு சங்கீத நிகழ்வை முழு நேரமும் இருந்து பார்க்க முடியுமா என்று சிந்தித்துக் கொண்டு சென்ற எனக்கு நிகழ்வு முடிவு பெற்றதே தெரியவில்லை, ஆச்சரியமாக இருந்தது. நேரம் போனதே தெரியாமல் இசையால் வசமாகி இருந்தது அப்போதுதான் புரிந்தது.
" ஈன்ற பொழுதில் பெரிதுவக்கும் தன் மகனை சான்றோன் எனக் கேட்ட தாய் " என்பதற்கு இணங்க பவானி யும் ஜெயமோகனும் நிச்சயமாக அன்றைய தினம் பெரிதுவந்திருப்பார்கள் . தமக்கும் தமது குடும்பத்திற்கும் ஒரு கலையறிவு கொண்ட மகளைப் பெற்றதில் பெருமை சேர்த்துக் கொண்டனர். பெற்றோர் மட்டுமல்ல அவரது குரு சங்கீதா அய்யருக்கும் நிச்சயமாக ஒரு சபாஷ் சொல்லியே ஆக வேண்டும்.
பக்க வாத்தியக் கலைஞர்கள் வயலின் மோகன் , மிருதங்கம் பிரகாஷ் ஆகியோர் இந்தியாவிலிருந்து வருகை தந்து நிகழ்ச்சியை மேருகூட்டியிருந்தார்கள். எமது உள்ளூர்க் கலைஞர் ஜனகன் இவர்களுக்கு தானும் சளைத்தவரல்ல என்பதை நிரூபித்திருந்தார்.
மொத்தத்தில் ஒரு நல்ல நிகழ்வை பார்த்த திருப்தியுடன் வீடு திரும்பினோம்.  ஷோபா வின் இசை இன்னும் வளர வேண்டும் என வாழ்த்துகிறேன்.


12 comments:

S.Vasantha said...

நல்லதோர் அருமையான நிகழ்வு. ஷோபா வின் குரல் பாடும்போது நன்றாக அமைந்திருந்தது. தந்தையாரைப்போலவே மகளும் பல திறமைகள் கொண்டவராக இருக்கின்றார். வாழ்த்துக்கள்.
பார்த்ததை பகிர்ந்துகொண்ட கலா ஜீவகுமார் அடக்கமாக சங்கீதம் தெரியாது என்று கூறிவிட்டு நன்றாக பதிந்திருக்கிறார் அவருக்கும் வாழ்த்துக்கள்.
சமூக நிகழ்வுகளை வாரம் தோறும் தந்துகொண்டிருக்கும் பத்திரிகை ஆசிரியர்களின் சேவையை மனதார பாராட்டுகிறேன்.

நன்றி

வசந்தா

kirrukan said...

[quote]பிறந்தநாள் வாழ்த்துக்கள்...அடேயப்பா இரண்டு வயசு முடிஞ்சு 3 தொடங்குது.சிட்னி மேடைகளையும் சிட்னி கோயில்களையும் வண்ணப்படத்தில் தரும் டமிழ்முரசுக்கு நன்றிகளும் பாராட்டுக்களும்.[quote]


இந்த விடயத்தைப்பற்றி எமது சமுகம் கொஞ்சம் அக்கறை எடுக்கத்தான் வேண்டும்..

kirrukan said...

[quote]பிறந்தநாள் வாழ்த்துக்கள்...அடேயப்பா இரண்டு வயசு முடிஞ்சு 3 தொடங்குது.சிட்னி மேடைகளையும் சிட்னி கோயில்களையும் வண்ணப்படத்தில் தரும் டமிழ்முரசுக்கு நன்றிகளும் பாராட்டுக்களும்.[quote]

இது தவறுதலாக பதியப்பட்டுவிட்டது..மன்னிக்கவும்.


[quote]சிட்னியில் பல்வேறு நிகழ்வுகள் ஒரே நாளில் நடந்து கொண்டிருக்கும் காரணத்தினால் சிலர் எல்லோருக்கும் தலை காட்ட மண்டபத்தை விட்டு வெளியேறியிருந்ததைக் காணக் கூடியதாயிருந்தது[quote]
இந்த விடயத்தைப்பற்றி எமது சமுகம் கொஞ்சம் அக்கறை எடுக்கத்தான் வேண்டும்..

Anonymous said...

சிட்னியில் பல்வேறு நிகழ்வுகள் ஒரே நாளில் நடந்து கொண்டிருக்கும் காரணத்தினால் சிலர் எல்லோருக்கும் தலை காட்ட மண்டபத்தை விட்டு வெளியேறியிருந்ததைக் காணக் கூடியதாயிருந்தது.
This clearly shows the ignorance and the arrogance of the writer. The Arangetram organizers should be thankful that people spent their valuable time and honoured the invitation. People have many commitments not just other events. They have many reasons to leave half way.
Some people I spoke to said that the standard was not good. The singer was not in Suruthi most of the time, hence they left.



இசையை முறையாகப் பயிலா விட்டாலும்-Hence you are excused for not being able to understand the Suruthi issues.

Anonymous said...

சிட்னியில் பல்வேறு நிகழ்வுகள் ஒரே நாளில் நடந்து கொண்டிருக்கும் காரணத்தினால் சிலர் எல்லோருக்கும் தலை காட்ட மண்டபத்தை விட்டு வெளியேறியிருந்ததைக் காணக் கூடியதாயிருந்தது.
This clearly shows the ignorance and the arrogance of the writer. The Arangetram organizers should be thankful that people spent their valuable time and honoured the invitation. People have many commitments not just other events. They have many reasons to leave half way.
Some people I spoke to said that the standard was not good. The singer was not in Suruthi most of the time, hence they left.



இசையை முறையாகப் பயிலா விட்டாலும்-Dear Writer-you are excused for not being able to understand the Suruthi issues.

Kumar said...

I can clearly see some one who is very jealous about Jeyamohan family writing about her sruthi. That person who couldn't do or frustrated with their kids performance or who is not invited by Dr Jeyamohan can only write like this. They never appreciate a girl who is born and brought up in Australia is producing wonders in tamil.

Ramesh said...

நானும் அந்த அரங்கேற்றத்திற்கு போயிருந்தேன். நன்றாகவே பாடியிருந்தார் ஓருவர்எழுதி இருக்கிறார் யாரோ சொன்னார்களாம் சுருதி சரியில்லை என்று. துணிவு வேண்டும் பிழை இருந்தால் எங்கு பிழை இருந்தது என்பதை முன்வைக்கவேண்டும் சுருதியைப்பற்றி பேசுகின்ற சங்கீத அறிவுள்ளவர் சரியான விடயத்தை முன்வைக்கலாமே. இன்னொருவர் குறிப்பிட்டது போல் காழ்ப்புணர்வுதான் காரணம். வரவுமில்லை பார்க்கவுமில்லை இவர் கேட்டு விட்டு எழுதுகின்றார் அதுவம் பெயர் போடாமல். மறந்திருந்தா பார்க்கும் மர்மம் என்ன அழைப்பு கிடைக்கவில்லையா?

நன்றி
ரமேஸ்

Nadarajah said...

நல்ல நிகழ்வு அதை நல்ல தமிழில் தந்திருக்கிறார் கலா ஜீவகுமார். இவர் இப்படி தமிழ் எழுதுவார் என்று இப்போதான் தெரியும்.தொடர்ந்து எழுதுங்கள்.

நன்றி பணிதொடரட்டும்
நடராஜா

Anonymous said...

Very good

Anonymous said...

Mr.Kumar…I did not comment on the Tamil. All the songs were not in Tamil anyway. I personally think her Tamil was good. Don’t know about the how she was with the other languages she sang in. I don’t think most of us would have understood any other language. Anyway…it is not about WONDERS in Tamil …it is about the suruthi….by the way I was there with my friends. Also, I am not jealous about anyone. What is special about Jeyamohan for us to be jealous. Just because someone is pointing out something that you cannot digest you dont say that they are jealous. wake up mate.

Mr.Ramesh…Just because you quote your name that does not make you any special than those who write anonymously. I can also put my name…. no one will still know me or be bothered. You have put “Ramesh”…who are you…don’t care…we don’t care about who said it but what the content was. On the day they were recording the event. So, now I don’t have to say anything about where the Suruthi was bad and where the sangathi’s did not come out properly. I think she should have polished a lot more before doing the Arangetram. Anyway…the performer can sit with her Guru…go through the tapes and identify the issues and improve. My best wishes to her and her parents who very much encouraged her.
திரு. ரமேஷ் அவர்களே, நான் மறைந்திருந்து மர்மமாக பார்க்கவில்லை. உங்கள் அருகில் இருந்தே பார்த்தேன்.

Arul Rajan said...

ஷோபாவின் கச்சேரி மிகவும் சிறப்பாக இருந்தது என்பது என்னவோ மறுக்கமுடியாத உண்மை. ஆனால் சுருதி இல்லையா , இருந்ததா என்ற கருத்து சொல்ல எனக்கு அறிவு போதாது. ஆகவே நான் அதை பற்றி ஒன்றும் சொல்ல வரவில்லை. அனால் முழுக்க முழுக்க தனி கர்நாடக சங்கீதமாகவே பாடி இருக்காமல், கொஞ்சம் பாரதியார் பாடல், பழைய தெரிந்த பாடல்களாக (துன்பம் நேர்கையில் போன்ற) பாடியிருக்கலாமே என்று எண்ணத் தோன்றுகிறது. வந்த எல்லாருக்குமே சங்கீதம் தெரிந்திருக்க வேண்டும் என்பதில்லையே, இல்லாவிடில் பாதியிலேயே பலர் காணமல் போயிருக்க மாட்டார்கள். ஜெயமோகன் தன்னுடைய சங்கீத அறிவை எல்லோருக்கும் திணிக்க பார்க்கிறார் என்றே

சொல்ல வேண்டும். என்றாலும் அவருக்கும் இனிய குரல் எடுத்து பாடிய ஷோபாவுக்கும் ஒரு பெரிய சபாஷ். Well done

ஷோபா. ஆரம்பத்தில் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தவர் தமிழில் பேசியிருக்கலாம் என்பது உண்மைதான். அல்லது வேறு யாராவது ஒரு இளம் பிள்ளையை தொகுத்தளிக்க விட்டிருக்கலாம்.

அதை விட்டுவிட்டு "சிட்னியில் பல்வேறு நிகழ்வுகள் ஒரே நாளில் நடந்து கொண்டிருக்கும் காரணத்தினால் சிலர் எல்லோருக்கும் தலை காட்ட மண்டபத்தை விட்டு வெளியேறியிருந்ததைக் காணக் கூடியதாயிருந்தது" என்பது வெறும் அபத்தம் திருமதி கலா அவர்களே . மற்றய நிகழ்ச்சி எமது தாய் நாட்டு மக்களுகாக நடந்தது என்பதை மறக்க கூடாது.

எதற்கு கூடிய முக்கியதுவம் கொடுக்க வேண்டும் என்பதை நீங்களும் யோசிக்க வேண்டும்.

Senthil said...

நல்ல சங்கீதம் அரங்கேற்றம் என்றவகையில் நன்றாக பாடியிருந்தார். சில இடங்களில் சுருதி குறைவாக இருந்ததை பார்க்ககூடியதாக இருந்தது. ஆசிரியருக்கும் அது எங்கு என்பது தெரிந்திருக்கும். ஆனால் அது குறையாக கருதமுடியாது. பெரிய வித்துவான்கள் கச்சேரி பண்ணும்போதும் ஏற்படுவதுண்டு. சிறப்பாக தொடர வாழ்த்துக்கள். பார்த்ததை எழுதியவர் குறிப்பிட்டிருந்தார் சங்கீத ஞானம் பெரிதாக இல்லைஎன்று. ஆகவே சாதாரண ஒரு ரசிகனுடைய பார்வையில் அவரின் கருத்தை அழகாக வைத்துள்ளார் அவருக்கும் வாழ்த்துக்கள்.