தமிழ் சினிமா


சேவற்கொடி

 திருச்செந்தூர் பகுதியில் இரண்டு சூரசம்ஹாரங்களுக்கு இடையே நடக்கும் நாயகனுக்கும், வில்லனுக்குமிடையேயான நவீன சூரசம்ஹாரம் தான் "சேவற்கொடி" மொத்தபடமும்.
sevarkodi_
கதைப்படி மீன் ஏற்றிச்செல்லும் மினிலாரி டிரைவரான காளி-பவன் தன் தங்கையை அந்த வண்டிக்கும்-மீன் மண்டிக்கும் முதலாளியான சூசை - மணிமாறனுக்கு அவரது விருப்பப்படியே இரண்டாம் தாரமாக கொடுத்து, அந்த மினி லாரியை சொந்தமாக்கி கொள்ள பார்க்கிறார். இத்தருணத்தில் பவனின் தங்கை அவரது காதலருடன் ஓடிப்போக, அவரது சொந்த லாரி ஆசை நிராசை ஆகிறது. தன் தங்கை ஓடவும், தன் ஆசை நிராசையாகவும் காரணம் அதேஊரில் பேன்சி ஸ்டோர் வைத்திருக்கும் ஹீரோ பால எனும் அருண்பாலாஜிதான் எனத் தவறாக கருதும் பவன், அருணின் அம்மாவை லாரி ஏற்றிக்‌ கொன்றுவிட்டு, அதை சவுடாலாக அவரிடமே சொல்கிறார். இதனால் வெகுண்டெழும் அருண் பாலாஜி, பவனை அடித்து துவைத்து நிர்வாணமாக்க, அதில் மானமும்-மரியாதையும் ஒரு சேர போகும் பவன், அருண்பாலாஜியை தீர்த்து கட்ட முடிவெடுத்து தொடர்ந்து தோல்வியை தழுவுகிறார். ஆனாலும் விடாமுயற்சியுடன் வில்லன் பவன், தன் பழிவாங்கும் படலத்தை தொடர, இறுதியில் நீதி வென்றதா? தர்மம் தழைத்ததா...? ஹீரோ உயிர் பிழைத்தாரா...? என்பது க்ளைமாக்ஸ்! இப்படி ஒருபக்கம் ஆக்ஷ்னும், ரியாக்ஷ்னுமாக நகரும் கதையில், மற்றொருபக்கம், ஹீரோவின் லவ்வும், சென்டிமெண்ட்டுமாக படத்தை ஜனரஞ்சமாக நகர்த்தி, ஒரு காதல் கமர்ஷியல் படத்தை கலக்கலாக தந்திருக்கிறார் இயக்குநர் இரா.சுப்பிரமணியன். அதற்காகவே அவரைப் பாராட்டலாம்!
sevarkodi_2

பாலாவாக அருண்பாலாஜி புதுமுக ஹீரோ என்று சொல்ல முடியாத அளவிற்கு பிரமாதமாக நடித்திருக்கிறார். நிஜத்தில் நீச்சல் வீரரான இவர், கலைத்துறையிலும், எதிர்நீச்சல் போட்டு முன்னேறுவார்... என்பதற்கு சேவற்கொடியில் இவரது நடிப்பே சான்று!

sevarkodi_3
கதாநாயகி வள்ளியாக கேரள இறக்குமதி பாமா, ரொம்ப பாந்தம்! நாயகர் நாயகியை விட அதிக முக்கியத்துவம் வாய்ந்த பாத்திரம் பவனுக்கு! வில்லன் காளியாக எத்தனை சொன்னாலும் விளங்காத கேரக்டரில் வெளுத்து வாங்கி, ஹீரோவே காப்பாற்ற நினைத்து, விதி வசத்தால் இறுதியில் இறந்தும் போவது சேவற்கொடிக்கு சிறப்பு சேர்க்கிறது! இவர்கள் தவிர கதாநாயகனின் தந்தையாக "பிதாமகன்" மகாதேவன், தாய் ஸ்ரீரஞ்சனி, நாயகியின் தந்தையாக தவசி, தாயாக பேபி, நாயகரின் போலீஸ் அத்தானாக தயாள், இரண்டாம் கல்யாணத்திற்கு ஆசைப்படும் காளியின் முதலாளியாக வரும் சூசை, பவனின் மினிலாரி கிளினராக சாய் ஜெகன், பவனின் தங்கையாக வரும் ஜானகி என எல்லோரும் பாத்திரமறிந்து பளிச்சிட்டிருப்பது சேவற்கொடிக்கு மேலும் ‌மகுடம் சேர்க்கிறது.

எங்கேயும் எப்போதும் சி.சத்யாவின் "வேலா வேலா..." பாடலும், "வேட்டையை நடத்திவிடு..." பாடலும் வித்தியாசம். சத்யனின் இதமான இசை மாதிரி, பி.செல்லத்துரையின் அழகிய ஒளிப்பதிவும் படத்திற்கு பெரிய பலம்!

சேவற்கொடியின் முதலிலும், முடிவிலும் வரும் சூரசம்ஹார காட்சிகள் தமிழ் சினிமாவில் இதுவரை பாத்திராதது! இதுமாதிரி ஆன்மீக களத்தில் ஆக்ஷ்ன், காமெடி, லவ், சென்டிமெண்ட், சேஸிங் உள்ளிட்டவைகளை ‌கலந்து, வினை விதைத்தவன் வினை அறுப்பான்! எனும் மெஸேஜையும் அழகாக சொல்லியிருக்கும் இயக்குநர் இரா.சுப்ரமணியன், மகா துணிச்சல்காரர் தான்! அவரது துணிச்சலுக்கு தாரளமாக ஒரு ஹேட்ஸ் ஆப் சொல்லலாம்!

ஆக மொத்தத்தில் இரா.சுப்ரமணியனின் எழுத்து, இயக்கத்தில் ஒருசில குறைகள் ஒட்டிக்கொண்டிருந்தாலும், மேற்படி நல்ல விஷயங்களுக்காக அவற்றை தட்டி விட்டு பார்த்தோமேயானால் "சேவற்கொடி" உயரே உயரே பறப்பது உறுதி!

"‌சேவற்கொடி" - "சக்ஸஸ் கொடி"


கழுகு

kazhugu_கொடைக்கானல் தற்கொலைப்பாறை, பள்ளத்தாக்கு பகுதியில் உயிரை மாய்த்துக் கொள்ளும் காதல் ஜோடிகள், கடன்காரர்கள் எக்ஸ்ட்ரா, எக்ஸ்ட்ரா... பிரச்னைக்கு உள்ளானவர்களின் பிணங்களை கீழேயிருந்து தூக்கி வந்து உரியவர்களிடம் உறவினர்களிடம் ஒப்படைத்து கஷ்ட ஜீவனம் நடத்தும் கதாபாத்திரம் ஹீரோ கிருஷ்ணாவினுடையது! டீ-த்தூள் பேக்டரியில் கூலி வேலைக்குப்போகும் கேரக்டர் ஹீரோயின் பிந்து மாதவினுடையது! இந்த இருவருக்குமிடையே எதிர்பாராத தருணத்தில் ஏற்படும் காதல், வில்லன்களாலும், விதிவசத்தாலும் தோல்வியைத் தழுவ, சாவிலாவது ஒன்றாவோம்... என கிருஷ்ணா - பிந்துமாதவி ஜோடியும் தற்கொலை பள்ளத்தாக்கில் சமாதியாவதுதான் "கழுகு" படத்தின் மொத்தக்கதையும்!

ஹீரோ கிருஷ்ணாவின் நடிப்பில் முந்தைய படங்களைக்காட்டிலும் நல்ல முன்னேற்றம்! நண்பர்கள் கருணாஸ், தம்பி ராமையா உள்ளிட்டவர்களுடன் தற்கொலைப் பள்ளத்தாக்கில் உயிரை விடும் பிணங்களைத் தூக்கி வரும் வாலிபராகவே வாழ்ந்திருக்கிறார். பிந்து மாதவியுடனான காதல் காட்சிகளிலும் நண்பர்களை நயவஞ்சகமாக கொன்ற வில்லன் ஜெயப்பிரகாஷ் அண்ட் கோவினருடன் மோதும் ஆக்ஷ்ன் காட்சிகளிலும் பட்டையைக் கிளப்பியிருக்கிறார் கிருஷ்ணா! கீப் கிட் அப் கிருஷ்ணா.
kazhugu_2





















பிந்து மாதவி டீ - பேக்டரி தொழிலாளியாக டல் மேக்-அப்பிலும் டாலடிக்கிறார். பலே பலே! பிந்து மாதவியின் கவர்ச்சிகரமான கண்கள் சில்க் ஸ்மிதாவை ஞாபகப்படுத்துவதும் கழுகு படத்திற்கு கூடுதல் பலம் சேர்க்கும். தன் காதல் தோல்வி அக்காவின் பிணத்தை தூக்கி வரும் கிருஷ்ணாவுடன் இருவருக்கு ஏற்படும் காதலும் காட்சிகளும் அழகாக உயிரோட்டமாக படம் பிடிக்கப்பட்டிருக்கின்றன. இவரது தோழியாக வரும் சுஜிபாலாவும் நச் என்றே தேர்வு!

சுஜிபாலாவின் கணவராகவும், கிருஷ்ணாவின் நண்பராகவும் வரும் கருணாஸ், தம்பி ராமையா, கிருஷ்ணா அண்ட் கோவினரின் காமெடிகள் சிரிக்க மட்டுமல்ல சிந்திக்கவும் சொல்லும் தத்துவ விநாடிகள்! ஆனால் அடிக்கடி அவர்கள் பிணங்களை பீஸ், பீஸ் என்பது வெறுப்பேற்றுகிறது.

kazhugu_3
யுவன் சங்கர் ராஜாவின் பின்னணி இசையும், "ஆம்பளைக்கும் பொம்பளைக்கும் அவசரம்...!" தத்துவப்பாடலும் கழுகு படத்திற்கு பெரும் பலம்! சத்ய சிவாவின் இயக்கத்தில் வாழ்க்கை தத்துவத்தை சொல்லும் கழுகு, ஒருசில காட்சிகளில் தாழப்பறந்தாலும், ஒரு சில காட்சிகளில் உயர உயர பறந்து கழுகு எனம் பெயரை அழகாக காப்பாற்றியிருக்கிறது!

ஆக மொத்தத்தில் "கழுகு" தமிழ் ரசிகர்களின் மனதை கரைக்கும் "மெழுகு!"


மாசி

maasi_வெறும் இன்ஸ்பெக்டராக மட்டுமே இருந்து கொண்டு இண்டர்நேஷனல் டான்-களையும், டன்டனக்கா ஆடச் செய்யும் நேர்மையான போலீஸ் அதிகாரி "மாசி" எனும் ஆக்ஷ்ன் கிங் அர்ஜூன்! கடமை, கண்ணியம், கட்டுப்பாடு என செயல்படும் அர்ஜூன், அதனால் குடும்பம் உள்ளிட்ட ஏராளமான விஷயங்களை இழந்தாலும், அதுபற்றி கவலைப்படாமல், நேர்மை ஒன்றை குறிக்கோளாக அதிரடி பண்ணி அக்யூஸ்ட்டுகளை வெளுத்து வாங்குகிறார்.

ஒரு கட்டத்தில் அவரது நேர்மையே அவரது காக்கிசட்டை யூனிபார்முக்கும் உலை வைக்க, அதில் கொதித்தெலும் அர்ஜூன், இண்டர்‌நேஷனல் தாதா நாகா எனும் பிரதிப் ராவத்தின் போலீஸ் கையாள் போன்று நடித்துக் கொண்டே பாலாசிங், "தூள்" சகுந்தலா, பொன்னம்பலம், சந்தானபாரதி, கோட்டா சீனிவாசராவ், பிரதிப்ராவத் என அரை டஜனுக்கும் மேற்பட்ட போலீஸீலும், வெளியிலும் உள்ள வில்லன்களை போட்டுத்தள்ளுவதுடன் ஹேமா, அர்ச்சனா எனும் இரண்டு நாயகிகளுடன் டூயட் பாடுவதும் தான் மாசி படத்தின் கரு, கதை, களம் எல்லாம்!
maasi_2


















வழக்கமான அர்ஜூன் பட பார்முலா கதைதான் என்றாலும், அதை கலக்கலாக எழுதி, இயக்கி இருக்கும் விதத்தில் கவருகிறார் இயக்குநர் ஜி.கிச்சா!

அர்ஜூன் வழக்கம் போலவே, போலீஸ் அதிகாரியாக நம்பமுடியாத அளவிற்கு புகுந்து விளையாடியிருக்கிறார். நாயகிகள் ஹேமா, அர்ச்சனா தலா இரண்டு டூயட் பாடிப்போவதோடு சரி! ஆக்ஷ்ன் படத்தில் அவர்களுக்கு வேறென்ன வேலை...?!
maasi_3

இண்டர்நேஷனல் வில்லன் தாதவாக பிரதிப்ராவத், பொன்னம்பலம், கோட்டா சீனிவாஸராவ், சந்தானபாரதி, கவுதம், பாலாசிங், "தூள்" சகுந்தலா, மயில்சாமி உள்ளிட்டவர்கள் தங்களை பங்கை சரியாக செய்துள்ளனர்! அதிலும் மயில்சாமி - அர்ஜூன் சம்பந்தப்பட்ட காமெடி காட்சிகள் ஹைலைட்! எஸ்.கே.பூபதியின் ஒளிப்பதிவு, தினாவின் இசை இரண்டும் நச்!

மொத்தத்தில் ஜி.கிச்சாவின் இயக்கத்தில், "மாசி" - "மாஸ்-சி(னிமா)!"




 
 
 

நன்றி தினக்குரல் 

No comments: