கிரிக்கெட் போட்டி


.
அவுஸ்திரேலிய அணிக்கு வெற்றி
முதல் ஒருநாள் போட்டியில் மைக்கேல் கிளார்க்கின் அபார சதம் கைகொடுக்க அவுஸ்திரேலிய அணி 60 ஓட்டங்கள் வித்தியாசத்தில் பங்களாதேஷை வீழ்த்தியது.

பங்களாதேஷ் சென்றுள்ள அவுஸ்திரேலிய அணி 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்று வருகிறது.முதல் போட்டி  திங்கட்கிழமை  ஏப்ரல்  மாதம் 11  ம் திகதி  மிர்பூரில் நடந்தது. நாணயச்சுழற்சியில் வென்ற பங்களாதேஷ் கப்டன் சாகிப் அல் ஹசன் களத்தடுப்பைத் தேர்வு செய்தார். அவுஸ்திரேலிய அணிக்கு வற்சன்,ஹாடின் ஜோடி சுமாரான தொடக்கம் கொடுத்தது. ஹாடின் (10), வற்சன் (37) விரைவில் திரும்பினர். பொண்டிங் 34 ஓட்டங்கள் எடுத்தார். கமரோன் வைற் (20),மைக்கேல் ஹசி (33),நீண்டநேரம் நிலைக்கவில்லை. ஒருபுறம் விக்கெட் சரிந்து கொண்டிருந்தாலும் மறுபுறம் புதிய கப்டன் மைக்கேல் கிளார்க் உறுதியான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.இவர் சிறப்பாக ஆடி 6 ஆவது சதமடித்து (101) திரும்பினார். அவுஸ்திரேலிய அணி 50 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 270 ஓட்டங்களெடுத்தது. சுவோ 3,மொர்டசா 2 விக்கெட் வீழ்த்தினர். எட்டிவிடும் இலக்கை விரட்டிய பங்களாதேஷ் அணி தொடக்கத்திலேயே திணறியது. இம்ருல் கெய்ஸ் (4),ரகிபுல் ஹசன் (7) அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். நபீஸ் டக் அவுட்டானார். சாகிப் அல் ஹசன் (51), தமிம் இக்பால் (62), அரைச்சதமடித்து வெளியேறினர். முஸ்பிகுர் (44*),மகமதுல்லா (28*) கடைசி நேரத்தில் போராடியபோதும் அது வெற்றிக்குப் போதவில்லை. பங்களாதேஷ் அணி 50 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 210 ஓட்டங்கள் மட்டும் எடுத்து தோல்வியடைந்தது.


இரண்டாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் அவுஸ்திரேலிய அணி வெற்றி

டாக்காவில் நடைபெற்ற பங்களாதேஷ் அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் பங்களாதேஷ் எடுத்த 229 ஓட்டங்களை ஷேன் வொட்ஸன் தனி நபராக நின்று 96 பந்துகளில் 185 ஓட்டங்களை விளாசியதோடு ஒருநாள் கிரிக்கெட்டில் 15 சிக்ஸர்களை அடித்து உலக சாதனை புரிந்து  வெற்றிபெற்றுத் தந்தார்.

அவுஸ்திரேலிய 26 ஓவர்களில் 232/1 என்று அபார வெற்றி பெற்றது. இதற்கு முன்னர் மேற்கிந்திய அணியின் சேவியர் மார்ஷல் கனடா அணிக்கு எதிராக ஒருநாள் சர்வதேச கிரிக்கெட்டில் 12 சிக்ஸர்கள் அடித்தே உலக சாதனையை வைத்திருந்தார்.

தற்போது ஷேன் வொட்ஸன் 15 சிக்ஸர்கள் அடித்து சாதனை புரிந்தார்.

முன்னதாக பங்களாதேஷ் அணியில் சஹாரியர் நபீஸ் 56 ஓட்டங்களை எடுக்க மற்றவர்கள் சொதப்ப 88/5 என்று ஆனது. அனால் மஹ்முதுல்லா முஷ்பிகுர் இருவரும் இணைந்து ஸ்கோரை 167 ஓட்டங்களுக்கு உயர்த்தினர்.

முஷ்பிக்குர் ரஹீம் 80 பந்துகளில் 9 பவுண்டரிகள் ஒரு சிக்ஸருடன் 81 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

மஹ்மூதுல்லா 36 ஓட்டங்கள் எடுத்தார். அவுஸ்திரேலிய அணியில் ஜோன்சன் 2 விக்கெட்டுக்களையும் ஸ்மித் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். பங்களாதேஷ் 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 229 ஓட்டங்கள் எடுத்தது.

3வது ஓவரில் கப்டன் ஷாகிபுல் ஹஸன் வொட்ஸனுக்கு முதல் சிக்ஸரை வழங்கினார். அதன் பபறகு ஓயவேயில்லை. அடி என்றால் அடி அப்படியொரு அடி பிறகு அப்துல் ரசாக்கை ஒரு சிக்ஸர் ஷாகிபை மீண்டும் இரண்டு சிக்சர் அடித்து 26 பந்துகளில் 5 பவுண்டரி 6 சிக்சர்களுடன் அரைச்சதம் எடுத்த வொட்சன். அதற்கு மேலும் வாண வேடிக்கை காண்பித்து 69 பந்துகளில் சதம் எட்டினார்.

மெத்யூஹைடன் தென்னாபிரிக்காவுக்கு எதிராக எடுத்த 66 பந்துகளுக்கு எடுத்த சதமே அவுஸ்திரேலிய சதமாக இன்னும் நீடிக்கிறது.

அடுத்த 27 பந்துகளில் மீண்டும் சிக்சர்களையும் பெளண்டரிகளையும் அடிக்க மேலும் 85 ஓட்டங்களைக் குவித்தார் வொட்ஸன்.

ஒரு இன்னிங்ஸில் ஒருவர் அடித்த மொத்த ஓட்டங்களில் அதிக அளவில் பவுண்டரிகள் சிக்சர்கள் மூலம் அந்த விதத்திலும் வொட்சன் உலக சாதனை புரிந்துள்ளார். இவருக்கு முன்னதாக தென் னாபிரிக்க அணி 434 ஓட்டங்களை அவுஸ்திரேலியாவுக்கு எதிராகத் துரத்தும் போது கிப்ஸ் 175 ஓட்டங்களில் 152 ஓட்டங்கள் பெளண்டரிகளும் சிக்சர்களுமாக எடுத்திருந்தார். தற்போது வெட்சன் 150 ஓட்டங்களை அவ்வாறு எடுத்து சாதனை புரிந்தார்.

மறு முனையில் பொண்டிங் 37 ஓட்டங்கள் எடுத்து வெற்றிக்கான பெளண்டரியை அடித்தார்.


பங்களாதேஷ்திற்கு எதிரான தொடரை வென்றது அவுஸ்திரேலியா
3-0


பங்களாதேஷத்துக்கு எதிரான 3வது ஒருநாள் ஆட்டத்தில் அவுஸ்திரேலியா 66 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்த வெற்றியின் மூலம் 3 ஆட்டங்கள் கொண்ட இந்தத் தொடரை 3-0 என்ற கணக்கில் கைப்பற்றியது அவுஸ்திரேலியா. முதலில் ஆடிய அவுஸ்திரேலியா 8 விக்கெட் இழப்புக்கு 361 ரன்கள் குவித்தது. பின்னர் ஆடிய பங்களாதேஷத்தால் 50 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 295 ரன்களே எடுக்க முடிந்தது.

டொஸ் வென்ற அவுஸ்திரேலிய அணி முதலில் துடுப்பெடுத்தாடியது. வாட்சனும், பொண்டிங்கும் ஆட்டத்தைத் தொடங்கினர். வாட்சன் 25 பந்துகளில் 1 சிக்ஸர், 9 பவுண்டரிகளுடன் அரைசதம் அடித்தார். அவர் 72 ரன்களில் ஆட்டமிழந்தார். பொண்டிங் 47 ரன்களில் ஆட்டமிழந்தார்.

இதன் பிறகு ஜோடி சேர்ந்த கப்டன் கிளார்க்-மைக் ஹசி ஜோடி சிறப்பாக ஆடி ரன் சேர்த்தது. கிளார்க் 47 ரன்களில் போல்டு ஆனார். மைக் ஹசி 86 பந்துகளில் 2 சிக்ஸர், 8 பவுண்டரிகளுடன் சதமடித்தார். அவர் 108 ரன்களில் ஆட்டமிழந்தார்.

கடைசி நேரத்தில் அதிரடியாக விளையாடிய ஜான்சன் 2 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகளுடன் 41 ரன்கள் சேர்த்தார். இதனால் அவுஸ்திரேலியா 8 விக்கெட் இழப்புக்கு 361 ரன்கள் குவித்தது.

பின்னர் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணியில் தமிம் அதிரடியாக விளையாடினார். 17 பந்துகளைச் சந்தித்த அவர் 32 ரன்களில் ஆட்டமிழந்தார். பின்னர் ஜோடி சேர்ந்த கயெஸ்-நபீஸ் ஜோடி சிறப்பாக ஆடியது.

கயெஸ் 93 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அவர் 2 சிக்ஸர்கள், 12 பவுண்டரிகளுடன் இந்த ரன்னை எடுத்தார். நபீஸ் 60 ரன்களில் வெளியேறினார். இறுதியில் பங்களாதேஷ் அணி 6 விக்கெட் இழப்புக்கு 295 ரன்கள் எடுத்தது. கடைசி வரை போராடி மஹ்மதுல்லா 68 ரன்களுடன் களத்தில் இருந்தார். அவுஸ்திரேலிய தரப்பில் ஜான்சன் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.No comments: