மெய்நிகர் யாழ்ப்பாணம் - முப்பரிமான பார்வையில் பாடசாலைகள் மற்றும் கோவில்கள்

http://www.jaffna360.com/

Jaffna 360 எனும் ஓர் அரிய முன்னெடுப்பு அற்புதமான நினைவுகளை மீட்டு, மெய்சிலிர்க்க வைக்கின்ற காலத்தின் பதிவென்றே கூறலாம். காலம் என்றால் என்ன? காலத்தை அளக்க முடியுமா? பரிமாணங்கள் உண்டா? இல்லை, இல்லவே இல்லை. கடந்த காலம் மீண்டும் வராது என்பதை தவிர காலம் பற்றி யாதும் கூறமுடியாது. அந்தக்காலத்தின் நினைவுப் பதிவுகளை மெய்நிகர் உலாவாக உங்களுக்கு வீட்டில் இருந்தபடியே பார்ப்பதற்கு வழி சமைக்கின்றது இந்த Jaffna 360.

இது வடமராட்சி,தென்மராட்சி, வலிகாமம் மற்றும் தீவகம் எனும் பிரிவின் கீழ் கோவில்கள்,பாடசாலைகள்,இயற்கை வனப்புகள்,கலாச்சார நினைவுகள் என பல காட்சிகளை நேரில் பார்ப்பது போன்ற உணர்வை அள்ளி வழங்குகிறது. எமது மக்கள் தாய் நாட்டைவிட வெளிநாடுகளிலேயே அதிகம் வாழ்கின்றனர். அதில் எத்தனையோ பேர் தமது இடங்களை பார்க்க முடியாமல் நினைவுகளை பெட்டகத்தில் மூடி படுகின்ற வேதனையும் பரிமாணங்கள் அற்றது. இவை எல்லாவற்றையும் மனதில் கொண்டு எமது தேசத்தின், உங்கள் வாழ்வின் நினைவுச் சின்னங்களை தொழில்நுட்ப வளர்ச்சியின் உதவியினூடு நேரில் பார்ப்பது போன்ற மெய்நிகர் அனுபவத்தை அள்ளி தருகின்றது Jaffna 360.

பட்டம் விட்ட வயல்வெளி, படித்த நல்ல பள்ளிக்கூடம்
தேரிழுத்த கோயிலடி, சைக்கிள் ஓடின மண் புழுதித்தெரு
பக்கத்து ஊர்ச்சந்தை, பாலத்தடி, சந்திக்கடை
பார்த்து அவள் சிரிச்ச பக்கத்து குச்சொழுங்கை

ஊரை விட்டு வந்த பின்னும் உள்ளம் விட்டு போகவில்லை
போட்டுவர ஆசைதான், நிலைமை இன்னும் தேறவில்லை
நேரில போய் நிற்பதுபோல் மெய்நிகராய் கண்டிடலாம்
ஊர்ப்பக்கம் போறதெண்டால் இனி பக்கத்தை பாருங்கள்

No comments: