ஹோம்புஷ் தமிழ்க் கல்வி நிலையம் வெள்ளி விழாவை கொண்டாடியது

கு கருணாசலதேவா  

சிட்னி ஹோம்புஷ் தமிழ்க் கல்வி நிலையம் சென்ற சனிக்கிழமை மார்ச் மாதம் 24ம் திகதி சிட்னி பாகாய் சென்றரில் தனது வெள்ளி விழாவை சிறப்பாகக் கொண்டாடியது.  இக்கல்வி நிலையத்தை 1987ம் ஆண்டு 30 மாணவர்களுடனும் 4 ஆசிரியர்களுடனும் ஆரம்பித்து வைத்த பெருமை திரு நா கணபதிப்பிள்ளை, திரு சி பாலேந்திரா, திரு சுந்தர் ஈஸ்வரன், திருமதி ஜெயந்தி பாலேந்திரா, திருமதி சத்தியா கருணாகரன் ஆகியோரையும் ஆசிரியர்களாக கடமையாற்றிய திருமதி பத்மாவதி அருமைநாயகம், திருமதி திலகவதி மயில்வாகனம் ஆகியோரையும் சாரும்.

இந்த விழாவில் பிரதம விருந்தினர் திரு திருமதி சிவானந்தா அவர்களும் சிறப்பு விருந்தினர்கள்  ஆஸ்திரேலியா அமைச்சர்கள் , நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.  இவர்கள் சொற்பொழிவு ஆற்றி வெள்ளிவிழாவை சிறப்பித்தார்கள்.  இக்கல்வி நிலையத்தின் வளர்ச்சியில் சேவையாற்றிய ஸ்தாபகர்கள், முன்னாள் தலைவர்கள், முன்னாள் அதிபர்கள், முன்னாள் ஆசிரியர்கள் மற்றும் தொண்டர்கள் யாவரும் கௌரவிக்கப்பட்டார்கள்.

HSC இல் தமிழ் பாடத்தில் சிறந்த புள்ளிகளை பெற்ற மாணவர்களுக்கான பரிசளிப்பு நிகழ்ச்சியும் சிறந்த மாணவர்களுக்கான பரிசளிப்பு நிகழ்ச்சியும் நடைபெற்றன.

இடைவேளைக்குப் பின்னர் வெள்ளிவிழா கீதத்தோடு ஆரம்பித்து பல நாடகங்களும் நடன நிகழ்ச்சியும் நடைபெற்று இரவு 12 மணிக்கு முடிவடைந்தது.


படங்கள் கீழே

படப்பிடிப்பு சோதி





























No comments: