சிட்னியில் உரும்பிராய் இந்துக் கல்லூரியின் 100வது ஆண்டுவிழா
.                                                                                                                    ரகுபரன்
                                              
சென்ற சனிக்கிழமை 16.04.2011 அன்று உரும்பிராய் வாழ் சிட்னி மக்கள் சிட்னியில் லிட்கத்தில்  ஒன்றுகூடி கொண்டாடிய நிகழ்வு இடம் பெற்றிருந்தது. மங்கல விளக்கேற்றி நிகழ்வு ஆரம்பிக்கப்பட்டது. திரு திருமதி சோமசுந்தரம், திரு திருமதி சிவகுருநாதன், திரு திருமதி ஈஸ்வரலிங்கம் ஆகியோர் மங்கல விளக்கை ஏற்றிவைக்க செல்வன் சரவணன் சிவகுமார் தமிழ்வாழ்த்தையும் ஒஸ்ரேலிய கீதத்தையும் பாடினார். அதனைத்தொடர்ந்து உரும்பிராய் இந்துக்கல்லூரியின் கீதத்தை திருமதி கலா இளங்கோ, திருமதி குமுதினி அன்ரனிப்பிள்ளை, திருமதி சாந்தி பாஸ்கரன், திருமதி வாசுகி ஈஸ்வரலிங்கம் திரு சிவகுமார் சிவகுருநாதன் ஆகியோர் இசைத்தனர். பல ஆண்டுகளுக்குப் பின்பு கல்லூரி கீதத்தை சிட்னில் கேட்டது மகிழ்ச்சியாக இருந்தது.                                               
                                                                
                                            

                                            
 தொடர்ந்து திரு சிவகுமார் வந்தவர்களை வரவேற்று வரவேற்புரை வழங்கினார். பாடசாலை பற்றிய நினைவுப் பகிர்வை மூத்த மாணவரும் 1955ம் ஆண்டில் கல்வி பயின்றவருமான திரு பொன்னம்பலம் தம்பிராஜா அவர்கள் பகிர்ந்து கொண்டார். அதைத் தொடர்ந்து நிகழ்ச்சித் தொகுப்பாளர் செ.பாஸ்கரன் பழைய மாணவர்களின் நினைவுகளில் பாடசாலை வாழ்க்கை பற்றிய சுவையான சம்பவங்களை உரையாடல் மூலம் கொண்டுவந்தது சுவாரசியமாக இருந்தது.

அதனைத் தொடர்ந்து காதுக்கினிய பாடல் நிகழ்ச்சி இடம் பெற்றது பல மேடைகளில் பாடிய இளையோர்கள் இதில் பாடினார்கள். இதில் அபிநயனி குகசிறி, கேசிகா அமிர்தலிங்கம், செல்வன் செந்தூரன், சரவணன் சிவகுமார் ஆகியோர் பாடி மகிழ்வித்தார்கள். அதனைத் தொடர்ந்து சரவணன் சிவகுமாரின் கர்நாடக சங்கீதப் பாடலும் பிரசிகா பிரகதீசன் பிறிரிகா பிரகதீசன் சகோதரிகளின் நெஞ்சில் உரமுமின்றி என்ற பாரதி பாடலும் தொடர்ந்து எட்டு வயதான நித்திலன் அரவிந்தனின் தபேலா கச்சேரியும் இடம் பெற்றது.சுவையான இரவு உணவைத் தொடர்ந்து உரும்பிராய் இந்துக்கல்லூரியின் நூறாவது ஆண்டு நிகழ்வு கேக் வெட்டி கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்விற்காக மூத்த மாணவர்களான (ஜம்பதுகளில் பயின்றவர்க ) திரு சிவகெங்க பாலன், திரு தம்பு சரவணமுத்து கனகசபை, திரு பொன்னம்பலம் தம்பிராஜா,திருமதி சிவபாதபுஷ்பம் நாகேந்திரன் , திருமதி கமலா சோமாஸ்கந்தன் , திருமதி துளசி சேனாதிராஜா  ஆகியோர்  அழைக்கப்பட்டு அறுவரும் சேர்ந்து கேக் வெட்டினார்கள். 
தொடர்ந்து அடுத்து வரும் ஆண்டுகளில் என்ன செய்யபோகின்றோம் என்ற கேள்வியோடு வந்த திரு காந்தன் அவர்கள் முதலில் அந்த நாலுபேருக்கு நன்றி என்று நகைச்சுவையாக  கூறி இந்த உரும்பிராய் ஒன்று கூடலை ஒழுங்கு செய்த வாசுகி ஈஸ்வரலிங்கம், ராஜி அக்கா சாந்தி பாஸ்கரன், சிவகுமார் ஆகியோருக்கு நன்றிகூறி  செயற்குழு ஒன்றை  உருவாக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார் வந்திருந்த எல்லோரும் முடிவு செய்து திரு சிவகுமார் தலைமையில் ஏழு பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது. அத்தோடு ஆண்டு தோறும் இந்த ஒன்று கூடல் இடம்பெற வேண்டும் என்றும்  முடிவு செய்யப்பட்டது. நன்றி உரையை திருமதி ராஜி தில்லை நடேசன் அவர்கள் வழங்கினார். தொடர்ந்து சில பாடல்களை செ.பாஸ்கரன் கலா இளங்கோ கேசிகா அமிர்தலிங்கம் செந்தூரன் ஆகியோர் பாடினார்கள் இறுதியாக சில பாடல்களை சரவணன் சிவகுமார் பிரணவன் சிவகுமார் சகோதரர்கள் பாட நிகழ்வு இனிதாக நிறைவுற்றது.
No comments: