உலகச் செய்திகள்

ஈராக்கில் தொடர் குண்டுத் தாக்குதல்கள்: 28 பேர் பலி, 140 பேர் காயம்


நோர்வேயில் பனிப்பாறை சரிவு : 5 சுற்றுலாப் பயணிகள் பலி

மெக்ஸிக்கோவில் புவிநடுக்கம்

மெக்ஸிகோவில் 7.4 மக்னிரியூட் பூகம்பம் ஒபாமாவின் மகள் உயிர் தப்பினார்

அமைச்சர் சொல்ஹெய்ம் பதவி நீக்கம்
ஈராக்கில் தொடர் குண்டுத் தாக்குதல்கள்: 28 பேர் பலி, 140 பேர் காயம்


21/3/2012

ஈராக்கில் அமெரிக்கப் படையினர் நிலைகொண்ட 9 ஆவது வருட ஞாபகார்த்த தினத்தையொட்டி செவ்வாய்க்கிழமை நாடெங்கும் நடத்தப்பட்ட தொடர்குண்டுத் தாக்குதல்களின் குறைந்தது 28 பேர் பலியானதுடன் 140 பேருக்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர்.

இத்தாக்குதல்களுக்கு இதுவரை எந்தவொரு குழுவும் உரிமை கோரவில்லை. எனினும் இத்தாக்குதல்கள் அல்கொய்தா போராளிகளால் மேற்கொள்ளப்பட்டதாக அந்நாட்டு அதிகாரிகள் குற்றஞ்சாட்டுகின்றனர். கர்பலா நகரில் இடம்பெற்ற இரட்டைக்கார் குண்டுத்தாக்குதல்களில் குறைந்தது 13 பேர் பலியாகியுள்ளனர். வட நகரான கிர் குக்கில் பொலிஸ் தலைமையகத்துக்கு அருகில் பிரிதொரு குண்டு தாக்குதலில் 7 பேர் பலியாகியுள்ளனர்.

கர்பலா, கிர்குக், பக்தாத்,ஹிக்லா, திக்ஹித், பெய்ஜி மற்றும் பலுஜர் ஆகிய நகரங்களிலும் குண்டுத் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன. அவற்றில் சில தாக்குதல்கள் அரசாங்க கட்டடங்களை இலக்கு வைத்து நடத்தப்பட்டுள்ளன.

பலுஜா நகரில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவருக்கு உடமையான வீட்டில் போராளிகள் குண்டை பொருத்தி வெடிக்க வைத்ததில் கர்ப்பிணிப் பெண்ணொருவரும் பலியானதுடன் அவரது 6வயது மகள் காயமடைந்துள்ளாள்.

திக்ஹித் நகரில் பாடசாலையொன்றுக்கு வெளியே இடம்பெற்ற குண்டு வெடிப்பில் 4 ஆசிரியர்கள் காயமடைந்துள்ளனர்.

ஹில்லா நகரில் சிறுவர் குற்றவாளிகளை தடுத்து வைப்பதற்கு பயன்பட்டுவந்த நிலையம் ஒன்øற இலக்குவைத்து குண்டுத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

பக்தாத்தில் வெளிநாட்டு அமைச்சு அலுவலகத்தின் நிறுத்திவைக்கப்பட்டிருந்த காரொன்றைப் பயன்படுத்தி நடத்தப்பட்ட குண்டுதாக்குதலில் பலர் காயமடைந்துள்ளனர்.

ஈராக்கில் எதிர்வரும் 29 ஆம் திகதி அரபு லீக் உச்சிமாநாடு நடைபெறுவதற்கு தயாராக உள்ள நிலையிலேயே இந்தத் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன.

ஈராக்கில் அமெரிக்க இராணுவம் 2003 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 20 ஆம் திகதி நிலைகொண்டமை குறிப்பிடத்தக்கது. ஈராக்கிலிருந்து இறுதி தொகுதி அமெரிக்கப் படையினர் வெளியேறுவதற்கு முன்னர் அந்நாட்டில் சுமார் 4500 அமெரிக்கர்களும் 300 துணைப் படையினரும் உயிரிழந்தனர்.

ஈராக்கிலான இறுதித் தொகுதி அமெரிக்க படை வீரர்கள் கடந்த டிசம்பர் மாதம் வெளியேறினர்.
நன்றி வீரகேசரி
 
 
நோர்வேயில் பனிப்பாறை சரிவு : 5 சுற்றுலாப் பயணிகள் பலி
21 /3/2012

வடநோர்வேயில் பனிப்பாறைகள் சரிந்து விழுந்ததில் 5 வெளிநாட்டுப் சுற்றுலாப் பயணிகள் பலியாகியுள்ளனர். பலியானவர்களில் 4 சுவிஸ் பிரஜைகளும் ஒரு பிரான்ஸ் நாட்டவரும் உள்ளடங்குகின்றனர்.

ஆறாவது சுற்றுலாப் பயணி படுகாயமடைந்த நிலையில் பனிப்பாறைகளின் கீழிருந்து மீட்கப்பட்டுள்ளார்.

பனிப்பாறை சரிவுகளின் கீழ் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணியில் நாய்கள் மற்றும் உலங்கு வானூர்திகள் சகிதம் சுமார் 30 மீட்புப் பணியாளர்கள் ஈடுபட்டிருந்தனர்.

திரொம்ஸோ நகரின் கிழக்கே சுமார் 65 கி.மீ. தொலைவிலுள்ள திரொம்ஸ் மாவட்டத்திலுள்ள சொர்ப்மெகெய்ஸா மலைப் பிராந்தியத்தில் திங்கள் மாலை இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளது.

நன்றி வீரகேசரி


மெக்ஸிக்கோவில் புவிநடுக்கம் _


21/3/2012


தென் மெக்ஸிக்கோவில் ஏற்பட்ட பாரிய புவிநடுக்கம் காரணமாக நூற்றுக்கணக்கான வீடுகள் சேதமடைந்துள்ளதுடன் அங்கு வசித்துவந்தவர்கள் அப்பகுதியிலிருந்து வெளியேறியுள்ளனர்.

அமெரிக்க புவியியல் ஆய்வுப்படி இப்புவிநடுக்கம 7.4 ரிச்டர் அளவில் ஏற்பட்டதாகவும் அதன் மையப்புள்ளி கெரீரோ, ஒமெட்டேபெக்கின் ((Ometepec, Guerrero) ) கிழக்கே 25 கிலோமீட்டர்கள் தொலைவில் அமைந்திருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.

எனினும் இப்புவிநடுக்கம் 7.8 ரிச்டர் அளவில் ஏற்பட்டதாக மெக்ஸிகன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மெக்ஸிக்கன் உள்துறை அமைச்சர் அலிஜான்ட்ரோ போய்ரே (Alejandro Poire) இது தொடர்பில் கூறுகையில், குறைந்தது 11 பேர் காயமடைந்துள்ளதாகத் தெரிவித்தார்.

இடம்பெயர்ந்த மக்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை வழங்கும் நடவடிக்கைகளில் மெக்ஸிக்கன் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

இதேவேளை மெக்ஸிக்கோவிற்கு பள்ளி நண்பர்களுடன் சுற்றுலா ஒன்றை மேற்கொண்டு சென்றிருந்த அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவின் மூத்த மகள் மலியா ஒபாமா பாதுகாப்பாக உள்ளதாக அமெரிக்க முதல் பெண்மணி மிச்சேல் ஒபாமாவின் பேச்சாளர் கிறிஸ்டினா தெரிவித்துள்ளார்.
நன்றி வீரகேசரி

மெக்ஸிகோவில் 7.4 மக்னிரியூட் பூகம்பம் ஒபாமாவின் மகள் உயிர் தப்பினார்

Wednesday, 21 March 2012

malia_obama_மெக்ஸிக்கோவின் பசுபிக் கரையோரப் பகுதியான அகாபுல்கோவுக் கருகிலே கடுமையான நிலநடுக்கமொன்று தாக்கியுள்ளது. குஏரெரோ பிராந்தியத்தில் ஒபிரிபேக் கிழக்கில் 15 மைல் (25 கிலோ மீற்றர்) ஆழத்தில் 7.4 மக்னிரியூட் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க பூகோளவியங் திணைக்களம் தெரிவித்துள்ளது.

குஏரெரோ பிரந்தியத்தில் 500 இற்கும் மேற்ப்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ளதாக பிராந்திய ஆளுநர் உள்ளூர் தொலைக்காட்சிக்கு தெரிவித்தார்.

அடுத்தடுத்து ஏற்பட்ட 6 நிலநடுக்கங்களில் இரண்டாவது நிலநடுக்கம் 5.8 மக்னிரியூட் அலகு பதிவாகியுள்ள அதேவேளை 24 மணித்தியாலங்களில் மேலும் நிலநடுக்கம் ஏற்படலாம் என அச்சம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகளவு உடமை சேதங்கள் ஏற்பட்டுள்ள போதிலும் உயிர்தேசம் தொடர்பான விபரங்கள் இதுவரை வெளியாகவில்லை.

மெக்ஸிகோவின் தென்மேற்கு நகரான ஒசாகாவுக்கு பாடசாலை சுற்றுலாவொன்றினை மேற்கொண்டிருந்த அமெரிக்க ஜனாதிபதியின் மகள் மரியா ஒபாமா (வயது 13) நிலநடுக்க அனர்த்தத்திலிருந்து பாதுகாக்கப்பட்டுள்ளதாக வெள்ளை மாளிகை அலுவலகம் தெரிவித்துள்ளது.
நன்றி தினக்குரல்

அமைச்சர் சொல்ஹெய்ம் பதவி நீக்கம்
Friday, 23 March 2012

erik_solheim_லங்கைக்கான நோர்வேயின் முன்னாள் விஷேட தூதுவர் எரிக் சொல்ஹெய்ம் அமைச்சு பதவிகளிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். சொல்ஹெய்ம் வகித்து வந்த சுற்றாடல் மற்றும் வெளிநாட்டு உதவிகள் அமைச்சர் பதவிக்கு வேறொருவரை நியமித்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.


நாட்டின் கிராமப் பகுதியொன்றிற்கு தனது பணி தொடர்பான விஜயமொன்றினை சொல்ஹெய்ம் மேற்கொண்டிருந்த வேளையிலேயே அவரது பதவி நீக்கம் குறித்தான செய்தியை சமத்துவ இடது சாரிக் கட்சியின் தலைவர் அவுடுன் வைபக்கின் சொல்ஹெய்மிடம் கூறியதாக தெரிவிக்கப்படுகின்றது.

சொல்ஹெய்மிடம் இது தொடர்பாக கேட்ட போது, இது தொடர்பாக கருத்துச் சொல்ல ஒன்றுமில்லையெனக் கூறியுள்ளார்.

கட்சியின் புதிய தலைவராக லைபாக்கின் தெரிவு செய்யப்பட்டதைத் தொடர்ந்து அமைச்சரவையில் மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையிலேயே அமைச்சர் பதவியிலிருந்து சொல்ஹெய்ம் நீக்கப்பட்டுள்ளார்.

அனுபவம் மிக்க அமைச்சர்களில் ஒருவரான சொல்ஹெய்ம் 30 வருடங்களாக கட்சியின் செயற்பாட்டாளராக இருந்து வந்துள்ளதுடன், பாராளுமன்ற உறுப்பினர், கட்சித் தலைவர் மற்றும் ஐ.நா.வின் விசேட தூதுவர் உள்ளிட்ட பல பதவிகளையும் வகித்து வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
நன்றி தினக்குரல்

ஈராக்கில் தொடர் குண்டுத் தாக்குதல்கள்: 28 பேர் பலி, 140 பேர் காயம் 

No comments: