Tuesday, 06 March 2012
தென்கிழக்கு அவுஸ்திரேலியாவில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கால் நியு சவுத் வேஸ்விலுள்ள வக்கா வக்கா நகரில் இருக்கும் 9000 இற்கும் மேற்பட்டவர்களை அவர்களின் வீடுகளிலிருந்து வெளியேறுமாறு கட்டளை இடப்பட்டுள்ளது. முரும்பிட்கி ஆற்றின் நீர்மட்டம் 10.9 மீற்றராக உயர்வடைந்துள்ளமையினால் நகர் வெள்ளத்தினுள் மூழ்கும் அபாயம் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உயர்வான மேட்டுப் பகுதிகளுக்கு பொத மக்கள் இடம் பெயர பொலிஸ் மற்றும் இராணுவத்தினர் அவரசகால உதவிகளை அவர்களுக்கு செய்துவருவதாக உள்ளூர் ஊடக மொன்று தெரிவித்தது.
அவுஸ்திரேலிய பிராந்தியத்தில் நீண்ட நாட்களாக பெய்து வரும் மழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் 2 பேர் பலியாகியுள்ளனர்.
கிவின்ஸ்லாண்ட் மற்றும் விக்டோரியா பிராந்தியங்களின் பகுதிகளில் முற்றாக சேதமடைந்துள்ளன.
ஆற்றின் நீர்மட்டம் உயர்வடைந்து வருகிறமையாலேயே வாக்கா வாக்கா நகர வாசிகளை நேற்று செவ்வாய்க்கிழமை உடனடியாக உயர்வான பகுதிகளுக்கு இடம் பெயருமாறு அறிவிக்கப்பட்டுள்ள அதேவேளை நீர்மட்டத்தின் அளவை தொடர்ந்தும் கண்காணித்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை உடனடியாக வழங்குமாறு இராணுவ வட்டாரங்களுக்கு பிரதமர் யூலியா கிலாட் உத்தரவிட்டுள்ளார்.
பொலிஸார் ஒவ்வொருவரின் வீடு வீடாகச் சென்று மக்களை நகரை விட்டு வெளியேறுமாறு அறிவுறுதி வருகின்றனர்.
No comments:
Post a Comment